Published:Updated:

அமலாபால் `பென்ஸ்' கார் வழக்கில் கேரள போலீஸ் நீதிமன்றத்தில் முக்கிய தகவல்!

Amala Paul
Amala Paul

நடிகை அமலாபால் புதுச்சேரியில் போலி முகவரி மூலம் தனது பென்ஸ் காரை பதிவுசெய்திருப்பதாகவும் இதுகுறித்து புதுச்சேரி அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேரள குற்றப்பிரிவு போலீஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை அமலாபால். கேரளாவை பூர்வீகமாகக்கொண்ட அமலாபால் புதுச்சேரியில் 1.12 கோடி ரூபாய் மதிப்புள்ள எஸ் கிளாஸ் பென்ஸ் காரை வாங்கினார். கேரளத்தில் அந்தக் காருக்கு வாகனபதிவு எண் பெறுவதற்கு 20 லட்சம் ரூபாய் வரி செலுத்த வேண்டும். ஆனால், யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் லாஸ்பேட்டை பகுதியில் வாடகைக்கு இருப்பதாக போலி ஆவணங்களைக் காட்டி அந்தக் காரை அமலாபால் பதிவுசெய்துள்ளார். இதனால் வாகன பதிவுக்கு 1.75 லட்சம் ரூபாய் மட்டுமே ஆனதாகக் கூறப்படுகிறது.

amala paul
amala paul

கேரள மோட்டார் வாகனப் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இது கண்டுபிடிக்கப்பட்டது. அமலாபால் மட்டுமல்லாது நடிகை நஸ்ரியாவின் கணவர் ஃபகத் ஃபாசில், பி.ஜே.பி எம்.பி-யும் நடிகருமான சுரேஷ்கோபி ஆகியோரும் இதுபோன்று மோசடி செய்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கை கேரள குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். அந்த வழக்கு குறித்து கேரள உயர் நீதிமன்றத்தில் போலீஸார் இன்று அறிக்கை சமர்ப்பித்தனர். அதில், "அமலாபால் போலி முகவரி கொடுத்து வாகனம் பதிவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கார் பதிவு செய்தது புதுச்சேரியில் என்பதால் அம்மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகன பதிவு மோசடி குறித்து புதுச்சேரி போக்குவரத்துத்துறைக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கை கேரள குற்றப்பிரிவு போலீஸ் இத்துடன் முடித்துக்கொள்கிறது.

amala paul
amala paul

அதுபோல பகத் பாசில் தனது காரை பதிவு செய்வது சம்பந்தமான பணிகளை வேறுசிலர் கவனித்துக்கொண்டதாகக் கூறியதுடன் அபராதத் தொகையையும் செலுத்தியதால் அவரது வழக்கு விசாரணையும் முடிவுக்கு வந்துள்ளது. அதேசமயம் போலி ஆவணம் தயாரித்தல் போன்ற குற்றங்கள் இருப்பதால் நடிகர் சுரேஷ் கோபிக்கு எதிரான வழக்கை தொடர்ந்து விசாரிப்போம்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு