Published:Updated:

"எல்லாத்தையும் பாட்டாவே பாடிடுவோம்!”

கென்
பிரீமியம் ஸ்டோரி
கென்

மாடிப்படிக்கட்டுகளில் ஏறும்போதே வீட்டுக்குள்ளிருந்து கானாப் பாடல்கள் காதில் விழுகின்றன. கானாவுக்கு ஏற்றபடி ஸ்டெப்ஸ் போட்டபடி கருணாஸ் குடும்பம் வீட்டுக்குள் வரவேற்கிறது.

"எல்லாத்தையும் பாட்டாவே பாடிடுவோம்!”

மாடிப்படிக்கட்டுகளில் ஏறும்போதே வீட்டுக்குள்ளிருந்து கானாப் பாடல்கள் காதில் விழுகின்றன. கானாவுக்கு ஏற்றபடி ஸ்டெப்ஸ் போட்டபடி கருணாஸ் குடும்பம் வீட்டுக்குள் வரவேற்கிறது.

Published:Updated:
கென்
பிரீமியம் ஸ்டோரி
கென்

"மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்ல ஒரு கல்ச்சுரல் புரோகிராம் நடந்தது. அதுக்கு நானும், சரத்குமார் சாரும் நடுவர்களா போயிருந்தோம். அந்த நிகழ்ச்சியில் இவங்க காலேஜ் சார்பா எந்த இசைக்கருவிகளும் இல்லாமல் ‘பூப் பூக்கும் ஓசை’ பாட்டைப் பாடினாங்க. கிரேஸை அந்த ஸ்டேஜ்ல பார்த்த வுடனேயே எனக்கு ரொம்பப் பிடிச்சி ருச்சு’’- காதல் மலர்ந்த தருணத்தைக் கருணாஸ் சொல்ல, மலரும் நினைவு களுக்குள் மூழ்குகிறார் கிரேஸ்.

``பார்த்தவுடனேயே என்னைப் பிடிச்சுப்போயிருச்சுன்னு இவர் சொல்றதெல்லாம் சுத்தப் பொய். எனக்கு முன்னாடி 99 பொண்ணுங்களை இவருக்குப் பிடிச்சிருக்கு. என்ன பண்ண, இவரைத்தான் அவங்க யாருக்கும் பிடிக்கல’’ என கிரேஸ் கலாய்த்தாலும் சீரியஸாகப் பேச ஆரம்பிக்கிறார் கருணாஸ்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"சினிமாவுல இருந்து அரசியலுக்கு வந்து எம்.எல்.ஏ ஆனதுக்கு அப்புறம் என்கூட காலேஜ்ல படிச்ச பொண்ணுங்க எங்கேயாவது பொது இடத்துல என்னைப் பார்த்தா, ‘என்னை ஞாபகம் இருக்கா’ன்னு கேட்பாங்க. ‘படிக்குறப்போ உன் பின்னாடி சுத்துனேன். ஆனா, நீதான் என்னை மதிக்கல. மதிச்சிருந்தா இப்போ நீ எங்க இருந்திருப்ப தெரியுமா’ன்னு சீரியஸா ஒரு லுக் விட்டுட்டு வந்துருவேன்’’ எனக் கருணாஸ் ஃபீல் செய்ய ‘’அம்மா, அப்பாவுக்கு நினைப்பைப் பாத்தியா’’ என மகனும், மகளும் என்ட்ரி கொடுக்கிறார்கள்.

குடும்பத்துடன் கருணாஸ்
குடும்பத்துடன் கருணாஸ்

‘’இவங்கதான் எங்க பசங்க. பெரிய பொண்ணு டயானா, பல் டாக்டருக்குப் படிச்சிட்டிருக்கா. பையன் கென்னைதான் ‘அசுரன்’ படத்துல பார்த்திருப்பீங்க’’ எனக் கருணாஸ் அறிமுகம் கொடுக்க, நான் ஃப்ளாஷ்பேக்கைச் சொல்லியே ஆவேன் என, விட்ட இடத்திலிருந்து தொடர்கிறார் கிரேஸ்.

"இவருக்கு என்னைப் பார்த்தவுடனே இளையராஜா மியூசிக் மனசுல ஓடியிருக்கு. அன்னைக்கு இரவு அவரோட ரூம்ல இருந்தவங்களுக்கு ட்ரீட் கொடுத்தி ருக்கார். எதுக்குன்னு காரணம் கேட்டா, ‘இப்போதான் என் லைஃப் பாட்னர சந்திச்சிருக்கேன்’னு வேற டயலாக் விட்டிருக்கார். ஆனா, இவருக்கு என் பேர், அட்ரெஸ்லாம் தெரியாது. ஆனா, இன்னைக்கு எங்க குடும்பத்துக்கே இவர்தான் அட்ரஸ்’’ என கிரேஸ் ஒரு பன்ச்சோடு முடிக்க, தொடர்கிறார் கென்.

Dhanush, கென்
Dhanush, கென்

"எப்போதுமே எங்க வீட்ல பிஸியான ஆள் யார்னு பார்த்தா அது எங்க அம்மாதான். அம்மா இப்போ பீக்குல இருக்கிறதனால அவங்களை வீட்டுல பாக்குறதுதான் அதிசயமா இருக்கு’’ என கென் சொல்ல, ‘’அம்மா எப்பவுமே ஸ்வீட். அப்பாதான் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் ஆபீஸர். ஆனா, அவருக்குக் கொஞ்சம் போர் அடிச்சாலும் எல்லாரையும் நடுஹாலில் உட்கார வெச்சு ஜாலியாப் பேச ஆரம்பிச்சிருவார். விடியற்காலை 4 மணி ஆனாகூட விடவே மாட்டார்’’ என அப்பாவைக் கலாய்க்கிறார் டயானா.

"சினிமாவுல நான் நடிச்சு நாலு வருஷம் ஆச்சு. அதனால, ‘என்னை வெச்சு ஒரு படம் பண்ணுங்க’ன்னு வெற்றி கிட்ட கேட்டுட்டே யிருந்தேன். ‘யோசிச்சு சொல்றேன்’னு சொன்னார். அப்புறம் ஒருநாள் அவர்கிட்ட பையனுக்காகப் பேசினேன். ஏன்னா, அவன் ஸ்கூல், காலேஜ்ல கல்ச்சுரல் புரோகிராமில் கலந்துக்குவான். நானும் அவனை மாதிரிதான் படிக்குற காலத்துல இருந்தேன்’’ கருணாஸ் சொல்ல, கென் தொடர்ந்தார்,

‘’அப்பா என்கிட்ட ‘உனக்காக நான் வாய்ப்புதான் வாங்கித் தரமுடியும். அதை நீதான் தக்க வெச்சிக்கணும்’னு சொல்லியிருந்தார். 68 கிலோ இருந்த நான் 14 கிலோ குறைஞ்சேன். உடம்பைக் குறைக்க நான் படுற கஷ்டத்தைப் பார்த்துட்டு அப்பாவே ரொம்ப ஃபீல் பண்ணினார்’’ என கென் சொல்ல, கருணாஸ் சீனுக்குள் வந்தார்.

கென்
கென்

"வெற்றியோ தோல்வியோ அவன் சராசரியா எடுத்துக்கிட்டு எல்லாரையும் மதிச்சு நடந்துக்கணும்ங்கிறதுதான் என்னோட ஆசை. இதைத்தான் கென்னுகிட்டயும் சொல்லுவேன்’’ எனக் கருணாஸ் சொல்ல, ‘’என்ன சீரியஸாவே பேசிட்டிருக்கீங்க’’ என ட்ராக் மாற்றினார் டயானா.

‘’எங்க வீடு எப்போதுமே ஜாலியாதான் இருக்கும். வீட்ல எல்லோருமே பாடிட்டுதான் இருப்போம். எல்லாத்தையுமே பாட்டாவே பாடிடுவோம். அப்பாவுக்கு 'காதல் ஓவியம்’ பாட்டு ரொம்பப் பிடிக்கும். இவங்க ரெண்டு பேருக்கும் இடையில் ஏதாவது சண்டை வந்தா இந்தப் பாட்டைப் பாடி கூல் பண்ணிருவாங்க’’ என டயானா சொல்ல, ‘’எனக்கு ஏன் `கென்’னு பேர் வெச்சாங்கன்னு அப்பாகிட்ட கேளுங்க’’ என்கிறார் கென்.

‘’நான் காலேஜ் படிக்குறப்போ கறுப்பா இருக்கேன்னு நிறைய பொண்ணுங்க என்னைத் தவிர்த்திருக்காங்க. கிண்டல் அடிச்சிருக்காங்க. என் பையனை யாரும் அப்படிப் பண்ணிறக் கூடாதுன்னு நினைச்சேன். அப்போ பார்பி கேர்ள் விளம்பரம் வரும். அதுல வர்ற ஹீரோ பேர் கென். பார்பி கேர்ள் கென்னுக்கு ‘ஐ லவ் யூ’ன்னு ப்ரபோஸ் பண்ணும். அந்தச் சமயத்துல நான் வெச்சிருந்த ரேடியோ பேர் கென்வுட். அதனால எல்லாத்தையும் சேர்த்து `கென்’னு வெச்சிட்டேன்’’ எனப் பூரிப்படைகிறார் கருணாஸ்.

"எங்க குடும்பம் மகிழ்ச்சியா இருக்க கிரேஸ்தான் காரணம். அவங்கதான் பசங்க, வீட்டைப் பார்த்துக்கிறாங்க. அவங்க ளுக்குத்தான் நன்றி சொல்லணும்’’ எனக் கருணாஸ் சொல்ல, ‘’தெய்வமே... தெய்வமே... நன்றி சொல்வேன் தெய்வமே’’ என கிரேஸ் பாட, டயானாவும், கென்னும் கோரஸில் பிஸி!