Published:Updated:

AK61: ரஜினி படத்தின் டைட்டில்! சமுத்திரக்கனியா, ஆதியா? முக்கிய ரோலில் யார்?

அஜித்துடன் ஆதி

ஹெச்.வினோத்தின் இயக்கத்தில் மூன்றாவது முறையாக அஜித் நடித்து வரும் 'ஏகே-61' படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் மும்முரமாக நடந்து வருகிறது

AK61: ரஜினி படத்தின் டைட்டில்! சமுத்திரக்கனியா, ஆதியா? முக்கிய ரோலில் யார்?

ஹெச்.வினோத்தின் இயக்கத்தில் மூன்றாவது முறையாக அஜித் நடித்து வரும் 'ஏகே-61' படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் மும்முரமாக நடந்து வருகிறது

Published:Updated:
அஜித்துடன் ஆதி

AK61 வபடம் சம்பந்தப்பட்ட அப்டேட்களும் தினம் ஒன்றாக வெளிவந்துகொண்டிருக்கிறன. நேற்று அஜித்துடன் நடிகர் ஆதி இணைந்த புகைப்படம் திடீரென வைரல் ஆனது. ஹெச்.வினோத்தின் இயக்கத்தில் மூன்றாவது முறையாக அஜித் நடித்து வரும் 'ஏகே-61' படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் மும்முரமாக நடந்து வருகிறது. மஞ்சுவாரியர், 'ராஜதந்திரம்' வீரா, 'சார்பட்டா பரம்பரை'யில் நடித்த ஜான் கொகேன் ஆகியோர் நடித்து வருவதாகத் தகவல்கள் வந்த நிலையில் இப்போது சமுத்திரகனியும் கமிட் ஆகியிருக்கிறார்.

ஆதி
ஆதி

தெலுங்கில் 'ஆலவைகுந்தபுரம்லு'வின் வெற்றிக்குப்பின் அங்கே வில்லனாகவும், கனமான கதாபாத்திரங்களிலும் கலக்கி வருகிறார் சமுத்திரக்கனி. இப்போது அஜித்தின் படத்தில் முதல்முறையாக இணைந்திருக்கிறார். நெகட்டிவ் ஷேட் அஜித்திற்கு டஃப் கொடுக்கும் வில்லனாக சமுத்திரக்கனி நடிப்பதாகத் தகவல். இந்நிலையில் ஆதியும் படத்தில் இணைந்திருப்பதாக நேற்று தகவல் பரவியது.

ஆதி இப்போது தெலுங்கில் லிங்குசாமி இயக்கி வரும் 'தி வாரியர்' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். அதில் ராம் தான் ஹீரோ. லிங்குசாமியின் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பும் அஜித்-61 படத்தின் படப்பிடிப்பும் ராமோஜிராவ் தளத்தில் அருகருகே நடந்து வருவதாகவும், படப்பிடிப்பு இடைவேளையின் போது ஆதி சந்தித்ததாகவும் சொல்கிறார்கள். ஆதியின் திருமணம் வருகிற 18-ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதற்கான திருமண அழைப்பிதழை அஜித்திடம் அவர் வழங்கியதாகச் சொல்கிறார்கள்.

இதற்கிடையே AK61 படத்திற்கு ரஜினி நடித்த 'வீரா' படத்தின் டைட்டிலை வைக்க உள்ளதாகவும் தகவல் கிளம்பியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism