Published:Updated:

RRR ரிலீஸ்; கம்பிவேலி கொண்டு திரையைப் பாதுகாக்கும் திரையரங்க உரிமையாளர்; காரணம் இதுதான்!

இயக்குநர் ராஜ மௌலியின் இயக்கத்தில் வெளியாகவுள்ள படம் RRR.

Published:Updated:

RRR ரிலீஸ்; கம்பிவேலி கொண்டு திரையைப் பாதுகாக்கும் திரையரங்க உரிமையாளர்; காரணம் இதுதான்!

இயக்குநர் ராஜ மௌலியின் இயக்கத்தில் வெளியாகவுள்ள படம் RRR.

இயக்குனர் ராஜமௌலியின் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளத்தின் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘RRR’ படம் வரும் மார்ச் 25 -ல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட ஐந்து இந்திய மொழிகளில் வெளியாகிறது. பொதுவாக உச்ச நட்சத்திங்களின் படத்திற்கு திரையரங்கில் கூட்டம் எகிறும். இப்படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அலியா பட் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். எனவே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.

திரையரங்க உரிமையாளர் சூர்யா.
திரையரங்க உரிமையாளர் சூர்யா.

இதையடுத்து திரையரங்கில் ரசிகர்கள் பட்டாளம் கட்டுக்கடங்காத வகையில் வரும் என்கின்றனர். இதனால், திரையரங்கில் உள்ள திரையைப் பாதுகாக்க கம்பிவேலி அமைத்துள்ளார் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த திரையரங்க உரிமையாளர் சூர்யா என்பவர். மேலும் ஏற்கெனவே வெளியான அல்லு அர்ஜுனின் 'புஷ்பா' படத்தில் ரசிகர்களின் கொண்டாட்டத்தால் திரையரங்கின் திரை சேதமடைந்ததையடுத்து தற்போது வெளியாக உள்ள RRR படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் போன்ற இரண்டு உச்ச நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளதால் பாதுகாப்புக்கருதி இவ்வாறு கம்பிவேலி அமைத்துள்ளதாக கூறியுள்ளார்.