அத்தியாயம் 1
Published:Updated:

நாற்காலி கனவுடன் நடிக்க வராதீர்கள்! பாரதிராஜா

An Exclusive Interview With Bharathiraja
பிரீமியம் ஸ்டோரி
News
An Exclusive Interview With Bharathiraja

“பதவிசுகத்துக்கு அலையற யாரும் பொது வாழ்க்கையில ஜெயிக்க முடியாது” - பாரதிராஜா

'என், இனிய தமிழ்மக்களே!' என்று கரகரத்த குரல் கொடுக்க, புதிய பட வேலைகளில் மும்முரமாக இருக்கிறார் பாரதிராஜா. 'கண்களால் கைது செய்' என்று புதுமுகங்களைப் போட்டுப் பாதிப் படம் வரை வந்துவிட்ட பாரதிராஜாவை, அவரது அலுவலகத்தில் சந்தித்தோம்.

An Exclusive Interview With Bharathiraja
An Exclusive Interview With Bharathiraja

"ரொம்பப் பணக்கார இளைஞனோட கதை. இந்தியாவிலேயே ஆறாவது பணக்காரரா இருக்கிற ஒரு பிஸினஸ்மேன், திடீர்னு இறந்துபோக இருபத்தொரு வயசு மகன் தலையில் இறங்குது சுமை. உலக அளவுல பேசப்படற அந்த இளைஞனோட வாழ்க்கையில குறுக்கிடறா ஒரு தேவதை அவனைப் படாதபாடு படுத்துது அந்தக் காதல்னு போகுது கதை. பல்லடம் பக்கத்துல ஒரு தியேட்டர் ஓனரோட பையன் தான் ஹீரோ. கதாநாயகி பிரியாமணினு பெங்களூர் பொண்ணு. காலேஜ் ரெண்டாம் வருஷம் படிக்கிறா. இவங்க ரெண்டு பேருக்கும் இனிமே தான் சினிமாப் பேர் வைக்கணும் ஈர நிலம்னு இன்னொரு படமும் பண்ணப் போறேன். அது மண் வாசனை மாதிரி அக்மார்க் கிராமியப் படம் பிரமாதமான சப்ஜெக்ட் இங்கே காதலுக்கு மட்டும் அழிவே கிடையாது. மனித குலத்தில் கடைசி ஆண் - பெண் உள்ளவரை காதல் தொடரும் அதுல தமிழ் சினிமா தொட்டது கையளவு தொடாதது கடலளவு ஆழமான ஈரமான உணர்வுகள் இந்த மண்ணுல இன்னமும் காதலாலதான் மிச்சமிருக்குனு. நம்பறவன் நான் காதல் கதைகள் இங்கே அட்சயபாத்திரம் மாதிரி"

"வருஷம் ஒரு படம் பண்ணிட்டிருந்தீங்க இப்போ ஏன் சமீபகாலமா இவ்வளவு பெரிய இடைவெளி வந்தது?”

போரடிச்சுடுச்சு கொஞ்சம் சலிப்புத் தட்டுது. பதினாறு வயதினிலே பத்தி இன்னிக்கும் பேசறாங்களே. அதுமாதிரி மட்டும்தான் பண்ணனும் மாதிரி ஒரு லைஃப்டைம் காரெக்டர் அது. இதோ, இந்த இரண்டு படங்களும் முடிச்சாச்சுன்னா, காதல் படங்களுக்கு நான் குட்பை சொல்லிடுவேன். இனி மேல் குடுத்தா வித்தியாசமா மக்கள் மனசிலே காலாகாலத்துக்கும் ஆணி அடிச்சி உட்கார்ற மாதிரி ஒரு படம் தரணும்.

An Exclusive Interview With Bharathiraja
An Exclusive Interview With Bharathiraja

குற்றபரம்பரைனு புரச்சிக் கரமா ஒரு படம் இருக்கு.'ஷிண்டர் லிஸ்ட்'மாதிரி பேசும்படியா ஒரு கதை. எழுபது வயசுக் கிழவனா நானே நடிக்கப் போறேன்.'பின்னத் தேவன்'னு ஒரு பெருசு வேஷம் 'ஓமர்முக்தர்' மாதிரி ஒரு லைஃப்டைம் காரெக்டர் அது.

பாரதிராஜாறு ஒருத்தன் இருந்தான். போனான்னு இல்லாம. இப்படி ஒண்ணு பண்ணான்னு இருக்கனும்ல. அப்படி எனக்குள்ள ஊறிக்கிட்டிருக்கிற ஒரே கனவு நாயகன் அந்தக் 'கிழவன்தான்' "

"இப்போ தமிழ் சினிமா ஆரோக்கியமா இருக்கா சார்?"

பிரகாசமா இருக்கிற மாதிரி இருக்கு நிறைய புதுப்படப் பூஜைகள், இளைஞர்கள் வரவுனு தென்படறது ஆரோக்கியமான விஷயம்தான். ஆனா இதெல்லாம் ஈசல் பூச்சிகளோனு லேசா ஒரு கவலையும் வருது. நல்ல நல்ல கதைகளுக்காகவே பஞ்சு அருணாசலம், கலைஞானம் மகேந்திரன், செல்வராஜ், ஏ.எஸ், பிராகசம்னு ஒரு கூட்டம் இருந்துச்சு இப்போ என்ன நிலைமை. மனசுல ஒரு கதை இருந்ததுனா போதும் உடனே அவங்களே டைரக்டர் ஆகிடறாங்க. கதை எழுதறது வேற. டைரக்ஷன் வேற புத்திசாலி ஜெயிக்கிறான். மத்தவன் பரிதாபமா தோத்துடறான். இளைஞர்கள். கதையை நம்பாம விஞ்ஞான - வளர்ச்சியையும் விளம்பரப் பட 'எம் டி.வி'. மோகத்திலேயுமே வர்றாங்க.

எல்லா மொழிகளிலும் பிஸினஸ் ஆகனும்கிற ஆசையில தமிழ் மண்ணுக்கு உரிய அடையாளங்களைத் தொலைக்க ஆரம்பிச்சுட்டாங்க.. அதுதான் வருத்தம்.

" 'கண்களால் கைது செய்' படத்துக்காக சிலோன் போய் ஷூட் பண்ணீங்களாமே?"

"இது சென்னையில நடக்கிற கதைதான் ஆனா, ஸ்டார் ஒட்டல்ல வெச்சு, பணக்கார லொகேஷன் பிடிக்க பயங்கரச் செலவாகும்னு தோணிச்சு: சிலோன் நண்பர் மூலமா, செலவு குறைவா படம்பிடிச்சுட்டு வந்தோம். கண்டி, நூவாரேலியா, திரிகோண மலைனு தமிழர்கள் வசிக்கிற பகுதிகள் அது."

An Exclusive Interview With Bharathiraja
An Exclusive Interview With Bharathiraja

"கொஞ்ச நாளாகவே தமிழ்... தமிழர்கள்னு கூட்டங்களில் உணர்ச்சி வசப்பட்டு பேசறீங்க... ஷூட்டிங்குக்கு சிலோன் போய் வந்திருக்கீங்க...என்னதான் சார் நடக்குது?"

(பெரிதாகச் சிரிக்கிறார்.) ஒரு தமிழன் இன்னொரு தமிழன் பத்திக் கவலைப் படுவதே குற்றம் மாதிரி ஆகிப் போச்சுல்ல. இலங்கைத் தமிழர்னு இல்லை. ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, பிஜித் தீவுல உள்ள எல்லாத் தமிழருக்காகவும் தான் நான் பேசறேன். அவனும் என் சகோதரன்தான். எங்கேயோ ஒரே தொப்புள்கொடி சொந்தம் தான். அவனுக்காக நான் அழறது . என் உரிமை அதை எந்தச் சட்டத்தாலயும் தடுக்க முடியாது நான் இதைப் பேசினாலே பொடாவுல போட்டுடுவாங்க. உங்களுக்கு ஏன் 'வம்பு’னு என் நண்பர்களே கேட்கிறாங்க. ஏங்க இது ஜனநாயக நாடுதானே நியாயமான விஷயங்களைப் பேசப் பயப்படற அளவு நாட்டிலே சர்வாதிகாரம் இங்கே இல்லைதானே? அப்புறம் என்ன பயம்? எதுக்கு பயம்?

"ரஜினிமேல கூடக் கோபப்பட்டு, ஒரு கூட்டத்துல பேசினதா செய்தி வந்ததே!"

நான் யாரையும் குறிப்பிட்டு பேசலை. தமிழ்நாட்டுக்கு தண்ணி தராம கர்நாடகாக்காரன் முரண்டு பிடிக்கிறான். தமிழ் டயலாக் இருக்குனு. சொல்லி சம்பந்தப் பட்ட கன்னடப் படத்துக்கு எதிரா போராட்டம் நடக்குது. இதுக்கெல்லாம் இங்கே உள்ள ஆறேழு கன்னடத்து நடிகர்கள் வாய்திறந்து ஒரு வார்த்தை பேசலை.

காசை இங்கே சம்பாதிச்சுட்டு கல்யாண மண்டபங்களை கர்நாடகாவிலே கட்டற ஆட்கள் இங்கே இன்னும் நடிச்சுட்டிருக்காங்க. தமிழர்கள் காசுல சொகுசா வாழற அவங்க, தமிழ் மண்ணுக்காகத் துரும்பைக் கூடக் கிள்ளிப் போடலை. அந்தக் கோபம்தான். அதுபோகட்டும். புதிய தமிழ்ப் படங்கள் எதுவும் இங்கே ரிலீஸ் ஆகிற அதே தேதியில கர்நாடகாவிலே ரிலிஸ் ஆகக்கூடாது. ஏழு வாரம் கழிச்சுத்தான் ரிலீஸ் பண்ணலாம்னு கட்டுப்பாடு விதிக்கிறாங்க. ஆனா ஒரே ஒரு நடிகருக்காக திடீர்னு அந்தக் கட்டுப்பாட்டையே ரெண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கிறாங்க இதென்ன விதிவிலக்கு எந்த ஊர் நியாயம் ஏழை மக்களோட ஒரே பொழுதுபோக்கு சினிமாதான் தியேட்டருக்கு வர்றதுக்கு இருநூறு. முந்நூறுன்னு டிக்கெட் விலையை ஏத்தினா அவனால எப்படிச் - சமாளிக்க முடியும்? வியாபாரம்னாலும் அதுக்கும் ஒரு லிமிட் உண்டே! அரசு எப்படி இதை அனுமதிக்குது. மக்களோட பாக்கெட்டை பகல் கொள்ளை அடிக்கிறதுக்கு சமம் இல்லையா இது? திருட்டு வி.சி.டி.க் காரன்தான் தின்னுட்டுப் போவான். பொதுவாகவே தமிழர்கள்கிட்டே ஒற்றுமையும் ஒன்றுபட்டு எதிர்க்கிற தைரியமும் கோபமும் குறைஞ்சுடுச்சு.

வந்தாரை வாழ வைக்கிற தமிழன்னு ஏதோ பதக்கத்தைச் சுமந்துட்டு அதை ஒரு பெருமையா நினைச்சுட்டு திரியறான். அதனாலதான் ரெண்டு தையல் மெஷின் மூணு சக்கர வண்டிகள் கொடுத்து நாலஞ்சு கல்யாணம்னு பண்ணி வைக்கிற நடிகனெல்லாம் திடீர்னு தலைவனாகிடறாங்க கடவுளாகிடறாங்க இப்போ வர்ற நடிகர்கள். வரும்போதே நாற்காலிக் கனவோடதான் வர்றாங்க! ஒவ்வொரு நடிகனுக்குள்ளும் கோட்டை நாற்காலிக் கனவு இருக்கத்தான் செய்யுது.

" நடிகர்களுக்கு ஏன் அரசியல் கனவுன்னு கேட்கறீங்களா"

"கனவு கானட்டும். அது அவங்க உரிமை. ஆனா. அதுக்காக கோடம்பாக்க ஸ்டுடியோக்கள்ல வீரத்தைக் காட்டாதே. படத்திலே பரபரப்பா வசனம் பேசனும்னு மக்களைக் குழப்பாதே. அதுதான் தப்பு. அய்யா நீ உதவி செய் நல்ல விஷயம். உன் உணர்வுகளைப் பேசு. அதையும் தடுக்கலை. ஆனா ஊருக்குள்ள போய் மக்கள்ட்ட பேசு. நானும் எம்.ஜி.ஆர்னு ஆளுக்காளு கிளம்பறது அசிங்கமா இருக்கு. இருபது வருஷம் ஒரு இயக்கத்துக்கு உழைச்சு, நல்ல கொள்கைகள் பேசி, நிறைய நல்லது பண்ணி ஜனங்க கஷ்டங்கள் புரிஞ்சு, அதுக்காக ஏதாவது செய்யனுமேனு தவிப்போட அரசியலுக்கு வந்தார் அவர். யார் வர்றதா இருந்தாலும் அப்படிவாங்க ஆளில்லாதபோது நேரா கைப்படி சி.எம். சேர்ல உட்கார்ந்துடலாம்னு நாற்காலிக் கனவோட நடிக்க வராதீங்க. அது மடத்தனம். சி.எம் நாற்காலியை மியூஸிகல் சேர் மாதிரி நினைக்கிறாங்க"

An Exclusive Interview With Bharathiraja
An Exclusive Interview With Bharathiraja

"அரசியல் வசனம் வந்தா ரசிகர்கள் கை தட்டறாங்கன்றதாலதானே சார் அடுத்தடுத்து இது தொடருது.?"

ஏலம் விட்டு, நெசவாளர்"யாருக்குக் கிடைக்கலை கைதட்டு 'துடைக்க சமூகசேவை ஹேர் -- - செய்யுங்க டி.ராஜேந்தருக்கும் பாக்யராஜூக்கும் கிடைக்காத கைதட்டா:தமிழ்நாட்டுல பசி, பஞ்சம்னு தலைவிரிச்சு ஆடுதே. அதுக்கு உதவி பண்ணுங்க. ஜாதிப் பிரச்னை தென்மாவட்டங்களிலே தலைவிரிச்சு ஆடுதே. அதுக்கு உங்க செல்வாக்கை வெச்சு சமாதானம் செய்யுங்க. விற்காம இருக்கிற கைத்தறித் துணிகளை உங்க கைளால் ஏலம் விட்டு, நெசவாளர் துயர் துடைச்சு சமூக சேவை செய்யுங்க. திண்ணியத்திலே மலம் தின்ன வெச்சு மனுஷனை மனுஷன் கேவலப்படுத்தினானே. அதைக் கண்டிச்சு செயல்ல இறங்குங்க.

இந்த மாதிரி அடிப்படை தனம் விஷயங்கள்ல ஒண்ணுகூடப் பண்ணாம. பதவிசுகத்துக்கு அலையற யாரும் பொது வாழ்க்கையில ஜெயிக்க முடியாது அதை உணரணும். 'காத்துள்ள போதே தூத்திக்கனும்' கறதை விட்டுட்டு காலாகாலத்துக்கும் நிக்கற மாதிரி ஆக்க பூர்வமா செயல்பட்டாதான் இங்கே இனிமே யாருக்கும் மரியாதை இல்லைனா காலம் காறித் துப்பிடும்"

- எஸ்.பி. அண்ணாமலை

(01.09.2002 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)