Election bannerElection banner
Published:Updated:

``ஒண்ணு உயிரைக் கொடுப்பாங்க; இல்லைனா, உயிரை எடுப்பாங்க அமலாபால்!'' - `ஆடை' ரத்னகுமார்

Amala Paul - Rathna Kumar
Amala Paul - Rathna Kumar

நடிகை அமலா பால் நடிப்பில் `ஆடை' படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்தப் படத்தின் டீசரை இதுவரைக்கும் 7.5 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். இயக்குநர் ரத்னகுமாரிடம் பேசியதிலிருந்து...

`ஆடை' படத்தோட ஸ்க்ரிப்ட் எப்படி உருவானது?

நிறைய உண்மைக் கதைகளோட தொகுப்புதான் இந்தக் கதை. செவிவழியா கேட்டது, நிறைய பத்திரிகைகளில் படிச்சது இதெல்லாம்தான். டாக்குமென்ட்ரியா எடுக்கலாம்னு நினைச்சேன். அப்புறம் அதுக்கும் கமர்ஷியல் எலிமென்ட் இருந்தா மட்டும்தான் ஆடியன்ஸூக்குப் போய் சேரும். அதனாலதான் இதை மக்கள் ரசிக்கிற மாதிரியான ஒரு படமாவே எடுக்கலாம்னு முடிவு பண்ணி `ஆடை' படத்தை உருவாக்கினேன். சீரியஸான ஒரு கதையை ஜனரஞ்சகமா உருவாக்கலாம்னுதான் முடிவு பண்ணி படம் எடுத்தேன். இந்தப் படத்துக்கு இதுதான் ஒரு ஜானர்னு குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. டார்க் ஹூயூமர் இருக்கிற த்ரில்லர் போர்ஷன்தான் படம்.

ஆடை
ஆடை

அமலாபால் எப்படி கதைக்குள்ளே வந்தாங்க?

ஸ்க்ரிப்ட் எழுதும் போது யாரை நடிக்க வைக்கலாம்ங்கிற ஐடியாவே இல்லை. முடிச்சிட்டு யார்கிட்ட சொல்லலாம்னு யோசிச்சப்போ அமலாபால் நினைவுக்கு வந்தாங்க. டஸ்க்கி லுக்குல இருக்கிற ஒரு பொண்ணு கதைக்கு தேவைப்பட்டாங்க. அப்படிப்பட்ட லுக்குல இருக்கிறவங்க தமிழ் சினிமாவுல இருக்கிறது குறைவுதான். அமலாபால் மேடம்கிட்ட அப்படியொரு லுக்கு இருக்கும். அவங்க நம்ம பொண்ணு அப்படிங்கிற ஃபீல் உருவாகும். முதலில் தயாரிப்பாளர்கிட்ட சொன்னேன். இந்தக் கதையை எல்லார்கிட்டயும் என்னால கொண்டு போக முடியாது. ஒரு ஹீரோயினுக்கு ரொம்பப் பிடிச்சிருந்தா மட்டும்தான் அவங்க முழு ஈடுபாட்டோட பண்ணுவாங்க.

முதலில் அமலாபால்கிட்ட சொல்றேன். அவங்க முடியாதுனு சொல்லிட்டா படம் பண்ண வேண்டாம்னு சொல்லிட்டேன். கதையைக் கேட்குறவங்க இதெல்லாம் எதுக்கு வேண்டாம்னு சொல்லிட்டா கதையோட அழகே கெட்டுறும். ஆனா, அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. 'காமினி'ங்கிற பெயரில் நடிச்சிருக்காங்க.

முதலில் நான் எடுத்த `மேயாத மான்' படத்தைப் பார்க்காம அமலா அவங்க சொல்றவங்களை டெக்னிக்கல் டீமா வெச்சுக்கலாம்னு நினைச்சாங்க. ஒவ்வொரு முறையும் என்னோட முதல் படத்தைப் பார்த்திருங்க பார்த்திருங்கனு சொன்னேன். பார்த்ததுக்குப் பிறகு சொன்ன டீம்கே ஓகே சொல்லிட்டாங்க.
இயக்குநர் ரத்னகுமார்
அமலா பால்
அமலா பால்

'மேயாத மான்', 'ஆடை' ரெண்டுமே வித்தியாசமான ஜானரில் பயணிக்குது இல்லையா?

மொத்தமா ரெண்டுமே வேற. 'மேயாத மான்' படத்துல இருந்த ரிலேஷன்ஷிப் டிராமா இதுல சுத்தமா இருக்காது. விவேக் பிரசன்னாவும், இசையமைப்பாளர் பிரதீப்பும் 'ஆடை' படத்துல இருக்காங்க. தொகுப்பாளினி ரம்யா மற்றும் விவேக் பிரசன்னா இவங்க ரெண்டு பேரும் அமலாபாலோட நண்பர்கள் கேரக்டரில் நடிச்சிருக்காங்க.

அமலா பால்
அமலா பால்

படத்தோட டீசர் பார்த்தவங்களுக்குப் பெரிய பிரமிப்பைக் கொடுத்து இருக்கே?

இதுக்கு முக்கிய காரணம் அமலாபால் முன்னாடி பண்ணுன படங்களும், நான் பண்ணுன படமும்தான். அவங்களுடைய ஆஃப் ஸ்கிரீன் இமேஜ் வெச்சுக்கிட்டு நிறைய பேர் அவங்களைப் பற்றிக் குறைகள் சொல்லிட்டு இருக்காங்க. ஆனா, இந்தப் படம் கண்டிப்பா அந்த இமேஜை மாற்றும். முக்கியமா, எங்க ரெண்டு பேர் கூட்டணியில் இப்படியொரு படம் ரொம்ப புதுசு. அதனால, நிறைய எதிர்பார்ப்புகள் டீசர் பார்த்தவங்களுக்கு இருந்திருக்கும்.

படத்தோட டீசரை பாலிவுட் நடிகர் கரண் ஜோஹர் வெளியிட்டிருந்தாரே?

அமலா பால இந்தியில் ஒரு படம் பண்ற மாதிரி இருந்திருக்கு. அப்போதான் கரண் ஜோஹர் சார் அவங்களுக்குப் பழக்கம். அதனால டீசரைப் பார்த்த கரண் ஜோஹர் அவருக்குப் பிடிச்சிருந்தனால டீசரை அவரே ரிலீஸ் பண்றேன்னு சொல்லிட்டார். அதுக்குப் பிறகு நிறைய சினிமா பிரபலங்கள்கூட டீசரை ட்வீட் பண்ணியிருந்தாங்க.

கரண் ஜோஹர்
கரண் ஜோஹர்

அமலாபால் இந்தப் படத்துல நிர்வாணத் தோற்றத்தில் நடிச்சிருக்காங்களா?

ஆமா! ஆனா, காட்சிகள் திரையில் பார்க்கும் போது ரொம்ப ஓப்பனா இருக்காது. மறைமுகமாதான் இருக்கும். மொத்தத்தில் திரையில் பார்க்கிறப்போ நாகரிகமான படமா இருக்கும்.

சென்சார் போர்டு 'A' சான்றிதழ் படத்துக்குக் கொடுத்திருக்காங்களே?

ரொம்ப சென்சிட்டிவ்வாகத்தான் சென்சார் போர்டு இருந்தாங்க. ஆனா, அவங்க என்ன நினைச்சாங்கனா நம்ம பார்க்கிற கண்ணோட்டத்திலேயே ஆடியன்ஸ் பார்ப்பாங்கனு சொல்ல முடியாது. படத்துல நிறைய வன்முறைகள் இருக்கு. அதனாலதான் எங்களுக்குனு சில விதிமுறைகள் வெச்சிருக்கோம்னு சொன்னாங்க. 'A' சான்றிதழ் கொடுக்கிறனால உங்களுக்கு ஏதாவது பிரச்னைனா சொல்லுங்க படத்தோட காட்சிகள் பற்றிப் பேசலாம்னு சொன்னாங்க. சென்சார் போர்டு ஆட்கள் க்ரியேட்டர்ஸ் எல்லாரையும் கொல்றாங்கனு கண்டிப்பா சொல்ல முடியாது. அவங்கதான் நிறைய ஃபெஸ்ட்டிவலுக்கு படத்தை அனுப்புங்கனு பரிந்துரை செய்தார்கள். முக்கியமா சென்சார் போர்டு தலைவரா ஒரு பெண் இருக்கிறனால படத்தைப் புரிஞ்சிக்கிட்டாங்க. நிறைய ஒத்துழைப்பு கொடுத்தாங்க மீனாட்சி மேடம்.

அமலா பால்
அமலா பால்

முதல் படத்தைவிட ஓர் இயக்குநருக்கு இரண்டாவது படம் ரொம்ப முக்கியம். எப்படிப்பட்ட ஒரு தைரியத்துல 'ஆடை' மாதிரியான கதையைக் கையிலே எடுத்தீங்க?

ஒரே மாதிரி படங்கள் பண்ணிதான் நிறைய பேர் தோற்று போறாங்க. அதுக்கு பண்ணாததை பண்ணி தோற்கலாம்னு நினைச்சேன். என்னால இன்னோரு 'மேயாத மான்' படம் பண்ண முடியாது. அதே மாதிரி 'ஆடை'யும் பண்ணமுடியாது. என்கிட்ட இருக்கிற அனுபவத்துல ஏதாவதொரு ஸ்க்ரிப்ட் ஓகே ஆகிரும். அதுக்கு மேலே எந்தவொரு ஸ்க்ரிப்ட்டும் கையிலே இருக்காது. என்னால ஒரு ஸ்க்ரிப்ட்க்குள்ளே என்ன பண்ண முடியுமோ அதைப் பண்ணி முடிச்சிருவேன்.

குறிப்பா அமலாபால் மேடம்கிட்ட கதை சொல்லலாம்னு நினைச்சிட்டு இருந்தப்போ நிறைய பேர் அவங்க கொஞ்சம் டார்ச்சர் அப்படினு சொன்னாங்க.
இயக்குநர் ரத்னகுமார்
Amala Paul
Amala Paul

இந்தப் படத்தைப் பொறுத்தவரைக்கும் எந்தவொரு விஷயம் சவலா இருந்தது?

சினி சவுண்ட்ஸ்தான். ஏன்னா, நடமாட்டமே இல்லாத ஒரு இடத்தை காட்டணும். அங்கே வெளி நபர்கள் யாரும் இல்லைனாலும் பக்கத்து பில்டிங்ல டைல்ஸ் வேலைகள் போயிட்டு இருக்கும். அமலா பால் ஓடி வரும்போது ஸ்டெடி கேமராவை வெச்சு சூட் பண்ற ஒளிப்பதிவாளரும் அவங்ககூடவே சேர்ந்து ஓடி வருவாங்க. அப்போ அவருடைய ஷூ சவுண்ட்ஸ் கேட்கும். அதனால நுனி காலில் ஓட ஆரம்பிச்சிட்டார். டிராலியை வெச்சுகூட ஒரு ஷாட் எடுக்கமுடியல. ஏன்னா, வீல் சுத்துற சத்தம் கேட்டுட்டே இருக்கும். சினி சவுண்ட்ஸ்ல ஷூட் பண்ணும்போது இவ்வளவு கஷ்டம் இருக்குனு அங்கே போனதுக்கு அப்புறம்தான் தெரிய வந்தது. கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் எடுத்தோம்.

சென்சார் போர்டு தலைவரா ஒரு பெண் இருக்கிறனால படத்தைப் புரிஞ்சிக்கிட்டாங்க. நிறைய ஒத்துழைப்பு கொடுத்தாங்க மீனாட்சி மேடம்.
இயக்குநர் ரத்னகுமார்
Amala Paul - Rathna Kumar
Amala Paul - Rathna Kumar

அமலா பால்கூட வேலைப் பார்த்த அனுபவம்?

குறிப்பா அமலாபால் மேடம்கிட்ட கதை சொல்லலாம்னு நினைச்சிட்டு இருந்தப்போ நிறைய பேர் அவங்க கொஞ்சம் டார்ச்சர் அப்படினு சொன்னாங்க. ஆனா, நான் பார்த்த வரைக்கும் அவங்க அப்படி கிடையாது. நல்ல வரணும்னுதான் டார்ச்சர் பண்ணுவாங்க. ஒரு விஷயம் அவங்களுக்குப் பிடிச்சிருச்சுனா உயிரைக் கொடுப்பாங்க. அதே நேரத்துல பிடிக்கலனா உயிரை எடுப்பாங்க. ரொம்ப காயங்களெல்லாம் வாங்கி படத்துக்காக 7 கிலோ வரைக்கும் எடையைக் குறைத்து சிரமம்பட்டு நடிச்சாங்க. பீச் ரோட்ல பைக் ஓட்டுனாங்க. ''

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு