Published:Updated:

`` `நான் இதுதான்'னு பேசுற பசங்களை பொண்ணுங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்!" - `சில்லுக்கருப்பட்டி' நிவேதிதா

நிவேதிதா
நிவேதிதா

`சில்லுக் கருப்பட்டி' படத்தில் `காக்கா கடி' கதையில் க்யூட் மதுவாக நடித்த நிவேதிதாவுடன் ஒரு ஜாலி சாட்!

`` `சில்லுக்கருப்பட்டி’ படத்துக்கு இவ்வளவு பெரிய ரெஸ்பான்ஸ் கிடைக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை. என்னுடைய போர்ஷனான `காக்கா கடி', 2018 சமயத்துல எடுத்தது. ரெண்டு வருடங்கள் வெயிட் பண்ணதுக்கான ரிசல்ட்டை ரசிகர்கள் இப்போ கொடுத்திருக்கதுல ரொம்ப மகிழ்ச்சி. நல்ல படத்தை ரசிகர்கள் எப்பவுமே வரவேற்கணும்" என ஆரம்பிக்கிறார் நிவேதிதா.

நிவேதிதா
நிவேதிதா
`` `சில்லுக்கருப்பட்டி' அமுதினி எனக்கு ரொம்பவே  ஸ்பெஷல்! ஏன்னா..." - சீக்ரெட் சொல்லும் சுனைனா 

`சில்லுக்கருப்பட்டி’க்குள்ள வந்த கதை?

நிவேதிதா
நிவேதிதா

`` `மகளிர் மட்டும்’ படம் பார்த்துட்டுதான் ஹலீதா என்னை `சில்லுக் கருப்பட்டி'க்காகப் பார்க்க வந்தாங்க. அவங்களுக்கு என்கிட்ட பிடிச்சதே என்னுடைய வாய்ஸ்தான். முதல்ல அந்தப் படத்துல வேறொரு கதைதான் நான் பண்றதா இருந்தது. ஹலீதாதான், `காக்கா கடி உங்களுக்காகவே எழுதினது'னு சொன்னாங்க. அந்தக் கதையில வர்ற மதுதான் என்னுடைய ரியல் கேரக்டர். அதுக்காகவே என்னுடைய நிஜப் பெயரான மதுமிதாவை சுறுக்கி, மதுனு படத்துல வெச்சிட்டாங்க. பொதுவா திரையில நம்முடைய கம்ப்ஃபோர்ட் ஸோனை விட்டு வெளிய வந்து நடிச்சு, பர்ஃபார்ம் பண்ண முடியும். ஆனா, அதைத் தொடர்ந்து நடிக்கிறது ரொம்பவே கஷ்டம். அதையும் என்கிட்ட இருந்து அழகா வெளிக்கொண்டு வந்தது ஹலீதாதான். இதைப் புரிஞ்சு படத்துல என்னைப் பாராட்டினவங்களுக்கு நன்றி சொல்லிக்கிறேன்."

`சில்லுக்கருப்பட்டி’க்காக உங்களுக்கு வந்த மறக்க முடியாத வாழ்த்து?

நிவேதிதா
நிவேதிதா

``பா.இரஞ்சித், மோகன் ராஜா, ஏ.ஆர். முருகதாஸ், சமுத்திரக்கனி, லிங்குசாமினு நிறைய இயக்குநர்கள் என்னை வாழ்த்தினாங்க. இந்தப் படத்தைப் பார்க்கப் போகும்போது ஒருத்தருடைய சிஸ்டருக்குக் கேன்சர் இருந்தது. படத்தைப் பார்த்துட்டு, `கேன்சர் படங்களை எல்லாம் நான் அதிகம் பார்க்க மாட்டேன். ரொம்பக் கஷ்டமா இருக்கும். ஆனா, கேன்சரை ஒரு பெரிய பிரச்னையா பார்க்காமா, நீங்க ட்ரீட் பண்ணியிருக்க பாசிட்டிவ் விதத்தைப் பார்த்தா சேன்சர் இருக்கவங்களே சந்தோஷப்படுவாங்க'னு சொன்னார். எமோஷனலா எனக்கு அது மறக்க முடியாதா வாழ்த்தா இருந்தது."

நிங்க டான்ஸர்னு சொல்லியிருந்தீங்க. தமிழ் சினிமால யாரோட டான்ஸுக்கு நீங்க ரசிகை?

நிவேதிதா
நிவேதிதா

``விஜய், பிரபுதேவா டான்ஸுக்குலாம் நான் பயங்கர ஃபேன். இப்போ யாருன்னு கேட்டீங்கனா... தனுஷ், சூர்யாவைச் சொல்வேன். ஆரம்பத்துல இருந்ததுக்கும், இப்போ இவங்களோட டான்ஸுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். அவங்களோட டான்ஸிங் ஸ்டைல் ரொம்பப் பிடிச்சிருக்கு.”

நீங்க நடிச்ச படங்கள்ல உங்களுக்கு டான்ஸ் போர்ஷன் இல்லைனு வருத்தம் இருந்ததா?

நிவேதிதா
நிவேதிதா

``நிச்சயமா இல்லை. தேவையிருந்தா மட்டும்தான் இப்போலாம் படத்துல பாட்டே வைக்கிறாங்க. என்னுடைய சினிமா கரியர்ல மொத்தமே 20 படங்கள் பண்ணா போதும்னுதான் நெனச்சிட்டிருக்கேன். பொதுவா நான் ஒரு படத்துல நடிச்சிருந்தா அந்தப் படம் நல்லா இருக்கணும்னு ரசிகர்கள் நம்பணும். இதுதான் எனக்குத் தேவை. சமீப காலமா சினிமாக்கான ஃப்ளேவர் மாறிகிட்டே இருக்கு. நல்ல படத்தை ரசிகர்கள் ஏத்துக்குறாங்க. அதுல என்னுடைய கேரக்டருக்கு ஸ்கோப் இருந்தா நல்லா இருக்கும். கதைக்குத் தேவைப்பட்டா பாட்டு இருக்கட்டும். அவ்ளோதான்."

`சில்லுக்கருப்பட்டி’ல மதுவுக்கு ஹீரோ மேல காதல் வர்ற புள்ளி?

நிவேதிதா
நிவேதிதா

``பொதுவா பொண்ணுங்களுக்கு, `நான் இதுதான், இப்படித்தான்'னு உண்மையைப் பேசுற பசங்களை ரொம்பப் பிடிக்கும். அதே கான்சப்ட்தான் இங்கேயும். `காக்கா கடி'ல, ஹீரோ ஆரம்பத்துல இருந்தே தனக்கு என்ன பிரச்னைங்கிறதை, மறைக்காம அந்தப் பொண்ணுக்கிட்ட சொல்லிட்டே இருப்பார். அப்படி இருக்கும்போது எதிர்ல இருக்கவங்க அதை ஏத்துக்கிட்டு, சப்போர்ட் பண்ணுவாங்க. இந்த ஒரு விஷயம்தான் அவங்க காதலுக்கான தொடக்க புள்ளியா இருக்கும்.''

`சில்லுக்கருப்பட்டி’ வெற்றிக்கு காரணமா நீங்க நினைக்கிறது?

நிவேதிதா
நிவேதிதா
காட்சி மொழியில் ஒரு கவிதை... 5 விகடன் விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்படும் `சில்லுக் கருப்பட்டி'!

"இது ஒரு தைரியமான முயற்சி. படத்துல வர்ற நாலு கதையும் நாலு தளம். வெவ்வேறு மேஜரான விஷயங்களைப் பேசின படம். அது மட்டுமல்லாம இந்தக் கதை எல்லாம் நம்முடைய வாழ்க்கையில வெவ்வேறு வடிவத்துல நடக்கக்கூடிய விஷயம். சில சமயம் அது நமக்குத் தெரிய வாய்ப்பு இல்லாமலே போயிடும். இந்த மாதிரி சென்சிட்டிவான விஷயங்களை எல்லோருக்கும் போய் சேர வெச்சதுலதான் `சில்லுக் கருப்பட்டி' தனிச்சுத் தெரியுது. ஹலீதாவும் அதை நேர்த்தியா பண்ணியிருக்காங்கனுதான் சொல்வேன்."

அடுத்த கட்டுரைக்கு