Published:Updated:

"அரசியல் சூப்பர் ஸ்டாரை என்ன செய்யுமோ என்பதுதான் என் கவலை”

ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
ரஜினி

மனம் திறக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!

"அரசியல் சூப்பர் ஸ்டாரை என்ன செய்யுமோ என்பதுதான் என் கவலை”

மனம் திறக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!

Published:Updated:
ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
ரஜினி

நடிகர்கள் அரசியலுக்குள் என்ட்ரி ஆகப் பல வழிகள். அதில் ஒரு வழி ஏ.ஆர்.முருகதாஸ் வழி. விஜயகாந்த், சிரஞ்சீவி என அரசியலுக்குள் நுழையும் முன் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடித்துவிட்டுத்தான் அரசியலுக்குள் அடியெடுத்துவைக்கிறார்கள். அந்தவரிசையில் இப்போது சூப்பர் ஸ்டார். `தர்பார்' ஷூட்டிங் ஆரம்பித்த நாளில் இருந்தே சோஷியல் மீடியா தொடங்கி எல்லாப் பக்கமும் ``தலைவர் பட அப்டேட் சொல்லுங்க... அப்டேட் சொல்லுங்க'' எனப் பரபரக்கிறார்கள் ரசிகர்கள். இரவு, பகல் என இடைவெளியில்லாமல் எடிட்டிங்கில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் பேசினேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`` `எல்லோரையும் மாதிரி நானும் ரஜினி சாரோட ரசிகன்தான். அது என்னவோ தெரியலை, படம் பண்றதுக்கான சூழல் பொருந்தி வரலை. ஆனா, எதிர்காலத்துல நிச்சயம் வாய்ப்பு இருக்கு' - விகடன் மாணவப் பத்திரிகையாளர் நிகழ்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு நீங்கள் சொன்ன பதில் இது... எப்படி உருவானது ரஜினியுடன் தர்பார்?''

`` தமிழ் `கஜினி' ரிலீஸானதும் ரஜினி சார்கிட்ட இருந்து அழைப்பு வந்தது. போய்ச் சந்திச்சேன். வாழ்த்து சொன்னார். ஆனா, படம் பண்றதைப் பத்திப் பேசல. இரண்டு வருஷம் கழிச்சு மீண்டும் ஒரு சந்திப்பு. இந்தமுறை படம் பண்ணலாம்னு சொன்னார். ஆனால், பல காரணங்களால் படம் பண்றது தள்ளிப்போயிட்டே இருந்தது. `சர்கார்' ஷூட்டிங்கின்போது மீண்டும் ஒரு அழைப்பு. இந்தமுறை வாய்ப்பைத் தவறவே விடக்கூடாதுன்றதுல நான் உறுதியா இருந்தேன். படத்தோட அவுட்லைன் சொன்னேன். அதில் என்ன கரெக்‌ஷன் சொன்னாலும் அடுத்தநாளே சரி செஞ்சிட்டுப்போய் திரும்பவும் சொன்னேன். ஒரு மாசம் கழிச்சு ஃபுல் கிரீன் சிக்னல் கொடுத்தார். `இந்தப் பேட்டர்ன்ல நான் படம் பண்ணுனதே இல்லை. படத்தை இப்பவே தியேட்டர்ல பார்க்கணும்னு அவ்ளோ ஆர்வமா இருக்கு'ன்னு சொன்னார். இப்படித்தான் `தர்பார்' ஆரம்பமாச்சு.''

ஏ.ஆர்.முருகதாஸ்
ஏ.ஆர்.முருகதாஸ்

`` `காலா', `பேட்ட.’ இவை இரண்டும் அரசியலுக்கு வர்றேன்னு அறிவிச்ச பிறகு ரஜினி நடிச்ச படங்கள். ஒன்று அரசியல் படம். மற்றொன்று கமர்ஷியல்... `தர்பார்' எப்படி இருக்கும்?''

`` `தர்பார்' விறுவிறுப்பான மாஸ் கமர்ஷியல் படம். தெளிவாச் சொல்லிடுறேன். இது அரசியல் படம் இல்லை.'அலெக்ஸ் பாண்டியன்' மாதிரி அதிரடியான போலீஸ் அதிகாரியைப் பற்றிய படம்.''

``படத்தின் ஒன்லைன் சொல்லுங்களேன்?''

``பொங்கல் வரைக்கும் வெயிட் பண்ணுங்க ப்ளீஸ்.''

``நயன்தாரா லீடிங் லேடியாவே நிறைய படங்கள் பண்றாங்க... படத்தில் அவங்க பர்ஃபாமென்ஸ் எப்படி வந்திருக்கு?''

`` அவங்ககூட `கஜினி' படத்தில் வொர்க் பண்ணினேன். இப்ப `தர்பார்'. இத்தனை வருஷங்களில் நல்ல இம்ப்ரூவ்மென்ட். சின்னச் சின்ன முகபாவங்களில்கூட அதிசயப்படுத்துறாங்க.''

``வில்லன் கேரக்டர் உங்க படங்களில் எப்போதுமே ஸ்பெஷலா இருக்கும். இதில் வில்லன் யார்?''

``வில்லனா இந்தி நடிகர் சுனில் ஷெட்டி நடிச்சிருக்கார். செம பவர்ஃபுல் ரோல். `உங்க கேரக்டர் சூப்பரா இருக்கு'ன்னு ரஜினி சார் சுனில் ஷெட்டிகிட்ட சொல்லி யிருக்கார்.''

தர்பார்
தர்பார்

``மற்ற நடிகர்கள்...?''

``ரஜினி சார் பொண்ணா நிவேதா தாமஸ் நடிச்சிருக்காங்க. யோகிபாபு, பிரத்திக் பாபர், கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கோட அப்பா யோக்ராஜ் சிங், நவாப் ஷான்னு முக்கியமான நடிகர்கள் இருக்காங்க. இதுதவிர மும்பை பேக்டிராப்ல நடக்கிற கதைன்றதால நிறைய தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் நடிச்சிருக்காங்க.''

``மீண்டும் அனிருத்துடன் கூட்டணி... பாடல்கள் எப்படி வந்திருக்கு?''

`` ஆமாம். `கத்தி'யில் அனிருத்துடன் வேலை செஞ்சிருக்கேன். இதில் எல்லாப் பாடல்களுமே சூப்பரா வந்திருக்கு. எப்பவும்போல ரஜினி சாரோட முதல் பாட்டை எஸ்.பி.பி பாடியிருக்கார். ரஜினி சார் ரசிகர்களுக்கு பாடல்கள் செம கொண்டாட்டமா இருக்கும்.''

``பெரிய டெக்னிக்கல் டீம் ஒண்ணுகூடியிருக்கே?''

``பெரிய டீம் மட்டுமல்ல. ரொம்ப ஸ்ட்ராங்கான டீம். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு, கலை சந்தானம், எடிட்டிங் கர் பிரசாத், சண்டைப் பயிற்சி ராம் - லக்‌ஷ்மண், க்ளைமாக்ஸ் ஆக்‌ஷன் பீட்டர் ஹெய்ன், நடனம் பிருந்தா, ஷோபி, ராஜு சுந்தரம், பாடல்கள் விவேக்னு நல்ல டீம்.''

Rajinikanth, Yogi Babu
Rajinikanth, Yogi Babu

``விஜயகாந்த், சிரஞ்சீவி, விஜய், ரஜினி... நீங்கள் இயக்கிய, தற்போது இயக்கிக்கொண்டிருக்கும் ஹீரோக்கள் எனக் கிட்டத்தட்ட எல்லோருமே அரசியல் தொடர்போடு இருக்காங்க. இந்த நடிகர்களுக்காக உங்கள் காட்சிகள், வசனங்களில் எதுவும் மாற்றம் செய்வீங்களா? அல்லது, அவர்கள் எதுவும் கேட்பார்களா?''

``எந்த நடிகரையும் புகழ்பாடணும்னு நான் வசனம் எழுதவே மாட்டேன். அப்படி எழுதுங்கன்னு யாரும் என்கிட்ட கேட்டதும் இல்லை. பேசுற வசனங்களில் யார் மனசும் புண்பட்டுடக்கூடாதுன்றதுல ரஜினி சார் ரொம்ப கவனமா இருப்பார். `இப்படிப் பேசுனா அவங்களைப் புண்படுத்துற மாதிரி வருமா'ன்னு கேட்டுக்கேட்டு தெளிவு படுத்திக்கிட்டே இருப்பார்.''

``அடுத்த படமும் நீங்க ரஜினியை வைத்து இயக்கப்போறதா சொல்றாங்களே?''

``இப்ப என்னோட கவனம் எல்லாம் முழுக்க முழுக்க `தர்பார்'லதான் இருக்கு. ஆனா, எங்க ரெண்டு பேருக்குமே இன்னொரு படம் சேர்ந்து பண்ணலாம்னு ஆசை இருக்கு. ஆண்டவன் சொன்னால் அருணாச்சலம் செய்வார்.''

 "அரசியல் சூப்பர் ஸ்டாரை என்ன செய்யுமோ என்பதுதான் என் கவலை”

``தனிப்பட்ட முறையில் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு பற்றி உங்க கருத்து என்ன?''

``ரஜினி சார் ரொம்ப ரொம்ப நல்ல மனிதர். யாரைப் பத்தியும் தப்பாப் பேசவே மாட்டார். இன்னும் சொல்லப்போனா எல்லோரைப் பத்தியும் நல்ல விதமாவே சொல்லுவார். சக மனுஷனை அதட்ட மாட்டார். மனசுக்குத் தோன்றதை அப்படியே பேசுவார். சாதாரண கார்ல ஒற்றை ஆளா வருவார், போவார். ஆனா, இந்த அரசியல் சூப்பர் ஸ்டாரை என்ன செய்யுமோ என்பதுதான் என் கவலை.''

``தற்போதைய இந்திய, தமிழக அரசியல் சூழலை எப்படிப் பார்க்குறீங்க?''

``கடவுள் - மொழி - சாதி இவற்றை வெச்சு அரசியல் செய்றவங்களை நான் சந்தேகமாத்தான் பார்ப்பேன். இது மூணுமே சென்சிட்டிவான விஷயங்கள். இதைத்தொட்டா கூட்டம் கூடும். மக்களை உணர்ச்சிவசப்பட வைக்கிறதும் ஈஸி. நம்ம ஊர்ல இதை வெச்சுத்தான் அரசியல் செய்யப்படுது. உண்மையா சிலர் இருந்தாலும் போலிகள் அதிகம். நாம பின்தங்கிப்போனதுக்கு இதைத்தான் முக்கியமான விஷயமா நான் பார்க்கிறேன்.

யோக்ராஜ் சிங், சந்தோஷ் சிவன்
யோக்ராஜ் சிங், சந்தோஷ் சிவன்

மத்திய அரசைப் பொறுத்தவரைக்கும் இந்தியா முழுக்க வரவேற்பு, செல்வாக்கு அதிகரிச்சிட்டே போகுது. ஆனா, தமிழ்நாட்டுல மட்டும் எதிர்ப்பு. தமிழகத்தை அழிக்கப்பார்க்குறாங்க, நசுக்கப்பார்க்கு றாங்கன்ற மாதிரியான பிம்பம் இங்க இருக்கு. இது உண்மையா, இல்லை உருவாக்கப்பட்ட தான்னு என்னால உறுதியாச் சொல்லமுடியல. இந்த டிஜிட்டல் யுகத்துல காலைல ஒருத்தரை நல்லவராவும், அதே ஆளை சாயங்காலம் கெட்டவராவும் சித்திரிக்க முடியும்.

 "அரசியல் சூப்பர் ஸ்டாரை என்ன செய்யுமோ என்பதுதான் என் கவலை”

தமிழ்நாட்டுல நிலைமை வேற. கேரள முதல்வரும், எதிர்க்கட்சித்தலைவரும் ஒரே கார்ல வந்துட்டுப் போறாங்க. ஆனா, இங்க ஏர்போர்ட்ல ஒருத்தர் போன வழியில இன்னொருத்தர் போக மாட்டார். ஆட்சி இருக்குமா, இருக்காதான்ற சந்தேகத்துலயே தமிழகத்துக்கு வரவேண்டிய நிறைய தொழிற்சாலைகள் பக்கத்து மாநிலங்களுக்குப் போயிடுச்சுன்னு நாம எல்லோருக்குமே தெரியும். அதேசமயம் இன்றைய முதல்வரைப் பொறுத்தவரை ஈஸியா தொடர்புகொள்ளக்கூடியவர், நம்மைப் போன்ற ஒருவர்ங்கிற மாதிரியான ப்ளஸ் பாயின்ட்டுகளும் இருக்கு.''

``அஜித் ரசிகர்கள் எல்லோரும் எதிர்பார்க்கும் கேள்வி. முதல் படத்துக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் இணையலையே?''

`` `தீனா'வுக்குப் பிறகு அஜித் சாரோட இணையுற வாய்ப்பு ரெண்டு முறை தட்டிப்போயிடுச்சு. என் வளர்ச்சியில எப்போதுமே சந்தோஷப்படுற முதல் மனிதர் அஜித் சார். எப்ப வேணாலும் நாங்க இணைவோம்.''

``சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள்... இந்தப் பயணம் எப்படி இருக்கு?''

``நிறைய பார்த்துட்டேன். பணம் இருப்பவன் இல்லாதவன் போலவும், இல்லாதவன் இருப்பவன் போலவும், புத்திசாலி முட்டாள் போலவும், முட்டாள் புத்திசாலி போலவும், நல்லவன் கெட்டவன் போலவும், கெட்டவன் நல்லவன் போலவும், பெரிய மனுஷன் சின்னப்புத்தியுடனும், சின்ன மனுஷன் பெரிய மனசுடனும், கோமாளி ராஜா மாதிரியும், ராஜா கோமாளி மாதிரியும் நிறைய நடிப்பைப் பார்த்துட்டேன்.

 "அரசியல் சூப்பர் ஸ்டாரை என்ன செய்யுமோ என்பதுதான் என் கவலை”

ஆனா, அதேசமயம் கோடிக்கணக்கான முதலீடு எந்த ஒரு கையெழுத்தும் இல்லாம வார்த்தை நம்பிக்கையில் நடப்பதும், பிரச்னை என்றால் ஓடிவந்து உதவுறதும், வேலை செய்ற இடத்தில் அண்ணன் - தம்பி மாதிரியான பாசமும், குரு - சிஷ்யன் என்கிற நிரந்தர பந்தமும், இந்த சினிமாவில் மட்டுமே உண்டு.''

``ஏ.ஆர்.முருகதாஸ் என்கிற இயக்குநரை நீங்க எப்படிப் பார்க்கிறீங்க?''

``உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டவன். வெறும் கமர்ஷியல் இயக்குநர் என்கிற பார்வையை விரைவில் மாற்றக்கூடியவன்.''

``உங்கள்மீதான தனிப்பட்ட விமர்சனங்களை எப்படி எடுத்துப்பீங்க?''

``பேசுறதுக்கு அவங்களுக்கு நிறைய நேரம் இருக்கு. செய்றதுக்கு எனக்கு நிறைய வேலை இருக்கு.''

``தற்போதைய இளம் இயக்குநர்கள் பற்றிச் சொல்லுங்க?''

``எல்லோரிடமும் புதுப்புது அணுகுமுறை இருக்கு. நல்ல திறமை இருக்கு. கடுமையா உழைக்கிறாங்க.''

``தமிழ் சினிமாவின் எதிர்காலம் எப்படி இருக்கு?''

``மொழிகளைக் கடந்து அசுர வளர்ச்சியடையும்.''

``உங்க எல்லாப் படங்களிலுமே அரசியல் கருத்துகள் இருக்கும்... நேரடி அரசியலுக்கு வரணும்கிற எண்ணம் இருக்கா?''

``சினிமாதான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். எனது துறை சினிமா மட்டுமே!''