Published:Updated:

"என் பிடி தளர்ந்து போச்சா? - விஜய்"

An Exclusive Interview - Vijay
பிரீமியம் ஸ்டோரி
An Exclusive Interview - Vijay

நல்ல திறமைகளைப் பத்தி நாலு வார்த்தை பேசுறதுல என் தகுதி என்ன குறைஞ்சிடுமா என்ன, சொல்லுங்க!" - விஜய்

"என் பிடி தளர்ந்து போச்சா? - விஜய்"

நல்ல திறமைகளைப் பத்தி நாலு வார்த்தை பேசுறதுல என் தகுதி என்ன குறைஞ்சிடுமா என்ன, சொல்லுங்க!" - விஜய்

Published:Updated:
An Exclusive Interview - Vijay
பிரீமியம் ஸ்டோரி
An Exclusive Interview - Vijay

மீசையில்லாத விஜய். தீவாவளி ரிலீஸ் 'திருமலை'யை முடித்துவிட்டுக் காத்திருக்கிறார். அடுத்த படம் 'கில்லி'ஷூட்டிங் ஆரம்பித்துவிட்டது. பாடல் ஒன்றை (திருமலை?) ஹம் பண்ணியபடியே வந்தவர். நம்முடன் பேசத் தயாரானார்."திருமலை எப்படி வந்திருக்கு?"

"சூப்பரா! 'ரொம்பப் புதுமையான கதை தமிழ் சினிமாவையே புரட்டிப் போட்டுரும்'னெல்லாம் கிடையாது. லவ், ஆக்ஷன்னு செம மசாலா கதை. திருமலை என்கிறவன் செம ஜாலியான பையன். அவனோட பாதையில் ஒரு பொண்ணு வருவா பயங்கரமான ஒரு வில்லன் வருவான். வாழ்க்கையிலும் நடக்கக்கூடிய விஷயங்கள்தான். ஆனா திருமலை எப்படி பீல் பண்றான்கிறதுதான் புதுசு!"

"உங்களோட கடைசி மூணு படங்கள் பெரிசா போகாததுக்குக் காரணம் கதை விஷயத்தில் உங்க தலையீடுதான்னு சொல்றாங்களே.."

 "ஒரு கதை பிடிச்சுப் போச்சுன்னா அதை ரெண்டு மூணு தடவை சொல்லச் சொல்லிக் கேட்பேன். எனக்குத் தோணுற சில  மாற்றங்கள் சொல்வேன். அதுக்குப் பேர் தலையீடு இல்லை. ஆர்வம்!  சில சமயம் நான் ஆசைப்பட்ட மாதிரியே படம் பளிச்சுனு வருது சில சமயம் எங்கேயோ தப்பு நடந்துடுது. அதுக்காக யாரையும் குறை சொல்லமாட்டேன். என் படம் ஓடலேன்னா அதுக்கு நான் தான் பொறுப்பு. காரணம், நான்தானே செலக்ட் பண்ணினேன். அப்போ நான் தானே காரணமா இருக்க முடியும். ஆனா, முன்னைவிட இப்ப தெளிவாகிட்டேன் மிக நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்கிறேன். இப்ப முடிச்சிருக்கிற 'திருமலை'யும் சரி. ஆரம்பிச்சிருக்கிற 'கில்லி'யும் சரி. சப்ஜெக்ட் 'நச்'சுனு இருக்கும்!"

"பெரிய ரசிகர் கூட்டம் இருந்தும் வழக்கமான படம்தானே பண்றீங்க.. வித்தியாசமான கெட்- அப்புல தீவிரமானமான கதையம்சம் கொண்ட படத்துல நடிக்கணும்னு ஆசையே வராதா?"

"என் முகத்தைப் பாருங்க காலேஜ் முடிச்சிட்டு வேலை தேடற பையன் மாதிரி இருக்கேன். என்னோட வயசு, முகம் இதுக்கு எது சரியா வருதோ அதைத்தான் பண்ணுவேன். பெரிய காரெக்டர் மாற்றமோ மேக்கப் வித்தியாசமோ  நான் செய்யலைதான். அதுக்கு இன்னும் வயசு இருக்கு ஒரு கதை சிக்கனும் கெட்-அப் மாத்தனும்கிறதுக்காக சும்மா கதை விடக்கூடாது."

An Exclusive Interview - Vijay
An Exclusive Interview - Vijay

"ரஜினி கமலுக்குப் பின்னாடி விஜய் அஜீத்னு எல்லாரும் பேசினாங்க இப்போ தனுஷ், சிம்பு, ரவினு வரிசையா உள்ளே புகுந்துட்டாங்களே. உங்க பிடி தளர்ந்து போச்சா?"

"அப்படியா நினைக்கறிங்க: (சிரிக்கிறார்)  எனக்குனு ஒரு இடம் இருக்கு அதை யாரும் எடுத்துக்க முடியாது என் பிடியை நான் விட்டாத்தானே மத்தவங்க பிடிக்க. புதுசா ரெண்டு படம் ஓடிடுச்சுன்னா ஏதோ டிரெண்டே மாறிப்போய்ட்ட மாதிரி தான் தோணும். ஆனா அவங்கவங்க இடம் அப்படியே இருக்கு நான் யாரையும் சாதாரணமா நினைக்கிறதில்லை. அதே சமயம் யாரைப் பார்த்தும் கவலைப்படறதும் இல்லை. புதுசா வர்றவங்க என்ன பன்றாங்கனு, கண்கொத்திப் பாம்பா கவனிக்சுக்கிட்டேதான் இருக்கேன் இந்த மூனு பேருமே யதார்த்தமா பண்றாங்க துடிப்பா இருக்காங்க . அவங்க பங்குக்கும் தமிழ் சினிமாவுக்கு ஏதாவது பண்ணட்டுமே! குறிப்பா தனுஷ் ஒரு சின்ன அலை உண்டாக்கிட்டாரு. அவர் நல்லா வருவதற்கான ஸ்கோப் இருக்குனு நினைக்கிறேன்!"

"மனசுல இறுக்கம் இல்லாம பாராட்டறதுக்கும் பெரிய மனசு வேணும்."

"திட்டம் போட்டா பேசுறோம். நிஜமாவே ரசிக்கிறேன். மனசாரப் பாராட்டறேன். விக்ரம் கூட படங்களை விதவிதமாப் பண்றார். நல்ல விஷயம்தான். நல்ல திறமைகளைப் பத்தி நாலு வார்த்தை பேசுறதுல என் தகுதி என்ன குறைஞ்சு போயிடும், சொல்லுங்க!"

"எப்பவும் தனிமையில் இருக்கிற மாதிரி ஒரு முகபாவத்தோட இருக்கீங்க காமிராவுக்குப் பின்னாடி சிரிச்சுப் பேசி கலகலப்பா இருக்க மாட்டீங்களா?”

"சரியாச் சொன்னீங்க ஆனா, எப்பவுமேவா இப்படி இருக்கேன்? (சிரிக்கிறார்) இது என்னோட சுபாவம். நான் என்னை மாத்திக்கணும்னு நினைச்சாதான் அது நடிப்பு. என்னடா இந்த ஆள் இப்படி உம்முனு இருக்கானேனு பேசினவங்க எல்லாம் போகப் போக என்னைப் புரிஞ்சுக்கிட்டாங்க புரியாதவங்களும் பின்னாடி புரிஞ்சுக்குவாங்க"

An Exclusive Interview - Vijay
An Exclusive Interview - Vijay

"மனைவியோடு பிரச்னை, அதனால்தான் லண்டன் கலைவிழாவுக்குக் கூடப் போகவில்லை என்றெல்லாம்."

"இதோ பாருங்க. நான் சந்தோஷமா இருக்கேன் என் மனைவி, குழந்தை என்கிற சின்ன உலகத்தில் முழு திருப்தியோடு இருக்கேன் என் பையன் சஞ்சய் படுஸ்மார்ட் ஒரு பிட் மியூஸிக் கேட்டால் போதும், அது என்ன பாட்டுனு கண்டுபிடிச்சுடறான். எந்த நடிகர், நடிகைகளின் படத்தைக் காட்டினாலும் அவங்க பெயர் அவனுக்குத் தெரியுது. பையனோட பேச்சையும் லூட்டியையும் நானும் சங்கீதாவும் பேரானந்தமா ரசிச்சுக்கிட்டு இருக்கோம்" கைகளை தலைக்குப் பின்னே கோத்துக்கொண்டு மென்மையாகப் புன்னகைக்கிறார் விஜய்.

- நா.கதிர்வேலன்

(05.10.2003 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் இருந்து...)
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism