Published:Updated:

வாவ்... பிரவுனி ஆண்ட்ரியா, சாக்லேட் தோசை கீர்த்தி, கொலைவெறி வார்னர்... சோஷியல் மீடியா ரவுண்ட் அப்!

#SocialMediaRoundup
#SocialMediaRoundup

லாக்டெளனில் பரபரப்பாக இருக்கும் ஒரே இடம், சோஷியல் மீடியாதான். பிரபலங்கள் அங்கே ஷேர் செய்யும் சுவாரஸ்யங்கள், இங்கே உங்கள் பார்வைக்கு. #SocialMediaRoundup

'புட்டபொம்மா', 'மைண்ட் பிளாக்' என அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு ஆகியோரின் பாடல்களுக்கு டிக்டாக் செய்து அசத்திவரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்தான் தினமும் கன்டன்ட் கொடுக்கும் நபர். தெலுங்கு பாடல்களுக்கு டிக் டாக் செய்து அனைவரின் மனதையும் கொள்ளைகொண்ட வார்னர் இன்று கோலிவுட்டுக்கு வந்திருக்கிறார். '3' படத்தில் இடம்பெற்ற 'கொலைவெறி' பாடலுக்கு டபுள் ஆக்‌ஷனில் டிக் டாக் செய்துள்ளார். டோலிவுட் ரசிகர்களைத் தொடர்ந்து கோலிவுட் ரசிகர்களும் அவரின் டிக் டாக்கை என்ஜாய் செய்து வருகின்றனர்.

'கனகாம்பரம் பூவை ரசிக்கும் பெண்ணை டேக் செய்யுங்கள்' என தான் கனகாம்பரம் பூவோடு இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார் நடிகை நந்திதா. தவிர, எத்தனை பேருக்கு இது பிடித்திருக்கிறது எனப் பார்க்கிறேன் என்றும் கூறியிருக்கிறார். கனகாம்பரத்தோடு அவரைப் பார்க்கையில் 'அட்டக்கத்தி' பூர்ணிமா கதாபாத்திரம் நினைவுக்கு வருகிறது.

வழக்கமாகத் தன்னுடைய போட்டோஷூட், நாய்க்குட்டியுடன் இருப்பது ஆகியவற்றை இன்ஸ்டாகிராமில் பதிவிடும் கீர்த்தி சுரேஷ், இம்முறை கொஞ்சம் ஸ்பெஷல்! அவர் சாக்லேட் தோசை செய்வதை வீடியோவாக எடுத்து பதிவிட்டிருக்கிறார். வாட்ஸ் அப் எமோஜிகளுடன் கீர்த்தியின் முகபாவனைகளை ஒப்பிட்டு நிறைய ட்ரோல்கள் வந்திருக்கின்றன. இந்த வீடியோவின் முடிவில் சாக்லேட் தோசை இருக்கும் தட்டில் ஸ்மைலிங் எமோஜியை சாக்லேட் சாஸில் வரைந்து கேமராவிடம் கீர்த்தி காட்டுவது அத்தனை அழகு!

லாக்டெளனில் நிறைய நடிகைகள் ஆன்லைன் கோர்ஸ் செல்கின்றனர். சிலரை இந்த லாக் டெளன் சமையல் கலை நிபுணராக்கியிருக்கிறது. அப்படி தான் செய்த பிரவுனியை (Brownie) அத்தனை பூரிப்போடு தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் ஆண்ட்ரியா. தவிர, இந்த பிரவுனிக்கு தேவையான பொருள், செய்முறை எனச் சமையல் குறிப்பையும் பதிவிட்டிருக்கிறார். இது போக, IGTVயில் பிரவுனி உருவான விதமும் வீடியோவாக இருக்கிறது. அந்த வீடியோ முழுக்க ஆண்ட்ரியாவின் குரலில் பாடல்களும் கேட்கலாம்.

View this post on Instagram

And from this evening’s Bake & Sing we have the best brownie ever 🥰 Ingredients: -10 tablespoons(145gm) unsalted butter -3/4 cup plus 2 tablespoons(80gm) natural cocoa powder -1/2 cup flour (maida) -2 large eggs (or 3 medium) -1 cup white sugar plus 1/4 cup brown sugar -1 teaspoon vanilla essence -1/4 teaspoon salt -2 tablespoons olive oil(optional) - 1/4 teaspoon espresso powder(optional) For the topping - handful of chopped walnuts(or any other nuts) -handful of choco chips (optional) Pre-heat the oven to 162 Celsius. Mix the butter, cocoa powder, sugar & salt in a bowl and place it over a saucepan of simmering hot water, don’t let the bottom of the bowl touch the water. Stir the ingredients until the butter is fully melted and the mix has turned gritty. Once the mixture has cooled, add the vanilla essence & eggs(one at a time), stir until the ingredients are mixed well. Then add the flour(the batter will be thick). Pour batter into a greased pan(I use butter to grease) add your toppings, then bake the brownie for 20-25 minutes. Use a toothpick to check if the brownies are done (the toothpick should come out clean or just a few crumbs). Cool completely, then cut into squares and ENJOY ! 👩🏻‍🍳❤️ P.S: the making of this delectable brownie is up on my IGTV along with a bonus singing session with my hairbrush microphone 🥰

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah) on

96' படத்தில் விஜய் சேதுபதியிடம் போட்டோகிராபி, 'பிகில்' படத்தில் விஜய்யிடம் கால்பந்து கற்றுக்கொண்ட நடிகை வர்ஷா போலம்மா, தான் ஒரு ஓவியர் எனும் ரகசியத்தை உடைத்திருக்கிறார். இவர் வரைந்த ஓவியத்தைப் பார்த்த இவரின் ரசிகர்கள் ஏராளமான ஹார்டின்களை அள்ளி வீசி வருகின்றனர். இன்னும் எத்தனை நடிகைகளின் தனித்திறமையை வெளிக்கொண்டு வர இருக்கிறதோ இந்த லாக் டெளன்?

தன் குழந்தைகளுடன் சேர்ந்து ஃபன் வீடியோக்களைப் பதிவிடும் சமீரா ரெட்டி, "லாக்டெளனில் ஒரு சின்ன மாற்றம் தேவைப்பட்டது. அதனால், கொஞ்சம் மேக் அப் போட்டிருக்கிறேன். அந்த வீடியோவை நாளை பதிவிடுகிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார். தவிர, மேக்கப் அப் இல்லாத, மேக்கப் உடன் இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார் சமீரா.

எல்லோரும் தேவதைகள் போல இறக்கைகள் வைத்து ஸ்டேட்டஸ்களைத் தட்டிக்கொண்டிருக்கும்போது அஞ்சலி சற்று வித்தியாசமாகப் பதிவிட்டிருந்தார். "சில தேவதைகள் இறக்கைக்கு பதிலாக மென் ரோமங்களை தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள்" என்று கூறி தனது நாய்க்குட்டி போலோ ஓடிவருவதை ஸ்லோ மோஷன் வீடியோவாகப் பகிர்ந்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு