Published:Updated:

வெங்கட் பிரபுவின் `ஸ்டாக் தீர்ந்துபோச்சு... சேஃப்ட்டி முக்கியம்!' - சோஷியல் மீடியா ரவுண்ட் அப்

ஐஷ்வர்யா ராய்#சோஷியல் மீடியா ரவுண்டப்!
ஐஷ்வர்யா ராய்#சோஷியல் மீடியா ரவுண்டப்!

லாக்டெளனில் பரபரப்பாக இருக்கும் ஒரே இடம், சோஷியல் மீடியாதான். பிரபலங்கள் அங்கே ஷேர் செய்யும் சுவாரஸ்யங்கள், இங்கே உங்கள் பார்வைக்கு. #சோஷியல் மீடியா ரவுண்டப்!

கொரோனா சூழலில், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது சேவையாற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா ஓவியம் ஒன்றை வரைந்துள்ளார். ’கொரோனாவை எதிர்க்கும் வீரர்களுக்கு என் மகளின் அன்பும் நன்றியும்’ என்ற கேப்ஷனோடு இந்த ஓவியத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஐஷ்வர்யா.

ரசிகர்களும் கீழே கமென்ட்டில், தங்கள் கொரோனோ பாதுகாப்பு செய்தியைப் பதிவிட்டு வருகின்றனர்.

Rambha with family
Rambha with family

இசையமைப்பாளராகப் பல நல்ல பாடல்களைத் தந்த விஜய் ஆண்டனி ‘நான்’ படம் மூலம் தமிழ்த்திரையுலகில் ஹீரோவாகவும் அறிமுகமானார். விமர்சன ரீதியாக இவரது படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றதையடுத்து, இந்த வருடம் ‘தமிழரசன்’, ‘காக்கி’, ‘அக்னிச்சிறகுகள்’ ஆகிய மூன்று படங்களில் நடித்து வந்தார். இந்த மூன்று படங்களுமே இந்த வருடம் ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனாவால் சினிமா பணிகள் அனைத்தும் முடக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாகிறது. நிலைமை சரியானாலுமே, தியேட்டரில் படங்கள் எப்போது ரிலீஸாகும் எனத் தெரியாமல் இருக்கிறது. இந்தச் சூழலில், தான் நடிக்க ஒப்பந்தமான ‘தமிழரசன்’, ‘காக்கி’, ‘அக்னிச்சிறகுகள்’ ஆகிய படங்களில் தனக்கான சம்பளத்தில் 25% குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார் விஜய் ஆண்டனி. இதன் மூலம் நிலைமை சரியானதும் பட்ஜெட்டைக் குறைத்து, எந்தவிதமான சிரமமின்றிப் படத்தை சீக்கிரம் ரிலீஸ் செய்ய முடியும் என்கிறார் விஜய் ஆண்டனி.

விஜய் ஆண்டனியின் முடிவை வரவேற்றுள்ள தயாரிப்பாளர்கள், ‘தயாரிப்பாளர்களின் சிரமத்தைப் புரிந்துகொண்டு விஜய் ஆண்டனி எடுத்துள்ள முன்னுதாரண முடிவு வரவேற்கத்தக்கது’ எனப் பாராட்டியுள்ளனர்.

Keerthy Suresh
Keerthy Suresh

ஃபிட்னெஸில் ஆர்வம் கொண்டவரான நடிகை ரகுல் ப்ரீத் சிங், இந்த லாக்டெளன் காலத்தில் அதை இன்னும் தீவிரப்படுத்தியிருக்கிறார். வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள், சரியான உணவு வகைகளை எடுத்துக்கொள்வதன் முக்கியத்துவம் என வீடியோக்களையும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்துவருகிறார்.

சமீபத்தில், இவர் தனது சகோதரருடன் வீட்டில் இருந்தபடியே நாஸ்டால்ஜியா விளையாட்டுகளை விளையாடி வெளியிட்ட வீடியோ செம வைரல்.

pa ranjith
pa ranjith

கொரோனா காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட 144 தடையுத்தரவை பச்சை, ஆரஞ்சு, சிவப்பு என மண்டல வாரியாக சில நிபந்தனைகளுடன் தளர்த்தியுள்ளது அரசு. இதில் வரும் 7-ம் தேதி முதல் ஒயின் ஷாப்புகளும் திறக்கப்படும் என அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

இது குறித்து இயக்குநர் வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், ’இனி ஒயின் ஷாப்புகள் கொரோனா மையமாக மாறும் வாய்ப்புகள் அதிகமாகும். எனக்கும் ஸ்டாக் தீர்ந்து பல நாள் ஆச்சு. ஆனாலும், சேஃப்டி முக்கியம்’ என ட்வீட் செய்துள்ளார்.

Athulya Ravi
Athulya Ravi

கொரோனா விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பொருட்டு, மும்பை தாராவியில் உள்ள ரேப்பர்ஸூடன் இசை மூலம் கைக்கோத்துள்ளனர் பாலிவுட் நட்சத்திரங்கள் அக்‌ஷய் குமார் மற்றும் அஜய் தேவகன். இவர்கள் மட்டுமல்லாது அதுல் குல்கர்னி, ராணா டகுபதி ஆகியோரும் ரேப்பர்ஸூடன் கொரோனா விழிப்புணர்வு பாடலுக்காக இணைந்துள்ளனர்.

மக்கள் அடர்த்தி மிகுந்த தாராவி கொரோனாவால் எப்படியிருக்கிறது எனவும், இதுபோல உலகின் மற்ற பகுதிகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தனிமனிதனாக ஒவ்வொருவரும் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் எனவும் அதில் பாடப்பட்டுள்ளது. இந்தியில் ஆரம்பிக்கும் பாடல் இறுதியில் தமிழில் முடிகிறது. ’கல்லி கேங்’ பாய்ஸ் இந்தப் பாடலைத் தங்களது யூ-டியூப் சேனலில் வெளியிட்டுள்ளனர்.

View this post on Instagram

#tuesday #pic ⭐️ #no #makeup

A post shared by Anjali (@yours_anjali) on

அடுத்த கட்டுரைக்கு