Published:Updated:

``அதுதான் பெண்ணியம்னா; அப்படிப்பட்ட பெண்ணியத்தை நான் பேசலை!’’ - அமலாபால்

அமலா பால்
அமலா பால்

`மைனா' படத்துக்குப் பிறகு 9 வருடங்கள் கழித்து உண்மையான காதலை ரசிகர்களிடம் பார்க்கிறேன். சில படங்கள் வெற்றியடையும், என்னோட நடிப்பு நல்லாயிருக்கும்னு நிறைய பேர் சொல்லுவாங்க. ஆனா, அதெல்லாம் பொய். `ஆடை' படத்துக்காக எனக்கு வந்த விமர்சனங்கள், அன்புதான் உண்மை.

பல பிரச்னைகளுக்கு இடையே `ஆடை' திரைப்படம் ரிலீஸானது. ரிலீஸுக்குப் பிறகு உங்களுடைய மனநிலை எப்படியிருக்கு?

``படம் ரிலீஸாகுறதுக்கு முன்னாடி நாள் வரைக்கும் ஏதோ பிரச்னை நடந்துக்கிட்டு இருக்குனு தெரியும். `ஆடை' ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸான தேதியிலிருந்தே பெரிய ஆர்வத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியது. படத்தோட ரிலீஸுக்கு முன்னாடியே ஏகப்பட்ட பிசினஸ் படத்துக்காக நடந்தது. ரத்னாவுடைய இரண்டாவது படம், என்னோட படம் அப்படினு எந்தவொரு காரணத்துக்காகவும் படம் ரிலீஸ் ஆகுறது தள்ளிப் போகல. ரிலீஸ் தேதி கிடைக்குறதே இங்கே ரொம்ப கஷ்டம். `ஆடை' ரிலீஸுக்காக கொடுத்த தேதியை விட்டுட்டா அடுத்த வாரம் வேறொரு படம் வந்துரும். அஜித் சாரோட படம் அடுத்த மாதம் ரிலீஸாகுது. நிறைய மனஅழுத்தம் எங்களுக்குள்ளே உருவாக ஆரம்பிச்சிருச்சு. இந்தப் படத்தை ரிலீஸ் செய்றதுக்காக நாலு நாள் இரவு ரத்னகுமார் தூங்கலை. எப்போ அவரை நான் பார்த்தாலும் டப்பிங் வேலைகளில் இருப்பார். சோர்வாதான் அவர் முகம் இருக்கும். கிடைக்குற இடத்துல ஒரு ஓரமா படுத்து தூங்கிட்டிருப்பார்.

தமிழ் சினிமாவுல இப்போ இருக்கிற டிரெண்ட்னு பார்த்தா, படம் பிரச்னை ஆகிதான் ரிலீஸ் ஆகுது. அதனால `ஆடை' ரிலீஸ் ஆகிரும்னு நினைச்சிட்டிருந்தோம். ஆனா, அடுத்தநாள் பார்த்தா படம் ரிலீஸ் ஆகல. நிறைய பேர் இந்தப் படத்துக்காக உழைச்சிருக்காங்க. ஆனா, ரிலீஸாகாம போனதுக்கு காரணம் நாங்க இல்லை. தயாரிப்பாளருடைய வேறொரு படத்துல ஏற்பட்ட பிரச்னை. இது எல்லாத்தையும் `ஆடை' படத்துல முடிவுக்கு கொண்டு வரணும்னு நினைக்குறாங்க. ஜெமினி லேப்புல படம் சம்பந்தமா பஞ்சாயத்து போயிட்டிருந்தது. ஆனா, அங்கயிருக்கிற யாரும் படம் ரிலீஸ் ஆகணும்ங்கிற அக்கறையில் பேசுற மாதிரி தெரியல. இந்தப் படத்துக்காக வந்த பிரச்னைக்காக நான் யாரையாவது குறை சொல்லணும்னா, படத்தோட தயாரிப்பாளர் சுப்புவைத்தான் சொல்லுவேன். அவர் நல்ல தயாரிப்பாளர்தான். இந்தப் படம் பண்றதுக்கு அவர்தான் முதலில் முன்வந்தார். நிறைய எனர்ஜி கொடுத்தார். ஆனா, இதெல்லாம் தாண்டி கடைசி நேரம் வரைக்கும் இந்தப் பிரச்னையை ஏன் கொண்டுவந்தார்னு தெரியல. ஒரு வாரத்துக்கு முன்னாடியே முடிச்சிருக்கலாம். இந்தப் படத்தை பொறுத்தவரைக்கும் ஒரு நடிகையா நடிச்சு கொடுத்ததைவிட என்னோட வேலை முடியலை.’’

படத்துல பெண்ணியம் பற்றி சொல்லியிருந்தீங்களே?

``அதுதான் பெண்ணியம்னா; அப்படிப்பட்ட பெண்ணியத்தை நான் பேசலை!’’ - அமலாபால்

``ஒரு பெண்ணியவாதியா இருக்கிறது தப்பில்லை. பெண்கள் தங்களுடைய உரிமைக்காக போராடுறதும், சண்டை போடுறதும் தப்பில்லை. ஆனா, பெண்ணியம் பற்றிய புரிதல் இல்லாமல் அது தப்பா போகிறக்கூடாது. எனக்கு காதல் தோல்வி ஏற்பட்டிருக்கு, அவன் என்னை ஏமாத்திட்டான். அதனால ஆண்களை வெறுக்கிறேன். இதனால, நானொரு பெண்ணியவாதினு சொல்றது தப்பு. அப்படிப்பட்ட பெண்ணியத்தை நான் பேசல.’’

படத்துக்கு `ஆடை'னு பேர் வெச்சிட்டு ஆடையே இல்லாம நடிச்சிருக்கீங்களேனு கமென்ட் கேட்டப்போ உங்களுடைய ரியாக்‌ஷன் என்னவா இருந்தது?

``அதுதான் பெண்ணியம்னா; அப்படிப்பட்ட பெண்ணியத்தை நான் பேசலை!’’ - அமலாபால்

``இதை எதிர்பார்த்தேன். படத்தோட ஷூட்டிங் ஆரம்பமான நாளிலிருந்தே நிறைய சர்ச்சையான பேச்சு படத்தைப் பற்றி வந்துக்கிட்டுதான் இருந்தது. படம் ரிலீஸானதுக்குப் பிறகு படம் பார்த்துட்டு நிறைய பேர் இந்தப் படத்துக்கு ஏன் `ஏ' சான்றிதழ் கொடுத்தாங்க. `யு/ஏ' கொடுத்திருக்கலாமே. குடும்பத்தோட பார்க்கலாம்னு சொன்னாங்க. படத்தோட டீசர் ரிலீஸுக்கு முன்னாடி ரத்னா, `get ready to face the world'னு மெசேஜ் பண்ணியிருந்தார். எங்களுக்கு என்ன குறிக்கோள் இருந்ததுனு படம் பார்த்ததுக்குப் பிறகு ஆடியன்ஸுக்குத் தெரிஞ்சிருக்கும். படத்துக்கு இதைவிட பெஸ்ட்டான ஃபர்ஸ்ட்லுக், டீசர் கொடுத்திருக்க முடியாது. இதை வேற மாதிரியான படம்னு சொல்லி ஆடியன்ஸ் யாரையும் ஏமாத்தல.’’

ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா?

``கண்டிப்பா இல்லை. நல்ல கதை இருக்கிற படங்களில் நடிப்பேன். அதாவது கதைதான் ஹீரோனு இருக்கிற சப்ஜெக்ட்டா தேர்ந்தெடுப்பேன்.’’

அடுத்த கட்டுரைக்கு