சினிமா
Published:Updated:

ஆங்கர் to ஆக்டர்: ‘என் குரலைக் கிண்டலடிச்சப்போ எரிச்சல் வந்தது!’

ஜாக்குலின்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜாக்குலின்

ஸ்கூல், காலேஜ்லகூட யாரும் என் குரலை வச்சு என்னைக் கிண்டல் பண்ணினதில்ல. முதன்முதலா என் குரலைக் கிண்டல் பண்ணும்போது என்னால அதை ஏத்துக்கவே முடியல

ஆங்கர், நடிகை என்று பன்முகம் கொண்டவர், ஜாக்குலின். விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் `தேன்மொழி பிஏ' தொடரில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆங்கர் டு ஆக்டராக மாறிய கதை குறித்து அவருக்கே உரித்தான கலகலப்புடன் பேசத் தொடங்கினார்.

ஆங்கர் to ஆக்டர்: ‘என் குரலைக் கிண்டலடிச்சப்போ எரிச்சல் வந்தது!’

``ஆங்கர் என்கிற அடையாளம் எப்போ கிடைச்சது..?’’

“ ‘நீங்களும் ஆகலாம் விஜய் ஸ்டார்ஸ்' என்கிற ஓப்பன் ஆடிஷன் நடந்துச்சு. அந்த ஷோவில் கலந்துகிட்டு செலக்ட் ஆகித்தான் விஜய் டி.வி-க்குள் வந்தேன். முதலில் ‘ஆண்டாள் அழகர்' தொடரில் ஒரு சின்ன கேரக்டரில் நடிச்சேன். தொடர்ந்து சீரியலில் நடிக்கக் கேட்டாங்க. ‘பண்ணலை’ன்னு சொல்லவும் ‘ஏன்’னு அவங்க கேட்கும்போதுதான் ‘ஆங்கரிங் பண்ண ஆசை’ன்னு சொன்னேன். ‘கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் ஆங்கரிங் வாய்ப்பு கொடுத்தாங்க. ஆங்கரிங்னா எனக்கு என்னன்னே தெரியாதுங்கிறதனால ஆரம்பத்தில் ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு. என் கூட சேர்ந்து ஆங்கரிங் பண்ணின ரக்‌ஷனும் புதுசு. ரெண்டு பேரும் கூடுதலா எதுவும் பேசாம ஆங்கர் லிங்க் மட்டும் சொல்லிட்டு வந்து உட்கார்ந்திடுவோம். அப்படித்தான் ஆங்கர் பயணம் ஆரம்பமாச்்சு.”

``ஆரம்பத்தில் உங்க குரலை வைத்து நிறைய கிண்டல் பண்ணினாங்களே..?’’

“ஸ்கூல், காலேஜ்லகூட யாரும் என் குரலை வச்சு என்னைக் கிண்டல் பண்ணினதில்ல. முதன்முதலா என் குரலைக் கிண்டல் பண்ணும்போது என்னால அதை ஏத்துக்கவே முடியல. ரொம்ப எரிச்சலா இருந்துச்சு. என்னவா இருந்தாலும் ஏதோவொரு விஷயத்தில கலாய்க்கத்தான் செய்வாங்க. ஆங்கருக்குக் குரல் தான் முக்கியம்னு நினைக்கிற எண்ணம் நம்ம மூலமா பிரேக் ஆகுதுன்னா ஆகிட்டுப் போகட்டும்னு நினைச்சேன். அதனால அதுக்குப்பிறகு அதைப் பெருசா எடுத்துக்கலை.”

ஆங்கர் to ஆக்டர்: ‘என் குரலைக் கிண்டலடிச்சப்போ எரிச்சல் வந்தது!’

``மறக்கமுடியாத அங்கீகாரம்..?’’

“ ‘ஆனந்த விகடன் விருது' எனக்குக் கிடைச்சது. இது நீங்க பேட்டி எடுத்ததால் சொல்லலை. எல்லா இடத்திலும் இதைக் கண்டிப்பாச் சொல்லுவேன். தொகுப்பாளருக்காக எனக்குக் கிடைச்ச முதல் விருதுன்னா அது விகடன் விருதுதான். அதுவும் நக்கீரன் கோபால் சாருடைய கையால எனக்கு அந்த அவார்டு கிடைச்சது. இதுவரை விஜய் டி.வி-யில்கூட நான் ஒரு விருதும் வாங்கினதில்லை. திறமை நம்மகிட்ட இருந்தா நிச்சயம் அங்கீகரிக்கப்படுவோம் என்பதை உணர்ந்த தருணம் அது!”

ஆங்கர் to ஆக்டர்: ‘என் குரலைக் கிண்டலடிச்சப்போ எரிச்சல் வந்தது!’

``சீரியல் என்ட்ரி குறித்து..?’’

“ஆரம்பத்தில் நடிக்கணும்னு பெருசா எந்த எண்ணமும் இல்ல. நெல்சன் அண்ணா `கோலமாவு கோகிலா' படத்தில் ‘தங்கச்சி ரோலில் நீ நடிச்சா நல்லாருக்கும்’னு சொல்லி என்கிட்ட கதை சொன்னாங்க. அந்தப் படம் பார்த்துட்டு பலரும் என் நடிப்பு நல்லாருக்குன்னு பாராட்டினாங்க. தியேட்டரில் போய்ப் படம் பார்க்க ஆரம்பித்த காலத்திலிருந்தே சத்யம் தியேட்டரில் அந்தப் பெரிய ஸ்கிரீனில் அஞ்சு நிமிஷமாவது நம்ம மூஞ்சி வந்திடணுங்கிற ஆசை இருந்துச்சு. அந்த ஆசை நிறைவேறினது சந்தோஷமான தருணமா இருந்தது. நடிப்பைப் பார்த்துட்டு ‘நல்லாருக்கு’ன்னு பலர் சொன்னப்பதான், ‘சரி, இதை ஏன் நாம ட்ரை பண்ணக்கூடாது’ன்னு தோணுச்சு. அப்பதான் சீரியல் வாய்ப்பு வந்தது.”

``ஆக்டிங் அனுபவம் எப்படி இருக்கு..?’’

“ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு. காலையில் ஆரம்பிச்சு நைட் வரைக்கும் ஷூட் போகும். ஒரு நாளைக்கு பத்து சீன்கூட எடுப்பாங்க. கடகடன்னு டிரெஸ் மாத்தி ரெடியாகணும். உடல்ரீதியா என்னால அதுக்கு செட்டாக முடியல. சின்ன வயசில இருந்தே நான் ஹெல்த்தியான கிட் கிடையாது. அதனால என் உடம்பை எக்ஸ்ட்ரா கேர் எடுத்து நிச்சயம் நான் கவனிச்சிக்கிட்டே ஆகணும். உண்மையைச் சொல்லணும்னா இன்னமும் நான் சீரியலுக்கு செட்டாகலை.”

ஆங்கர் to ஆக்டர்: ‘என் குரலைக் கிண்டலடிச்சப்போ எரிச்சல் வந்தது!’

``ஆங்கரிங்கை மிஸ் பண்ணுனீங்களா..?’’

“நான் ஆங்கரிங் பண்ணுனப்போ அந்த அளவுக்கு மெச்சூரிட்டி இல்லாததனால ஒரு ஷோவை எப்படிக் கையாளணும்னு தெரியாம இருந்தேன். இப்ப ‘இது நமக்கான இடம்... இறங்கி அடிப்போம்’ என்கிற அளவுக்கான பக்குவம் வந்திருக்கு. ஆங்கரிங்கை மிஸ்லாம் பண்ணல. வாய்ப்பு கிடைச்சா சூப்பரா பண்ணுவோம்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன். மறுபடி விஜய் டி.வி-யிலிருந்தே ஒரு ஸ்பெஷல் ஷோ ஹோஸ்ட் பண்ணக் கூப்பிட்டாங்க. அந்த ஷோவை எனக்குப் பிடிச்ச மாதிரி ரொம்ப என்ஜாய் பண்ணிப் பண்ணினேன். அது டீமிற்கும் பிடிச்சதனால தொடர்ந்து ஸ்பெஷல் ஷோ ஆங்கரிங் பண்ணக் கூப்பிட்டாங்க!”