Published:Updated:

50 கோடிக்கு அமேஸானுக்கு விற்கப்பட்டதா விஜய்யின் `மாஸ்டர்'... சர்ச்சையாகும் ஓடிடி ரிலீஸ்! #MasterOTT

மாஸ்டர்
மாஸ்டர்

தியேட்டர்களில் 50 சதவிகித இருக்கைகளுக்கே மீண்டும் அனுமதி என்றதும் விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர், படத்தயாரிப்பாளர் இவர்களுக்கு இடையே லாபக்கணக்கை எப்படிப் பிரித்துகொள்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டது.

திரையரங்குகளின் மறுவாழ்வைத் தொடங்கிவைத்த விஜய்யின் 'மாஸ்டர்' சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் 13-ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸான `மாஸ்டர்' திரைப்படம் வெளியான 16 நாLகளில் அதாவது வரும் ஜனவரி 29-ம் தேதி அமேஸான் ப்ரைமில் ரிலீஸாகிறது.

ஒரு படம் தியேட்டர்களில் ரிலீஸான 35-வது நாளில் ஓடிடியில் வெளியிடலாம் என்பதுதான் தற்போதைய ஒப்பந்தம். விஜய் படங்களைப் பொறுத்தவரை தியேட்டர்களில் பெருமளவு கூட்டம் கூடும் என்பதால் தியேட்டரில் ரிலீஸாகி 45-வது நாளில் வெளியிடலாம் என்றுதான் ஓடிடி ஒப்பந்தம் போடப்படும். அதேபோலத்தான் மாஸ்டர் படத்தை 45 நாLகளுக்குப் பிறகு ரிலீஸ் செய்யலாம் என்றுதான் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், இப்போது திடீரென ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

பிரச்னை என்ன?!

100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி கிடைக்கும் என்கிற நம்பிக்கையில்தான் பொங்கலுக்கு 'மாஸ்டர்' ரிலீஸ் திட்டமிடப்பட்டது. விஜய்யும், முதலைமைச்சர் பழனிசாமியை சந்திக்க 100 சதவிகித இருக்கைகளுக்கு தமிழக அரசின் அனுமதியும் கிடைத்தது. ஆனால், திடீரென மத்திய அரசு மூலம் எதிர்ப்பு வரும் என்பது 'மாஸ்டர்' டீம் எதிர்பார்க்காத ட்விஸ்ட். நீதிமன்றமும் எதிர்ப்பு தெரிவிக்க மீண்டும் 50 சதவிகித இருக்கைகளுக்கே அனுமதி என்றதும் விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர், படத்தயாரிப்பாளர் இவர்களுக்கு இடையே லாபக்கணக்கை எப்படிப் பிரித்துகொள்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டது.

மாஸ்டர்
மாஸ்டர்

இறுதியில் விநியோகஸ்தர்கள், தியேட்டர் தரப்புக்கு அதிக லாபம் கிடைக்கும் வகையிலும், தயாரிப்புத் தரப்புக்கு லாபம் குறையும் வகையிலும் கணக்குகள் மாறியதே 'மாஸ்டர்' படத்தின் திடீர் ஓடிடி ரிலீஸ் அறிவிப்புக்குக் காரணம் என்கிறார்கள்.

தியேட்டர்களில் இருந்து 'மாஸ்டர்' தூக்கப்படுமா?!

மாஸ்டர் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய்யின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அடுத்தவாரம் திங்களோடு 'மாஸ்டர்' படத்தை தியேட்டர்களில் இருந்து தூக்கும் முடிவை எடுக்க இருப்பதாகத் தெரிகிறது. "இந்த வாரமே ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை" என்றால், ஏற்கெனவே வீக் எண்ட் டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டுவதாக சொல்கின்றன திரையரங்குகள். ஆனால், "இந்த வார இறுதி கலெக்‌ஷனையும் வாங்கிக்கொண்டு பெயருக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்" என்கிறார்கள் 'மாஸ்டர்' தரப்பினர்.

மாஸ்டர்
மாஸ்டர்

அமேஸான் எவ்வளவு கோடிகளுக்கு வாங்கியது?!

`மாஸ்டர்' படத்தின் பட்ஜெட் குறைவு என்பதால் முதலில் 15 கோடி ரூபாய்க்கே இந்தப் படம் அமேஸானுக்கு விற்கப்பட்டது. ஆனால், கொரோனா காரணமாக லாக்டெளன் அறிவிக்கப்பட `மாஸ்டர்' படத்துக்கான ஓடிடி டிமாண்ட் கூடியது. இப்போது 15 நாள்களில் ரிலீஸ் என்பதற்காக அமேஸான் நிறுவனம் `மாஸ்டர்' தயாரிப்பு நிறுவனத்துக்கு கூடுதலாக 35 கோடி ரூபாய் வரை கொடுத்திருப்பதாகத் தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு