Published:Updated:

அமலா பாலுடன் முதன்முறையாக ஜோடி சேரும் விஜய்சேதுபதி! #VSP33

அலாவுதின் ஹுசைன்

விஜய் சேதுபதி, அமலாபால் இணையும் புதுப்படம்.

அமலா பால், விஜய்சேதுபதி
அமலா பால், விஜய்சேதுபதி

சிந்துபாத், மாமனிதன், லாபம், துக்ளக் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் விஜய்சேதுபதி தனது அடுத்த படத்தை ஆரம்பித்திருக்கிறார். இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனின் உதவி இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் முதன் முறையாக இப்படத்தை இயக்குகிறார்.

விஜய்சேதுபதி, இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன்
விஜய்சேதுபதி, இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன்

நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைக்கும் இப்படத்தில் விஜய்சேதுபதி இசைக் கலைஞராக நடிக்கிறார். இந்தக் கதையின் மையமாக சர்வதேச அளவிலான பிரச்னை ஒன்றும் பேசப்படவிருக்கிறது.

இப்படத்தில் விஜய்சேதுபதி இசைக் கலைஞராக நடிக்கிறார்.
#VSP33
விஜய்சேதுபதி, இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன்
விஜய்சேதுபதி, இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன்

மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில், சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் இப்படத்தை சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக இசக்கி துரை தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு இன்று பழனியில் தொடங்கியது, இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் முதல் காட்சியைத் தொடங்கி வைத்தார். இந்தப் படத்துக்கு தற்காலிகமாக #VSP33 எனப் பெயர் வைத்துள்ளனர்.