Published:Updated:

`விஜய் 64' ஆடியோ உரிமையைப் பெற்ற சோனி!' - அசத்தும் அனிருத்தின் ஆடியோ பிசினஸ்

எம்.குணா

தற்போது கார்த்தி நடித்து முடித்த `கைதி' படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக விஜய் நடிக்கும் படத்தை டைரக்‌ஷன் செய்கிறார். விஜய் - லோகேஷ் கனகராஜ் இணையும் புதிய கூட்டணியின் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

Vijay
Vijay

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் அனிருத்தும் ஒருவர். தான் இசையமைக்கும் படங்களில் மட்டுமல்லாது மற்ற இசையமைப்பாளர்கள் பணியாற்றும் படங்களுக்கும் பாடிக்கொடுப்பார். இவரது குரலில் ஒரு பாடல் வெளியானாலே டாப் டிரெண்டிங்கிலும் ரசிகர்களின் மியூஸிக் ப்ளேயரிலும் குடிகொண்டுவிடும். ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான `பேட்ட' படத்தின் ஆல்பம் மாஸ் ஹிட்டடித்தது.

தற்போது கார்த்தி நடித்து முடித்த `கைதி' படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக விஜய் நடிக்கும் படத்தை டைரக்‌ஷன் செய்கிறார். விஜய் - லோகேஷ் கனகராஜ் இணையும் புதிய கூட்டணியின் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

Anirudh
Anirudh

விஜய்யின் உறவினரான பிரிட்டோ தயாரிக்கும் இப்படத்துக்கு இன்னும் பூஜையே போடாத நிலையில், அனிருத்தின் இசையில் உருவாகும் பாடல்களின் ஆடியோ உரிமையைப் பெறுவதற்கு கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் விஜய், அட்லி, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாகிவரும் 'பிகில்' படத்தின் ஆடியோ உரிமையை வாங்கிய அதே சோனி கம்பெனி, விஜய், லோகேஷ் கனகராஜ், அனிருத் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஆடியோ உரிமையை `பிகில்’ படத்தைவிட கூடுதல் விலை கொடுத்து வாங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை கோலிவுட்டே ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டு இருக்கிறது.