Published:Updated:

ஏர்போர்ட் இந்தி சீண்டல் முதல் சோக `ரவுடி பேபி' வரை... யுவன் பிரஸ் மீட்டில் என்னவெல்லாம் நடந்தது?

யுவன் ஷங்கர் ராஜா பிரஸ் மீட்!
யுவன் ஷங்கர் ராஜா பிரஸ் மீட்!

சூடான, சுவையான சுவாரஸ்ய கேள்வி பதில்கள் ஒருபுறம் என்றால் யுவனை வகையாய் சிக்கவைத்த ரசனையான விளையாட்டுகள் இன்னொருபுறம்.

யுவன் ஷங்கர் ராஜா இன்றைய இளைஞர்களின் இசைமருத்துவர். 'பறவையே எங்கு இருக்கிறாய்' என்று உருகவைப்பதிலும் சரி, 'விளையாடு மங்காத்தா' என்று துள்ளாட்டம் ஆடவைப்பதிலும் சரி இளையராஜாவின் இளைய ராஜா கிங்தான். ஆனந்த விகடன் நிருபர்களுடனான பிரத்யேக பிரஸ்மீட் என்றதும் உற்சாகமாகத் தயாரானார் யுவன் ஷங்கர் ராஜா.

இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்காத யுவன், 'தமிழ் பேசும் இந்தியன்' டிஷர்ட் மூலம் சர்ச்சைக்களத்திலும் சமீபத்தில்தான் காலடி எடுத்துவைத்திருந்தார். யுவனிடம் என்ன கேட்கலாம், எதையெதைக் கேட்கலாம் என்று விரிவான டிஸ்கஷனுக்குப் பிறகு பரபரப்பான கேள்விகளுடனும் கலகலப்பான விளையாட்டு ஐடியாக்களுடனும் காத்திருந்தது ஆனந்த விகடன் டீம்.

யுவன் ஷங்கர் ராஜா பிரஸ் மீட்!
யுவன் ஷங்கர் ராஜா பிரஸ் மீட்!

ஒரு மணி நேரம்... யுவன் களைத்துப்போகும் வரை வளைத்து வளைத்து போட்டோஷூட். அதற்குப்பிறகு அரங்கத்துக்குள் நுழைந்த யுவன், கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் சளைக்காமல் விகடன் நிருபர்களின் கேள்விகளுக்குப் பதில் சொன்னார். பொதுவாக யுவன் என்றாலே அதிகம் மனம்விட்டுப் பேசாத அமைதி டைப் என்கிற இமேஜை, அவரே அந்த அரங்கத்தில் போட்டுடைத்தார். டிஷர்ட் சர்ச்சை முதல் ராஜா-ரஹ்மான் ரசிகர்கள் சண்டை, ரஹ்மானுக்கும் யுவனுக்குமான நட்பு, மதமாற்றத்துக்கான காரணம், ஸ்கூல் கிரஷ் என்று கேட்கப்பட்ட எல்லாக் கேள்விகளுக்கும் தயங்காமல் பளிச் பதில்கள் வந்தன.

சூடான, சுவையான சுவாரஸ்ய கேள்வி பதில்கள் ஒருபுறம் என்றால் யுவனை வகையாய் சிக்கவைத்த ரசனையான விளையாட்டுகள் இன்னொருபுறம். ஜாலியான பாட்டை சோகப்பாட்டாக மாற்றவும், சோகமான பாட்டுகளை ஜாலியான பாட்டுகளாக மாற்றவும் சொல்லி ஒரு விளையாட்டு. மில்லியன் கணக்கில் வியூ அள்ளி தமிழ்நாட்டையே தாறுமாறாக ஆடவைத்த 'ரவுடி பேபி'யை மனமுருக்கும் சோகப்பாட்டாக மாற்றிக் காட்டிய யுவனின் ட்யூன் ஆஸம்... ஹோல்சம் இசை விருந்து!

யுவன் ஷங்கர் ராஜா பிரஸ் மீட்!
யுவன் ஷங்கர் ராஜா பிரஸ் மீட்!

அடுத்ததாக யுவன் இசைப்பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்தால் எப்படியிருக்கும் என்பதற்கும் மின்னல் வேகத்தில் ட்யூன் மீட்டிக் காட்டினார். அஜித் முதல் பிரேம்ஜி வரை என்னென்ன பாடல்களை டெடிகேட் செய்யலாம் என்று கேட்டதற்கும் பொருத்தமான பதில்களைச் சொல்லி அசத்தினார். இவை அத்தனையும் அடுத்தடுத்த அட்டகாச வீடியோக்களாக சினிமா விகடன் யூடியூப் சேனலில் பதிவேற்றப்படும்.

யுவனிடம் ஆனந்த விகடன் நிருபர்களின் பிரத்யேக பிரஸ்மீட்டில் கேட்கப்பட்ட பட்டாசு கேள்வி-பதிலுக்கான சின்ன சாம்பிள் இது.

இந்த வார ஆனந்த விகடனில் விரிவாகவும் இனி வரும் ஆனந்த விகடன் இதழ்களில் அடுத்தடுத்தும் இடம்பெறவிருக்கின்றன.

“எனக்கும் அந்த அவமானம் நடந்திருக்கு!” - ஆனந்த விகடன் பிரஸ்மீட்டில் யுவன் ஷங்கர் ராஜா!
அடுத்த கட்டுரைக்கு