Published:Updated:

“எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு கிடைச்சது, எனக்குக் கிடைக்கலை!” - விஜய்

 An Exclusive Interview in Vijay
பிரீமியம் ஸ்டோரி
An Exclusive Interview in Vijay

“சினிமாவில் எனக்கான ரூட் என்னன்னு தெளிவா ஸ்கெட்ச் போட்டது ‘திருமலை’”...

“எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு கிடைச்சது, எனக்குக் கிடைக்கலை!” - விஜய்

“சினிமாவில் எனக்கான ரூட் என்னன்னு தெளிவா ஸ்கெட்ச் போட்டது ‘திருமலை’”...

Published:Updated:
 An Exclusive Interview in Vijay
பிரீமியம் ஸ்டோரி
An Exclusive Interview in Vijay

‘தலைவா’ ஜுரம் இப்போதுதான் விஜய் ரசிகர்களிடம் அலைஅடிக்கத் துவங்கியிருக்கிறது. ஆனால், அதற்குள் 'ஜில்லா’வுக்குள் நுழைந்துவிட்டார் விஜய். 39-வது பிறந்த நாளுக்குக் குவிந்த வாழ்த்துகள் அவரை ஏகத்துக்கும் உற்சாகப்படுத்தியிருக்கிறது!

''விஜய் 29 வயசுல என்ன நினைச்சார்? 39-ல என்ன நினைக்கிறார்? 49-ல என்னவாக இருப்பார்?''''ண்ணா... ஒன் மார்க் கேள்வியில் இருந்து ஆரம்பிங்ணா... எடுத்ததுமே பாயுறீங்களே? 30 வயசுங்கிறது, யாருக்குமே ஒரு திருப்புமுனையா இருக்கும். எனக்குச் சரியா 29 வயசுல, 'திருமலை’ மூலமா அந்தத் திருப்புமுனை வந்தது. அதுக்கு முன்னாடி 'லவ்டுடே’னு ஃபுல் காதல் ஃபீலிங்ஸ்ல நடிப்பேன். இல்லைன்னா, 'பகவதி’னு முழுக்க முழுக்க ஆக்ஷன் படமா நடிப்பேன். ஆனா, 'திருமலை’தான் சினிமாவில் எனக்கான ரூட் என்னன்னு தெளிவா ஸ்கெட்ச் போட்டது. ரசிகர்கள்

An Exclusive Interview in Vijay
An Exclusive Interview in Vijay

என்கிட்ட என்ன எதிர்பார்க்கிறாங்க? நாம எதுல ஃபோகஸ் பண்ணணும்னு அப்புறம்தான் ஒரு ஐடியாவுக்கு வந்தேன். அதுவரை என் வாழ்க்கையில் எதுவுமே திட்டமிட்டு நடக்கலை. எல்லாமே தானா நடந்துச்சு. அப்படி நடந்ததில் நல்ல விஷயங்களை மட்டும் ஃபாலோ பண்ணதால், இதோ இப்ப 39 வயசுல ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அன்பான குடும்பம், ஆசைப்பட்ட கேரியர், ஆதரவான ரசிகர்கள்... இதுக்கு மேல என்ன வேணும்? ஆனா, இப்போ இப்படி இருப்பேன்னு 29 வயசுல நினைக்கலை. அப்புறம் எதுக்கு 49-வது வயசைப் பத்தி இப்பவே கவலைப்பட்டுக்கிட்டு? எல்லாம் அதுவா தன்னால நடக்கும்ணா... பார்த்துக்கலாம்!''   

'''காவலன்’ தொடங்கி 'துப்பாக்கி’ வரை ஹிட் ரெக்கார்ட்ஸ். 'தலைவா’ அதைத் தக்கவைக்குமா?''

''நடிகர் விஜய் மாஸ்னா, டைரக்டர் விஜய் க்ளாஸ். ரெண்டும் கலந்து படம் நல்லா வந்திருக்கு. 'தலைவா’ முழுசாப் பார்த்தேன். எனக்குப் பிடிச்சிருக்கு. எல்லாருக்கும் பிடிக்கும்னு நம்புறேன்!''

'' 'ஜில்லா’வில் மோகன்லால் என்ன சொல்றார்?''

''கேரள சினிமாவோட சூப்பர் ஸ்டார் அவர் தானானு ஆச்சர்யமா இருக்கு. செம சிம்பிள்... ரொம்ப கூல். ஷூட்டிங்ல சின்ன பிரேக் கிடைச்சாலும் சுத்தி இருக்கிற எல்லாரையும் பக்கத்துல உட்காரவெச்சுட்டு அந்தக் காலத்து சினிமாவையும், அப்போ படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களையும் கச்சேரி கணக்கா கலகலனு அடுக்குவார். கேட்க ஜாலியா இருந்தாலும், ஒரு நடிகன் கத்துக்க வேண்டிய பாடங்களும் அதில் இருக்கும். ஒரு நாள் 'சாப்பாட்டுல உனக்கு என்ன பிடிக்கும்?’னு கேட்டார். 'தோசை’னு சொன்னேன். மறுநாளே கேரவன்ல எனக்கே எனக்குன்னு ஸ்பெஷலா தோசை ஊத்திக் கொடுத்தார். இப்போ நான் மோகன்லால் நடிப்புக்கு மட்டுமில்லை; தோசைக்கும் பயங்கர ஃபேன்!''

''இப்போ தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ஹீரோக்கள். இதுக்கு நடுவுல உங்க மார்க்கெட் வேல்யூ எப்படி இருக்கு?''

''ரொம்ப ஆரோக்கியமா இருக்குங்ணா... ரொம்ப ரொம்ப ஆரோக்கியமா இருக்கு. சமீபத்துல என் வீட்டுக்கு நிறையக் குழந்தைகள் வந்திருந்தாங்க. எல்லாருக்கும் நாலஞ்சு வயசுக்குள்ளதான் இருக்கும். என்னைப் பார்த்ததும் குஷியாகி 'ஹைய்யா’னு எல்லாரும் கோரஸாக் கைத்தட்டி சந்தோஷமா சிரிச்சப்ப, எனக்கு அப்படியே கண்ணு கலங்கிருச்சு.

எல்லாரையும் பக்கத்துல இழுத்துவெச்சுக்கிட்டேன். ஒண்ணு, என் கன்னத்தைக் கிள்ளுது, இன்னொண்ணு, மூக்கைப் பிடிச்சு இழுக்குது... ''வாலுப் பசங்க. 'உங்களை டி.வி-ல பார்த்தாலே துள்ளிக் குதிப்பாங்க. நேர்ல பார்த்தா கேக்கவா வேணும்’னு பூரிக்குறாங்க அந்தக் குழந்தைகளோட அப்பா-அம்மாக்கள். எந்த மார்க்கெட்டா இருந்தாலும் குழந்தைகளுக்குப் பிடிச்ச ஒரு விஷயம்தான் பெரிய ரீச் ஆகும். அந்தக் குழந்தைகளோட சிரிப்புதாங்க, என் மார்க்கெட் வேல்யூ.

இன்னொண்ணு சொல்லவா..? இப்போ நிறைய ஹீரோக்கள் இருக்கலாம். என் ரசிகர்கள் பலரேகூட, அந்த ஹீரோக்கள் படத்தை யும் ரசிக்கலாம். ஆனா, அந்த ஹீரோக்கள் படத்தைப் பார்க்கிற எல்லாருக்கும், என் படம் பிடிக்கும். அது விஜய் மேஜிக்!

An Exclusive Interview in Vijay
An Exclusive Interview in Vijay

பொதுவா ரசிகர்கள் தங்களோட ஹீரோவை நினைச்சுப் பொறாமைப்படுவாங்க. ஆனா, நான் எனக்குக் கிடைச்ச ரசிகர்களை நினைச்சுப் பொறாமைப் படுறேன். ஏன்னா, அவங்க கொடி பிடிக்கிறதும் தோரணம் கட்டுறதை மட்டும் செய்யலை.

குடிக்க பால் இல்லாமத் தவிக்கிற குழந்தைகளுக்கும், வடிக்க அரிசி இல்லாமக் கஷ்டப்படுற ஏழைகளுக்கும் ஓடிப்போய் உதவுறாங்க... அதனாலதான்! இங்கே ஒன் மோர் விஷயம் ப்ளீஸ்... என் மார்க்கெட் வேல்யூ உச்சத்தில் இருக்கிறப்பவும் சரி, மத்த நேரங்கள்லயும் சரி... எப்பவுமே நான் ஸ்டார் இயக்குநர்களின் ஃபேவரைட்டா இருந்தது இல்லை. இப்பக்கூட யாரும் என் கால்ஷீட்டுக்காகக் காத்திருக்கிறது இல்லை. அதனால், இந்த ஸ்டார் வேல்யூ பத்தி நான் கவலைப்படுறது இல்லை!''

''ஹிட் படங்கள் வெள்ளி விழாக் கொண்டாடிய காலத்தில் சினிமாவில் அறிமுகமானீங்க. இப்போ ஒரு படத்தின் டிரெய்லர் யூடியூபில் ஒரு லட்சம் ஹிட் அள்ளும் சமயத்துல பீக்ல இருக்கீங்க. மாறிட்டே இருக்கிற சினிமா டிரெண்டை எப்படிப் பார்க்கிறீங்க?''

''என்னைப் பொறுத்தவரை, சினிமா ரொம்ப எமோஷனல் மீடியம். ஒரு ரசிகன் தியேட்டருக்கு வந்தா, அவனை நாம தியேட்டர் சீட்ல உக்காரவைக்கக் கூடாது. கதை நடக்கும் களத்துக்கு... அந்த சூழ்நிலைக்கே கடத்திட்டுப் போயிடணும். அந்த அனுபவம்தான் சினிமாவின் மேஜிக்.

ஆனா இப்போ, 'மேக்கிங்’, 'புரமோஷன்’னு படப்பிடிப்பு ரகசியங்களை ஜஸ்ட் லைக் தட் ஷேர் பண்ணிடுறாங்க.

எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்துல அதையெல்லாம் ரகசியமா வெச்சிருப்பாங்க. ரசிகர்களும் தியேட்டர் ஸ்க்ரீன்ல அவங்க நடிக்கிறதைப் பார்த்துப் பிரமிச்சுக் கைத்தட்டுவாங்க. அப்படி ஒரு ரகசியத் திரை கொஞ்சமாவது இப்போ தேவை. ஷூட்டிங்கில் நாங்க கஷ்டப்பட்டு நடிக்கிறதை, 'மேக்கிங்’கிற பேர்ல ஓப்பனா எல்லாத்தையும் காமிச்சுட்டா, அப்புறம் அந்தக் காட்சியை தியேட்டர்ல பார்க்கிறப்போ எந்தத் த்ரில்லும் இருக்காது. 'இந்த சீனா? இதை எப்படி எடுத்தாங்கனு நான் நெட்லயே பார்த்துட்டேனே’னு அசால்ட்டா சொல்லிட்டுப் போயிடுவாங்க.

அது சினிமாவுக்கு நல்லதில்லைங்ணா!

மேஜிக்கை ஸ்க்ரீன்ல காட்டுவோம் வாங்கங்ணா!''

- எம்.குணா,

படம்: கே.ராஜசேகரன்

(10.07.2013 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism