Published:Updated:

`` `சாப்பாடுக்கு என்ன பண்ணுவ'னு கேட்டாங்க; சினிமாவுக்கு ஓகே சொல்லிட்டேன்..!'' - `ஹிப்ஹாப்’ ஆதி

தார்மிக் லீ

இண்டிபெண்டென்ட் இசை, இசையமைப்பாளர், இயக்குநர், நடிகர் எனத் திரைத்துறையின் பல துறைகளில் கலக்கி வருகிறார், `ஹிப்ஹாப் தமிழா' ஆதி. இவர் பெயருக்கு முன்னால் இருக்கும் பட்டமே இவருக்கான அறிமுகத்தைச் சொல்லிவிடும். பல்வேறு வேலைகளில் இருந்தவரை, கல்லூரி மாணவர்களோடு கலந்துரையாட வைத்தோம்.

HipHop Tamizha Aadhi
HipHop Tamizha Aadhi

நீங்க கடந்து வந்த பாதையை இப்போ பார்க்கும்போது எப்படி இருக்கு?

HipHop Tamizha Aadhi
HipHop Tamizha Aadhi

"அப்போ எப்படி இருந்ததோ இப்பவும் அப்படித்தான் இருக்கு. ஓட வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கு. ஆனா, இப்போ இருக்கிறதைப் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு. எந்த மீடியம் மூலமாவும் நான் உள்ள வரலை. மக்கள், நட்புங்கிற மீடியம் மூலமாதான் நான் உள்ள வந்துருக்கேன். பல காலேஜ் மேடை ஏறிதான் இந்த நிலைமைக்கு வந்துருக்கேன். என் ரசிகர்களுக்கும் என்னைத் தூக்கிவிட்ட நண்பர்களுக்கும் என்றென்றும் நன்றியோட இருப்பேன். நான் இன்னுமே வெற்றியைத் தொடலைனுதான் நினைக்கிறேன். என்னுடைய கோல் இன்னும் நிறைய இருக்கு. அதை நோக்கித்தான் ஓடிட்டிருக்கேன்."

அப்பா, அம்மா ரெண்டு பேரும் டீச்சர்ங்கிறதால் வீட்டுல முதல் ரேங்க்தான் வாங்கணும்னு சொல்லுவாங்களா?

"ரேங்கிற மேட்டர் எங்க வீட்டுல இருந்ததே இல்லை. அதெல்லாம் வெறும் நம்பர்னுதான் எங்க அப்பா அடிக்கடி என்கிட்ட சொல்வார். ஆனா, நிறைய கத்துக்கச் சொல்வார். நான் இன்ஜினீயரிங் முடிச்சிட்டு மியூஸிக் பண்ணும்போதுகூட முதல்ல வேண்டாம் என்று சொன்னார். அப்புறம் அவருடைய பாயின்ட் ஆஃப் வியூவைச் சொன்னார். அதுக்கப்புறம், 'நீ பண்ணு; ஆனா, படிச்சிட்டே பண்ணு'னு சொன்னார். ஸ்கூலுக்கு ஜாலியா போய், படிச்சி முடிச்சேன். முதல் முறையா காலேஜ்ல எம் 1 பேப்பர்ல அரியர் வைக்கும்போது, 'என்னடா அரியர்லாம் வெச்சிட்டோம்'னு பதற்றம் இருந்தது. அப்புறம் எம் 2, எம் 3, எம் 4னு அதுவே பழகிடுச்சு. 7-வது செமஸ்டர்ல எல்லாத்தையும் க்ளியர் பண்ணிட்டேன். பண்ண கையோடு அப்பாகிட்ட, 'நான் சென்னை கிளம்பட்டுமா'னு கேட்டேன். 'இவன் விட மாட்டான் போல’னு நினைச்சு, 'போய்த்தொலை'னு சொல்லி அனுப்பி வெச்சார்."

Vikatan

12-வது தமிழ்ல்ல மாநில அளவு 3-வது இடம். தமிழ் மேல அப்போ இருந்தே ஈர்ப்பு இருந்ததா?

HipHop Tamizha Aadhi
HipHop Tamizha Aadhi

"10-வதுலேயும் நான் தமிழ்ல்லதான் அதிக மார்க் வாங்கியிருந்தேன். 11-வது போகும்போது முதல் நாள் ஸ்கூல்ல என்னுடைய மார்க் எல்லாத்தையும் சொல்லி, தமிழ் மார்க்கை மட்டும் ரொம்ப கர்வத்தோட சொன்னேன். `அதுனால எந்தப் பயனும் இல்லை. நீ 12-வதுல ஃபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, மேத்ஸ்னு இதைத்தான் படிச்சாகணும். அதுதான் கட் ஆஃப்க்கு உதவும்'னு சொல்லிட்டாங்க. ரொம்ப வெக்ஸ் ஆகிட்டேன். பசங்கலாம் ஃப்ரென்ச் எடுக்கச் சொன்னாங்க. உடனே எங்க தமிழ் டீச்சர் ராணியம்மாள் மேம்கிட்ட, 'தமிழ்ல்னால எந்தப் பயனும் இல்லையாமே'னு கேட்டேன். அப்போ ஒரு 30 நிமிஷம் தமிழைப் பத்தியும் அதோட சிறப்பைப் பத்தியும் சொன்னாங்க. இன்னைக்கு எனக்கு தமிழ் மேல இருக்க பற்றுக்கு ராணியம்மாள் டீச்சர்தான் காரணம்."

நீங்க வொர்க் பண்ற இயக்குநர்கள்கிட்ட, `இந்தப் பாட்டை நானே பாடுறேன்’னு சொல்லியிருக்கீங்களா?

"இதுவரைக்கும் சொன்னது இல்லை. பாட்டு கம்போஸ் பண்றதுக்காக டெமோ கொடுப்பேன். இதுதான் என்னுடைய முதல் படமான `ஆம்பள'ல இருந்து நடந்துட்டிருக்கு. சிச்சுவேஷன் சொன்னா இதுதான் என்னுடைய வொர்க்னு மொத்தமா முடிச்சிட்டுக் கொடுத்திடுவேன். இது அப்படியே தொடர்ந்து `கோமாளி' படம் வரைக்கும் வந்திருக்கு. அந்தப் படத்துடைய ரெண்டு பாட்டை 4 பேர் சேர்ந்து எழுதுனோம்."

"சில சமயம் ராப்னு வரும்போது யோசிக்காம என்கிட்ட கொடுத்திடுவாங்க. இதுவரைக்கும் நான் வொர்க் பண்ண எல்லா படங்களுடைய இயக்குநர்களும் ரொம்ப ஃப்ரெண்ட்லிதான்."
ஹிப்ஹாப் தமிழா ஆதி

சென்னை உங்களை எப்படி வரவேற்றது?

ஹிப்ஹாப் தமிழா ஆதி
ஹிப்ஹாப் தமிழா ஆதி

"சென்னை வந்தப்போ கிண்டிலதான் வந்து இறங்கினேன். நான் நிறைய தடவை சென்னை வந்திருக்கேன். ஆனா, பெட்டி படுக்கையோட வந்து இறங்குனது அப்போதான். எந்த ஊர்ல இருந்து கிளம்பி வந்தீங்கன்னாலும் 'சென்னை ஆட்டோக்காரங்க ஏமாத்திடுவாங்க'னு சொல்லி கேட்டிருக்கேன். அதுனால பஸ்ல போயிடலாம்னு தேனாம்பேட்டைக்குக் கிளம்பிப் போனேன். கோயம்புத்தூர் பஸ்ல ஏறினா, ’வாங்க தம்பி’னு வரவேற்பாங்க. அந்த எதிர்பார்ப்புலதான் பஸ் ஏறினேன். பஸ்ஸுக்கு நட்ட நடுவுல லக்கேஜை வெச்சிட்டு மேல கம்பியைப் பிடிச்சிட்டு ஸ்டைலா நின்னுட்டிருந்தேன். கண்டக்டர் வந்த உடனே முதல் பீப் வார்த்தையைப் போட்டார். ’ஏன்டா’னு சொல்லி இன்னொரு பீப் போட்டார். அப்புறம், ’இதை ஏன்டா நடுவுல வெச்சிருக்க’னு லாஸ்ட்டா ஒரு பீப். ஒரு நிமிஷம் இங்க எப்படி வாழப்போறோம்னு நினைப்பு வந்துடுச்சு. மூணு மாசம் கழிச்சு ஊருக்கே ஓடிப்போயிடலாம்னுகூட எண்ணம் வந்துச்சு. இன்னொரு பக்கம் அப்பாகிட்ட பேசின மாஸ் வசனங்களும் ஞாபகம் வந்திச்சு. அப்பா என்னைத் திட்டினாலோ, அடிச்சாலோ பரவாயில்லை. என்னை அவர் பேசியே ஒரு வருஷத்துக்கு மொக்கை பண்ணிடுவார். சரினு அப்படியே பழக ஆரம்பிச்சேன். ஒரு அளவுக்கு மேல சென்னை ரொம்ப அழகாகிடுச்சு. நான் அதிக வசதிகள் இல்லாத ஒரு ஏரியாவுலதான் இருந்தேன். ஆனா, அங்க பழகினப்புறம் அங்கிருக்கறவங்க எல்லோரும் உறவுக்காரங்க மாதிரி ஆயிட்டாங்க. பஸ்ல போகும்போது கானா பாட்டுலாம் பாடுவாங்க. ஒரு மாதிரி ஜாலியாக ஆரம்பிச்சிடுச்சு."

உங்களுடைய முதல் ஹிப்ஹாப் பாடலை வெளியிடும்போது எப்படி இருந்தது?

"அப்போ ஹிப்ஹாப்னா என்னனு யாருக்கும் தெரியலை. அதைத் தெரியபடுத்த நிறைய முயற்சி பண்ணேன். அந்தச் சமயத்துலதான் 'எதிர்நீச்சல்'ல பாட்டு பண்ற வாய்ப்பு வந்தது. 'நான் படத்துல பண்ண மாட்டேன்; நான் உண்மையான ஹிப்ஹாப் பாடகர்'னு சொன்னேன். 'சரி சாப்பாடுக்கு என்ன பண்ணுவ'னு கேட்டாங்க. ’ஓகே பண்றேன்’னு சொல்லி பண்ணதுதான் அந்தப் பாட்டு. இன்னைக்கு ஹிப்ஹாப்னா என்னானு எல்லாத்துக்கும் தெரிஞ்சிடுச்சு. ஆனா, ஆரம்பத்துல நம்மை ஒரு பக்கம் ஒதுக்கிடுவாங்களோனு பயம் இருந்தது."

அனிருத் பக்கம் பக்கமாக புலம்புவார்! - `மிர்ச்சி' விஜய் & ஷா

’ஹிப்ஹாப்’ ஆதி கல்லூரி மாணவர்களோடு கலந்துரையாடிய முழுமையான உரையாடலை கீழே உள்ள வீடியோவில் பார்க்கலாம்...