Published:Updated:

பிரமாண்டமாய் ஒரு வரலாறு!

பிரமாண்டமாய் ஒரு வரலாறு!
பிரீமியம் ஸ்டோரி
பிரமாண்டமாய் ஒரு வரலாறு!

‘1857’ முதல் இந்திய சுதந்திரப் போருக்கு முன்பே இங்கு பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக அரசர்கள் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்கள்.

பிரமாண்டமாய் ஒரு வரலாறு!

‘1857’ முதல் இந்திய சுதந்திரப் போருக்கு முன்பே இங்கு பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக அரசர்கள் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்கள்.

Published:Updated:
பிரமாண்டமாய் ஒரு வரலாறு!
பிரீமியம் ஸ்டோரி
பிரமாண்டமாய் ஒரு வரலாறு!

ந்தக் கலகக்காரர்களில் ஒருவரான உய்யாலாவாடா நரசிம்மா ரெட்டியின் வரலாற்றை வீரமும் தெலுங்கு மசாலாவும் கலந்து சொல்லியிருக்கிறது சிரஞ்சீவியின் ‘சைரா நரசிம்மா ரெட்டி.’

அமிதாப், விஜய் சேதுபதி, சுதீப், ஜெகபதி பாபு என மாநிலவாரியாக ஹீரோக்களைப் பிடித்துவந்து சைராவுக்கு வலுச்சேர்த்தி ருக்கிறார்கள். காதலியாக, பின் நாட்டியப் போராளி லட்சுமியாக தமன்னா. சைராவின் மனைவியாக நயன்தாரா. ராணி லட்சுமி பாயாக அனுஷ்கா, தமிழ் முன்கதைக்கு கமல், மலையாளத்துக்கு மோகன்லால், தெலுங்குக்கு பவன் கல்யாண் என ‘பாரத விலாஸ்’ படம் இது.

படத்தில் வரும் ஒரு டஜன் ஸ்டார்களையும் பின்னுக்குத்தள்ளிக் கைத்தட்டல்களை மொத்தமாய் அள்ளுகிறார் சிரஞ்சீவி. ‘எனக்கு வயசாயிடுச்சா, யார் சொன்னது?’ என்பது போல், சண்டைக் காட்சிகள், மாஸ் வசனங்கள், எமோஷனல் காட்சிகள் என எல்லாவற்றிலும் தூள் கிளப்புகிறார் சிரஞ்சீவி.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஜூலியஸ் பாக்கியத்தின் பின்னணி இசையில் வரும் ‘சைர சைர சைரஹே’ திரையரங்குக்கு வெளியேயும் ரீங்கரிக்கிறது. ஆனால் அமித் த்ரிவேதியின் இசையில் பாடல்கள் பெரிதாகக் கவரவில்லை. லீ விட்டேக்கர், கிரெக் பவல், ராம் லஷ்மண் என ஒரு பெரிய குழுவே படத்தின் சண்டைக் காட்சிகளுக்கு அனல் பறக்க, தீயாய் வேலை செய்திருக்கிறார்கள்.

பிரமாண்டமாய் ஒரு வரலாறு!

அகண்ட நிலப்பரப்பில் ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் காட்சிகளைப் படமாக்கித் திரையில் பிரமாண்டம் காட்டியதில் தெரிகிறது ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவின் உழைப்பு. ஆங்காங்கே எட்டிப்பார்க்கும் சிஜி காட்சிகளைச் சற்றுக் குறைத்திருக்கலாம். ஸ்ரீகர் பிரசாத் இன்னும் தாராளமாகவே எடிட் செய்திருக்கலாம்.

முதல் பாதியில் நகர மறுக்கும் கதை போகப்போக சைராவின் குதிரைபோல் வேகம் பிடிக்கிறது. ஆனால், வரலாற்றுடன் பொருந்தாத, நம்ப முடியாத சில காட்சிகள் ஆங்காங்கே ஸ்பீடு பிரேக்கர்போல் கதையுடன் ஒன்றவிடாமல் செய்கின்றன.

எழுதப்பட்ட வரலாற்றைத் தாண்டிப் பதிவுசெய்யப்படாத நாயகர்களைப் பதிவு செய்யும் காலமிது. அப்படியான ஒரு நாயகன்தான் சைரா ரெட்டி. சிரஞ்சீவியின் அசுர உழைப்புக்காகவே இந்த சைராவுக்கு ஒரு சல்யூட் அடிக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism