Published:Updated:

விகடன் ரிவ்யூ பைட்ஸ்: `கன்னி மாடம்', `காட் ஃபாதர்', `பாரம்', `மாஃபியா'

ரிவ்யூ
ரிவ்யூ

'ஆனந்த விகடன்' இதழில் வெளியான 'கன்னி மாடம்', 'காட் ஃபாதர்', 'பாரம்' மற்றும் 'மாஃபியா' ஆகிய திரைப்படங்களின் விமர்சனப் பக்கங்களிலிருந்து...

கன்னி மாடம்

சாதித்திமிரையும், அதனால் ஏற்படும் ரணங்களையும், அதற்கான காரணங்களையும் சொல்லும் படமே 'கன்னி மாடம்!'

நடிகர் போஸ் வெங்கட்தான் படத்தின் இயக்குநர். முதல் படத்திலேயே ஆணவக்கொலை என்கிற அழுத்தமான விஷயத்தைக் கையிலெடுத்து மிகவும் கவனமாகவும் கதை சொல்லியிருக்கிறார். இந்தியச் சமூகத்தின் கொடூரமான யதார்த்தமான சாதிவெறியைக் கதைக்களமாக்கி, காட்சிப்படுத்திய இயக்குநர் போஸ் வெங்கட்டுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

கன்னி மாடம்
கன்னி மாடம்

ஆணவக்கொலைதான் களம் என்றான பிறகு அதையொட்டி மட்டும் திரைக் கதையை நேர்த்தியாகச் செதுக்கியிருக்கலாம். தேவையில்லாமல் ஒருதலைக்காதல், வில்லனாக ஒரு கதாபாத்திரம் என்று பார்வையாளர்களை சஸ்பென்ஸில் வைப்பதற்கென்றே திணிக்கப் பட்ட சில காட்சிகள் படத்தின் நோக்கத்தை நோகடிக்கின்றன. - முழுமையாக வாசிக்க > சினிமா விமர்சனம் - கன்னி மாடம் க்ளிக் செய்க... http://bit.ly/2T7zlEt

காட்ஃபாதர்

சிங்கத்தின் வேட்டையிலிருந்து தன் குட்டியைக் காக்க, ஆண் மான் ஒன்று போராடும் கதையே 'காட்ஃபாதர்.' சிங்கமாக மருதுசிங்கம், மானாக அதியமான்!

எமோஷனல் கதை, திரில்லர் திரைக்கதை என திரைக்குள் இழுத்துவிடுகிறார் இயக்குநர் ஜெகன் ராஜசேகர். ஒரே அபார்ட்மென்ட்டில் நடக்கும் கதை என்றாலும் அதிலிருக்கும் சாத்தியங்கள் அத்தனையையும் பயன்படுத்தியது புத்திசாலித்தனம்.

விகடன் ரிவ்யூ பைட்ஸ்:  `கன்னி மாடம்', `காட் ஃபாதர்', `பாரம்', `மாஃபியா'

எதிர்வீட்டில் ஒரு பாத்திரம் கீழே விழுந்தாலே சத்தம் கேட்கிறதென்றால் அவர்கள் பேசுவதெல்லாம் எப்படிக் கேட்காமல் போகும்? கமர்ஷியல் பில்டிங் இப்படியா கட்டப்பட்டிருக்கும்?

ஒரு போலீஸைத் தவிர வேறு யாரிடமும் அங்கு நடக்கும் பிரச்னையைப் பகிரமாட்டார்களா எனத் தள்ளி நின்று கேட்பதென்றால் ஆயிரம் கேள்விகள் கேட்கலாம். ஆனால், திரைக்கதை அத்தனை லாஜிக்குகளையும் மறைத்து எமோஷனல் முகம் காட்டுகிறது. - முழுமையாக வாசிக்க > சினிமா விமர்சனம் - காட்ஃபாதர். க்ளிக் செய்க... http://bit.ly/32voVBq

பாரம்

வயதான பெற்றோர்களை பாரமாக நினைக்கும் சில குடும்பங்கள் அவர்கள் இருப்பை அழிக்கும் கொடூரங்கள்தான் 'பாரம்.'

பல ஆண்டுகளாகச் சில கிராமங்களில் வழக்கத்திலிருக்கும் 'தலைக்கூத்தல்' என்ற கொடுமையை மையமாக வைத்து இயக்கியிருக்கிறார் பிரியா கிருஷ்ணசுவாமி. முதியோர்களின் துயரத்தையும், தங்கள் கடமைகளைக் கைகழுவும் அவர்கள் குழந்தைகளின் பொறுப்பற்றதனமும்தான் கதைக்களம். அதை வன்முறை பொதிந்த ஒரு சமூகப்பழக்கத்தின் ஊடாகச் சொல்ல நினைத்தது வரவேற்கத்தக்கது.

விகடன் ரிவ்யூ பைட்ஸ்:  `கன்னி மாடம்', `காட் ஃபாதர்', `பாரம்', `மாஃபியா'

ஆனால் எந்த ஜீவனும் இல்லாத காட்சிகள், உணர்வுகளைப் பார்வையாளர்களுக்கு எந்த விதத்திலும் கடத்தாத திரைக்கதை, பெரும்பாலான நடிகர்களின் முதிர்ச்சியற்ற நடிப்பு, முறையற்ற படத்தொகுப்பு, எப்போதாவது ஒலிக்கும் பொருந்தாத பின்னணி இசை என, கலையம்சத்திலும் தொழில்நுட்பத்திலும் கால்கிணறு தாண்டாத முயற்சியாகவே இருக்கிறது படம்... கொலை செய்பவரை மாற்றுத்திறனாளியாகக் காட்டுவது இயக்குநரின் பழைமைவாத மனநிலையையே காட்டுகிறது. - முழுமையாக வாசிக்க > சினிமா விமர்சனம் - பாரம். க்ளிக் செய்க.. http://bit.ly/3a9DZqT

மாஃபியா

மிகப்பழைய திராட்சை ரசத்தை செம ஸ்டைலான பாட்டிலில் அடைத்து லேபிள் ஒட்டி பார்வைக்கு வைப் பார்களே... கார்த்திக் நரேனின் 'மாஃபியா'வும் அப்படித்தான்!

கோகுல் பினோயின் ஒளிப்பதிவு வித்தையும் ஜேக்ஸ் பிஜோயின் இசையும் மட்டுமே படத்தைத் தாங்கிப் பிடிக்கின்றன. ஆனால் கெத்தாக இருக்கவேண்டும் என மெனக்கெட்டு எடுக்கப்பட்டுள்ள எக்கச்சக்க ஸ்லோ மோஷன் காட்சிகள் சலிப்பையே தருகின்றன.

விகடன் ரிவ்யூ பைட்ஸ்:  `கன்னி மாடம்', `காட் ஃபாதர்', `பாரம்', `மாஃபியா'

சீனியர் அதிகாரி இறந்துபோகிறார். கொலை நடந்த இடத்திற்கு வரும் அருண்விஜய் அண்ட் கோ முகங்களில் துளியும் உணர்ச்சிகள் இல்லை. இப்படி ஹீரோயிசம், வில்லனிசம் தொடங்கி காதல், பதற்றம் என எந்தவித உணர்ச்சிகளையும் கடத்தாத பிளாஸ்டிக்தன்மையே படம் நெடுக இருக்கிறது. - முழுமையாக வாசிக்க > சினிமா விமர்சனம் - மாஃபியா. க்ளிக் செய்க... http://bit.ly/2w98MWk

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு