Published:Updated:

அக்‌ஷரா ஹாசன் நடிக்கும் 'ஃபிங்கர்டிப்' வெப் சீரிஸ்!

Akshara Haasan
Akshara Haasan

தனுஷ் நடிப்பில் வெளியான 'ஷமிதாப்' படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர், அக்‌ஷரா ஹாசன். அதன் பின்னர் அஜித் - சிவா காம்போவில் வெளிவந்த 'விவேகம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கும் அறிமுகமானார்.

சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான படம், 'கடாரம் கொண்டான்'. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் அக்‌ஷராவின் நடிப்புக்கு பாசிடிவாக விமர்சனங்கள் வந்தன. அதுமட்டுமன்றி நாசரின் மகனான அபி ஹசன் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தற்போது இயக்குநர் விஷ்ணு வர்தன் தயாரிக்கும் 'ஃபிங்கர்டிப்' (Fingertip) என்ற வெப் சீரிஸில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார், அக்‌ஷரா ஹாசன்.

அக்‌ஷரா ஹாசன்
அக்‌ஷரா ஹாசன்
Fingertip Series

சமூக வலைதளங்களை வைத்து த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்த சீரிஸை, ஷிவாகர் எனும் அறிமுக இயக்குநர் இயக்குகிறார். மேலும், அஷ்வின், சுனைனா, காய்த்ரி, மதுசுதன் போன்றவர்களும் இதில் நடிக்கின்றர். சீரிஸின் டிரெய்லரைப் பார்க்கும்போது ஆன்லைன் டேட்டிங் அப்ளிகேஷன்களை வைத்து படத்தின் கதை நகர்வதாகத் தெரிகிறது. வரும் ஆகஸ்ட் 21-ம் தேதியிலிருந்து 'ஜீ5'-ல் இதன் ஒவ்வொரு எபிசோடும் ஒளிபரப்பாக இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு