Published:Updated:

`படஅறிவிப்பு டு பரபர ரிலீஸ்வரை!' - மாநாடு கடந்த வந்த பாதை!

மாநாடு

'மாநாடு' திரைப்படத்தின் ரிலீஸ் பிரச்னை குறித்த டைம் லைன் !

`படஅறிவிப்பு டு பரபர ரிலீஸ்வரை!' - மாநாடு கடந்த வந்த பாதை!

'மாநாடு' திரைப்படத்தின் ரிலீஸ் பிரச்னை குறித்த டைம் லைன் !

Published:Updated:
மாநாடு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 'மாநாடு' திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு இந்தப் படத்திற்கான அறிவிப்பு வெளியானதிலிருந்தே அதிகமாக இருக்கிறது. 2018 தொடங்கிய இந்தப் படம் பல பிரச்னைகளைத் தாண்டி 2021 வரை பயணித்திருக்கிறது. இடையில் லாக் டெளன் எனும் இடையூறு வேறு. அறிவித்த தேதியிலிருந்து இரண்டாவது முறையாக தள்ளிப்போகிறது, 'மாநாடு' திரைப்படம். நாளை வெளியாவதாக இருந்த இந்தப் படத்திற்கு ஆன் லைன் டிக்கெட் புக்கிங் எல்லாம் திறக்கப்பட்டு விறுவிறுவென புக்கிங்கும் நடைபெற்று கொண்டிருந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாளை காலை 5 மணிக்கு ஸ்பெஷல் ஷோ என்பது வரை பக்காவாக திட்டமிட்டிருந்தனர். ஆனால், 5.50 மணிக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் இருந்து 'மாநாடு வெளியீடு தள்ளிப்போகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்' என்று வந்த ட்வீட், தமிழ் சினிமாவை பரபரப்பாகி இருக்கிறது. இந்தப் படத்திற்கான அறிவிப்பு வந்ததிலிருந்து இப்போது வரை என்னெல்லாம் நடந்திருக்கிறது என்பதை சின்ன டைம் லைனோடு பார்க்கலாம்.

'மாநாடு'
'மாநாடு'

ஜூன், 2018 - பல பேச்சுவார்த்தைக்குப் பிறகு, வெங்கட் பிரபுவும் சிம்புவும் இணைகிறார்கள். அந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார் என்ற தகவல் வந்தது.


ஜூலை, 2018 - அந்தப் படத்தின் டைட்டில் லுக் வெளியானது. அந்த சமயத்தில் தான் 'செக்கச் சிவந்த வானம்' படம் முடிந்து சுந்தர்.சி இயக்கத்தில் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்திற்கான வேலைகளில் இருந்தார், சிம்பு


பிப்ரவரி, 2019 - 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படம் ரிலீசான பிறகு, உடல் எடையை குறைக்க லண்டனுக்கு சென்ற சிம்பு, அவரது தம்பி குறளரசன் திருமணத்திற்காக ஏப்ரல் மாதம் சென்னை வந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆகஸ்ட், 2019 - படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் நிறைவடைந்தது. ஷூட்டிங் ஆரம்பித்து சில நாட்களில் ' சிம்பு ஷூட்டிங்கிற்கு சரியாக வருவதில்லை' என்று படக்குழுவுக்கும் சிம்புவுக்கும் கருத்து மோதல் வந்தது. சிம்பு தரப்பும் விளக்கம் கொடுத்தது. அதனால், 'மாநாடு' படத்தை வேறொரு ஹீரோவை வைத்து எடுக்கலாம் என முடிவு செய்தனர். அதற்கு பதிலடியாக, 'மகாமாநாடு' என்ற பெயரில் சிம்பு தயாரித்து, இயக்கி நடிக்கப்போவதாக அறிவிப்பு வந்தது.


நவம்பர் , 2019 - அவர்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, 'மாநாடு' படப்பிடிப்பு சுமூகமாக ஆரம்பமானது.


ஜனவரி, 2020 - படத்தின் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

'மாநாடு'
'மாநாடு'

பிப்ரவரி, 2020 - சிம்புவின் பிறந்தநாளான பிப்.3-ம் தேதி 'மாநாடு' திரைப்படத்தில் அவருடைய பெயர் அப்துல் காலிக் என்ற போஸ்டர் வெளியானது. படத்திற்கான ஷூட்டிங் தொடங்கி, ஹைதராபாத்திலும் சென்னை விஜிபியிலும் எடுத்தனர்.


மார்ச், 2020 - அடுத்த ஷெட்யூலுக்காக மீண்டும் ஹைதராபாத் சென்றபோதுதான், லாக்டௌன் வந்தது.


நவம்பர், 2020 - இதற்கிடையில் கேரளா சென்று உடல் எடையை நன்கு குறைத்து, பயங்கர சேஞ்ச் ஓவர் கொடுத்தபடி, 'ஈஸ்வரன்' படப்பிடிப்பை முடித்துவிட்டு, 'மாநாடு' படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

ஏப்ரல், 2021 - ஒரு சில காட்சிகள் தவிர, 'மாநாடு' திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டனர்.


ஜூலை, 2021 - இரண்டாவது லாக்டெளனுக்கு பிறகு, மீதமுள்ள சின்ன சின்ன பேட்ச் வொர்கை முடித்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை ஆரம்பித்தனர்.


நவம்பர், 2021 - படத்தை முதலில் 2021,ஏப்ரல், மே மாதங்களில் ரிலீஸ் செய்யலாம் என திட்டமிட்டிருந்தனர். ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்று பார்த்தால், தீபாவளிக்கு வருகிறது என்பதுதான். முதன்முதலில் தீபாவளி ரிலீஸ் என்று போஸ்டர் வெளியிட்டது 'மாநாடு'தான். 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' திரைப்பட பிரச்னை இன்னும் முடிவடையாமல் இருப்பதால், தனக்கான நஷ்ட ஈடை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து புகார் அளித்து வருகிறார், மைக்கேல் ராயப்பன். அதனால், படம் தள்ளிப்போய் 25-ம் தேதி என்று அறிவித்தனர்.

'மாநாடு'
'மாநாடு'

நவம்பர் 18, 2021 - 'மாநாடு' இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் எனக்கு இருக்கிற பிரச்னைகளை நான் பாத்துக்கிறேன். என்னை மட்டும் நீங்க பாத்துக்கோங்க' என்று தன் ரசிகர்களிடம் கேட்டபடி கண்கலங்கினார், சிம்பு.

நவம்பர் 24, 2021 - சென்னையில் ஹைதராபாத்திலும் ப்ரோமோஷனில் கலந்துகொண்டார், சிம்பு. நாளை வெளியாவதாக இருந்த படம் மீண்டும் தள்ளிப்போவதாய் அறிவிப்பு வந்தது. படத்தின் பைனான்ஸ் பிரச்னைதான் இதற்கு காரணம் என தகவல்கள் வெயாகின.

நவம்பர் 25, 2021 - படத்தின் பைனான்ஸ் பிரச்னைகள் சரிசெய்யப்பட்டு படம் ரிலீஸானது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism