Published:Updated:

கட்டப்பா சஞ்சய்தத், ராஜமாதா ஸ்ரீதேவி!

கட்டப்பா சஞ்சய்தத், ராஜமாதா ஸ்ரீதேவி!
பிரீமியம் ஸ்டோரி
News
கட்டப்பா சஞ்சய்தத், ராஜமாதா ஸ்ரீதேவி!

கதையை அஞ்சு மாசத்துல எழுதி முடிச்சேன். பையன் எழுதும்போது கூடவே இருந்தான்.

இந்திய சினிமாவின் முக்கியக் கதாசிரியர், வசனகர்த்தா. ‘பாகுபலி’, ‘மகதீரா’ போன்ற படைப்புகளை எழுதியவர். இயக்குநர் ராஜமெளலியின் தந்தை என்று பல அடையாளங்களைக் கொண்ட விஜயேந்திர பிரசாத்திடம் பேசினேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விஜயேந்திர பிரசாத்
விஜயேந்திர பிரசாத்

‘`தமிழிலிருந்தே ஆரம்பிப்போம். ‘மெர்சல்’ படத்துக்கு முன்னாடி தமிழில் வேறு எந்தப் படத்துக்கும் நீங்க பண்ணலையே?’’

‘`யாரும் கூப்பிடல. முதல் முறையா அட்லிதான் கூப்பிட்டார். ரொம்பத் திறமையான பையன். திரைக்கதை எழுதுறப்பவும், இந்தக் கதையை அட்லி, விஜய்கிட்ட சொன்னப்பவும் நானும் இருந்தேன். விஜய் எப்படிக் கதை கேட்கிறார்னு கவனிச்சேன். அதேமாதிரி ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போயும் பார்த்தேன். விஜய் ஜென்டில்மேன். ரொம்ப அமைதி. இப்படிப்பட்ட பையனா விஜய் இருப்பார்னு நான் எதிர்பார்க்கல.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கட்டப்பா சஞ்சய்தத், ராஜமாதா ஸ்ரீதேவி!

‘`ஜெயலலிதாவின் பயோபிக்கான ‘தலைவி’ படத்துக்குக் கதை, வசனம் எழுதியிருக்கீங்க... ஜெயலலிதாவுடன் உங்களுக்கு நேரடிப் பழக்கம் இருந்ததா?’’

‘`நிறைய கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, நேர்ல பார்த்ததில்ல. தயாரிப்பாளர் விஷ்ணுதான் இயக்குநர் விஜய்யை எனக்கு அறிமுகப்படுத்தி வெச்சார். நிறைய தகவல்கள் ஜெயலலிதா பற்றி கலெக்ட் பண்ணியிருந்தார். அதையெல்லாம் கொண்டுவந்திருந்தார். தவிர, நானும் தினமும் ஜெயலலிதா பற்றி வந்த செய்திகளையெல்லாம் சேகரிச்சு வெச்சிருந்தேன். அதனால, திரைக்கதை, வசனம் எழுதுறது சுலபமா இருந்தது. மூணு மாசத்துல திரைக்கதையை முடிச்சிட்டேன். எழுதுறப்போ விஜய் கூடவே இருந்தார். கங்கனாவை ஹீரோயினா வெச்சுதான் புராஜெக்ட்டே ஆரம்பமாச்சு. நல்ல ஸ்ட்ராங்கான நடிகை. அவங்களோட இந்திப் படங்களில் வேலை பார்த்திருக்கேன். இப்போ அயோத்தி பிரச்னையை மையமா வெச்சு கங்கனா இயக்கவிருக்குற ‘அபரஜிதா அயோத்யா’ படத்துக்கு நான்தான் கதை எழுதியிருக்கேன்.’’

கட்டப்பா சஞ்சய்தத், ராஜமாதா ஸ்ரீதேவி!

‘`அமீர்கான் நடிக்க இருக்கும் ‘மகாபாரதம்’ படத்துக்கும் நீங்கதான் எழுத்தாளர்னு கேள்விப்பட்டோமே?’’

‘`அமீர்கான் இப்படி ஒரு படம் பண்ணப்போறார்னு கேள்விப்பட்டேன். மத்தபடி அந்த புராஜெக்ட்ல நானில்லை. இருந்தா நல்லாருக்கும்.’’

‘`வரலாற்றுக் கதைகளை இன்னைக்கு இருக்குற இளைஞர்களும் ரசிக்கும்படி எப்படி எழுதுறீங்க?’’

‘`ஒரு கதை எழுதுறப்போ யாருக்குப் பிடிக்கும், யாருக்குப் பிடிக்காதுன்னுல்லாம் யோசிக்க மாட்டேன். எனக்குப் பிடிச்சிருக்கான்னு மட்டும்தான் பார்ப்பேன். அதே மாதிரி பெரிய ஹீரோக்களுக்கு ஏத்த மாதிரி கதையோட போக்கை மாத்த மாட்டேன்.’’

‘` ‘பாகுபலி’ படத்தோட கதை எங்கே இருந்து ஆரம்பமாச்சு?’’

‘`அந்தக் கதை எழுதுறதுக்கு முன்னாடி ராஜமெளலி, ‘அப்பா, பிரபாஸ் வெச்சு ஒரு படம் பண்ணலாம்னு ப்ளான் பண்ணியிருக்கோம். பீரியட் கதையா, நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்கிற கதையா ரெடி பண்ணுங்க’ன்னு சொன்னார். எண்பது வயசுக் கிழவர் ஒருத்தர் போர்க்கலை கத்துக்கொடுக்க இந்தியாவுக்கு வர்றார். அவரோட உடலமைப்பைப் பார்த்துட்டு, ‘இந்த வயசுலயும் எப்படி இத்தனை வலிமையோட இருக்கீங்க’ன்னு இங்க இருக்கிற இளைஞர்கள் கேட்குறாங்க. கிழவன் உடனே, ‘ நீங்க பாகுபலியைப் பார்த்ததில்லையா’ன்னு கேட்குறார். ‘பாகுபலினா யார்’னு இளைஞர்கள்கிட்ட இருந்து திரும்ப கேள்வி வருது. ‘மன்னன் பாகுபலி குதிரையில போயிட்டு இருந்தப்போ இருநூறு பேர் அவரைத் தாக்குறாங்க. அப்போ சண்டை நடக்குது. பாகுபலி உடல் முழுக்க ரத்தமா இருக்கு. ஆனா, பாகுபலிக்கு எதுவும் ஆகல. அந்த ரத்தம் முழுக்க யுத்தத்தில் மாண்டவர்கள் சிந்தியது. அது, பாகுபலி மேல தெளிச்சிருக்கு. அந்தத் தோற்றத்துல பாகுபலி உட்கார்ந்திருக்குற தோரணை சிவன் மாதிரியே இருந்தது. அத்தகைய போர் வலிமை மிக்கவன் பாகுபலி’ன்னு கிழவன் பதில் சொல்வார். அந்தச் சண்டைக்காட்சி மகாபாரதத்துல அபிமன்யு போட்ட யுத்தக் காட்சியைப் போல இருந்ததுன்னு சொல்வார். இந்தக் கதையைக் கேட்ட இளைஞர்கள் ‘இப்போ, பாகுபலி எங்கே இருக்கார்’னு கேட்பாங்க. ‘செத்துட்டார்’னு கிழவன் பதில் சொல்வார். ‘எப்படி’ன்னு எல்லாரும் ஆச்சர்யப்பட, ‘கத்தியால குத்திட்டாங்க’ன்னு கிழவன் சொல்வார். ‘யாராலும் வெல்ல முடியாத பாகுபலியை எப்படி கத்தியால கொன்னாங்க’ன்னு சுத்தியிருந்தவங்க கேட்கவும், கிழவர் அமைதியா, ‘நான்தான் முதுகுல குத்திட்டேன்’னு பதில் சொல்வார். அந்தக் கிழவன் கேரக்டர்தான் கட்டப்பா. இந்த கேரக்டரைத்தான் பையன்கிட்ட முதல்ல சொன்னேன். ராஜமெளலிக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. முதல்ல கட்டப்பா கேரக்டரை எழுதி முடிச்சேன். அதுல இருந்து மத்த கேரக்டர்களுக்கு டிராவல் ஆனேன்.

கட்டப்பா சஞ்சய்தத், ராஜமாதா ஸ்ரீதேவி!

ஒரு அம்மா உயிருக்குப் போராடின நிலையில ஆற்றைக் கடக்க முயற்சி பண்ணுறாங்க. தலை முங்குற அளவுக்கு ஆத்துல தண்ணி ஓடிக்கிட்டு இருக்கு. அப்போ, அந்த அம்மாவுடைய கைக்கு மேல ஒரு குழந்தை இருக்கு. அந்தக் குழந்தையைக் காப்பாத்தணும்னு நினைக்கிறாங்கன்னு அடுத்த காட்சியைச் சொன்னேன். பெண்களோட கேரக்டர் ரொம்ப வலிமையா இருக்கணும்னு முடிவு பண்ணித்தான் எழுதினேன். கதையை அஞ்சு மாசத்துல எழுதி முடிச்சேன். பையன் எழுதும்போது கூடவே இருந்தான்.’’

கட்டப்பா சஞ்சய்தத், ராஜமாதா ஸ்ரீதேவி!

‘`பிரபாஸ்தான் ஹீரோன்னு முடிவு பண்ணி ஆரம்பிச்ச படத்துக்குள்ள மற்ற நடிகர்கள் எப்படி வந்தாங்க?’’

‘`பிரபாஸ் மட்டுமல்ல, கதை எழுதும்போதே தேவசேனா அனுஷ்காதான்னும் முடிவு பண்ணிட்டோம். கட்டப்பா கேரக்டருக்கு சஞ்சய் தத் நடிச்சா நல்லாருக்கும்னு தோணுச்சு. ஆனா, அப்ப சஞ்சய் தத்துக்கு சில சட்டப் பிரச்னைகள் இருந்தது. அதனால, சத்யராஜ் சார் கிட்ட போனோம். சிவகாமி கேரக்டருக்கு முதல்ல ஸ்ரீதேவியைத்தான் யோசிச்சோம்.’’

கட்டப்பா சஞ்சய்தத், ராஜமாதா ஸ்ரீதேவி!

‘` ‘பாகுபலியை ஏன் கட்டப்பா கொன்னார்’ன்ற கேள்விதான் இரண்டாவது பாகத்துக்கான ஆர்வத்தை அதிகப்படுத்தியது. இதை முன்கூட்டியே திட்டமிட்டு எழுதினீங்களா?’’

‘`படத்தோட ரீ ரெக்கார்டிங்கின் போது இசையமைப்பாளர் கீரவாணி, ‘கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்னார்’னு இருக்குற விஷயத்தை படத்தோட பாதியில கொண்டு வராம படம் முடியும்போது வெச்சிருங்க’ன்னு சொன்னார். அதனால, கடைசி நேரத்துலதான் காட்சியை மாத்தினோம். இதுக்கு முன்னாடி குழந்தையைக் கையில தூக்கிட்டு ‘இவன்தான் அரசன்’னு சிவகாமி சொல்ற காட்சியைத்தான் முதல் பகுதி முடியுற இடத்துல வெச்சிருந்தோம். ஆனா, கீரவாணி சொன்ன விஷயம் படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்த உதவியது.’’

கட்டப்பா சஞ்சய்தத், ராஜமாதா ஸ்ரீதேவி!

‘`இப்ப எல்லோரும் வெப்சீரிஸை நோக்கிப்போறாங்க... உங்களுக்கு அதில் பணியாற்றும் ஆர்வம் இருக்கா?’’

‘`வெப்சீரிஸுக்குக் கதை எழுதுற ஐடியா எனக்கிருக்கு. ஆனா, ராஜமெளலிக்கு வெப்சீரிஸ் இயக்குறதுல உடன்பாடில்லை.’’