Published:Updated:

இது கொண்டாட்டத்தின் திருவிழா..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
எஸ்.எஸ்.வாசன் விருதுடன் பாரதிராஜா
எஸ்.எஸ்.வாசன் விருதுடன் பாரதிராஜா

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019

பிரீமியம் ஸ்டோரி

2019-ம் ஆண்டுக்கான தமிழ் சினிமா சாதனை யாளர்களைக் கௌரவிக்கும் ‘ஆனந்த விகடன் சினிமா விருதுகள்’ நிகழ்ச்சி ஜனவரி 11-ம் தேதி சென்னை வர்த்தக மையத்தில் நடந்து முடிந்தது. இந்த முறை உச்ச நட்சத்திரங்களுடன் சற்றே வித்தியாசமாக நூற்றுக்கும் மேற்பட்ட வாசகர்களையும் விழாவுக்கு அழைத்து அட்டகாசம் செய்திருந்தான் விகடன்! அந்த சுவாரஸ்ய நிகழ்வின் அப்ளாஸ் தருணங்கள் இதோ...

சிறந்த நடிகர் தனுஷ்
சிறந்த நடிகர் தனுஷ்

ஆனந்த விகடனின் நிறுவனர் எஸ்.எஸ்.வாசன் பற்றிய அறிமுகத்துடன் பிரம்மாண்டமாய் தொடங்கியது விழா. விழாவைத் தொகுத்து வழங்கிய புது மாப்பிள்ளை சதீஷுக்கு, வந்திருந்த பிரபலங்கள் அனைவரும் வாழ்த்துகளைப் பரிசளிக்க, நாயகிகளைக் காட்டிலும் அதிகமாய் வெட்கப்பட்டார் சதீஷ். உடன் தொகுப்பாளினி நட்சத்திராவும் இணைந்துகொள்ள, களை கட்டியது நிகழ்ச்சி.

சிறந்த நடிகை தாப்ஸி - ‘லாபம்’ படக்குழுவினர்
சிறந்த நடிகை தாப்ஸி - ‘லாபம்’ படக்குழுவினர்

விழா முழுக்கவே ‘பார்ட் 2’ படங்களுக்கான ஒத்திகையாக அமைந்தன. சிறந்த நடிகர் விருதுபெற்ற தனுஷ், ‘புதுப்பேட்டை 2’ படம் பற்றி கொக்கி போட, ‘‘கண்டிப்பாய் நடக்கும்’’ என உறுதியளித்தார் செல்வராகவன். கொக்கி குமாரு அதன் பின் சும்மா இருப்பாரா என்ன... டக்கென்று, சிறந்த இயக்குநர் விருதுபெற்ற வெற்றிமாறனிடம், ‘‘வடசென்னை 2 அன்பு எழுச்சி காண்பது எப்போது?’’ என ஏக்கமாய் கேட்க, ஆர்ப்பரித்தனர் தனுஷின் ரசிகர்கள். அடுத்து, ‘அசுரன் 2’ பற்றி கேட்க, `இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே’ என்பதுபோல் பார்த்து, பின் சுதாரித்து, ‘‘கண்டிப்பாக... கண்டிப்பாக...’’ என்று தன் டிரேட் மார்க் புன்னைகையைப் பரிசளித்தார் வெற்றிமாறன். விழாவின் மற்றுமொரு ஹைலைட் சூர்யா - வெற்றிமாறன் இணையும் படத்துக்கான தலைப்பு பற்றிய அறிவிப்பு. சிசு செல்லப்பா எழுதிய ‘வாடிவாசலை’தான் அதே தலைப்பில் படமாக்கவிருப்பதாக அறிவித்தார் வெற்றிமாறன்.

சிறந்த கதைக்கான விருது வென்ற அதியன் ஆதிரை, ‘‘அனைவரையும் தோழர் என அழைப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன். ‘வழக்கு எண் 18/9’ படத்தின்போது தியேட்டரில் ‘தோழர்’ என அழைத்த ஒரே காரணத்துக்காக ஜனநாதன் எனக்கு பாப்கார்ன் வாங்கித் தந்தார்’’ என்று மலரும் நினைவுகளை அசைபோட்டார்.

‘‘எல்லாப் படங்களிலும் அரசியல் இருக்கிறது. சில படங்கள் அதை வெளிப்படையாகப் பேசுகின்றன. ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும்கூட அரசியல் இருக்கிறது’’ என்ற ஆழமான கருத்தை முன்வைத்தார் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்.

‘அசுரன்’ ஆறு விருதுகளையும், ‘சூப்பர்’ டீலக்ஸ் நான்கு விருதுகளையும் தட்டிச் சென்றது. ‘‘மதுரை மாதிரியான ஊர்களில் ‘அசுரன்’ படம் வெற்றிகரமாக ஓடியது, என்னைப் போன்ற இயக்குநர்களுக்குப் பெரிய நம்பிக்கையை அளிக்கிறது’’ என்றார் இயக்குநர் பா.இரஞ்சித்.

இது கொண்டாட்டத்தின் திருவிழா..!

வாழ்நாள் சாதனையாளருக்கான எஸ்.எஸ்.வாசன் விருதை அரங்கிலிருந்த அனைத்து இயக்குநர்களும் மேடையேறி பாரதிராஜாவுக்கு வழங்கினர். நடிகர்கள் தனுஷ், விஜய் சேதுபதி, இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், இராதாகிருஷ்ணன் பார்த்திபன், செல்வராகவன், மிஷ்கின், வெற்றிமாறன், தாப்ஸி, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட ஏராளமான சினிமா பிரபலங்கள் விழா அரங்கை அலங்கரித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு