Published:Updated:

``புரபோஸ் பண்ண பையனுக்கு, நான் என்ன பண்ணேன் தெரியுமா?" - அஞ்சலி ஷேரிங்ஸ்

`லிசா 3D' படத்தின் டிரெய்லர் வெளியீட்டிற்காகச் சென்னை வந்திருந்த நடிகை அஞ்சலி, தனக்குப் பிடித்த கேரக்டர்கள், 3டி படத்தில் நடித்த அனுபவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பேசியிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மண்டையைப் பிளக்கும் சென்னை வெயிலில், நடிகை அஞ்சலியுடன் ஒரு ஜில் சாட்!

"ஹாரர் படத்தில் நடித்த அனுபவம்?"

``ஹாரர் படங்கள்ல நடிக்கும்போது ஒரு பிரச்னை இருக்கு. அந்தப் படம் எடுக்கிறப்பவே நாம பார்த்துட்டதால திரையில் பார்க்கும்போது அந்தத் த்ரில் போயிடும். பொதுவா எனக்கு அந்தப் படங்கள் எப்படி எடுக்கிறாங்கனு தெரிஞ்ச பிறகு நான் பயப்படுறதே கம்மி ஆகிடுச்சு. நடிக்கும்போது க்ரீன் மேட் போட்டுத்தான் ஷூட் பண்ணுவாங்க. சில விஷயம் சிஜி-யில பண்ணுவாங்க. சவுண்டு எஃபெக்ட்ஸ்ல சில விஷயங்களைச் சேர்ப்பாங்க. டப்பிங்லேயும் சில விஷயங்கள் சேரும். இது எதுவுமே இல்லாமதான் ஷூட்டிங்ல பயந்து நடிக்கணும்; கத்தணும்!"

``புரபோஸ் பண்ண பையனுக்கு, நான் என்ன பண்ணேன் தெரியுமா?" - அஞ்சலி ஷேரிங்ஸ்

" `லிசா' மூலமா முதல்முறையா கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள படத்துல நடிச்சிருக்கீங்க. அந்த அனுபவம் எப்படி இருந்துச்சு?"

``நான் லீடு ரோல்ல நடிக்கிற முதல் படம்னு சொல்றதைவிட, என் முதல் 3டி படம் இதுனு சொல்றது நல்லா இருக்கு. இதுக்கு முன்னாடி நான் 3டி படத்துல நடிச்சதில்லை. நான் ஒரு டேக்ல நடிச்சுட்டு, ஓகேவானு கேட்பேன். `ஒன் மோர்' சொல்வாங்க. `நல்லாதானே நடிச்சேன்; ஏன் மறுபடியும் நடிக்கச் சொல்றாங்க'னு கொலை காண்டுல இருந்தேன். `3டி-யில சரியா வரல; அதனாலதான் ரீடேக்'னு இயக்குநர் சொல்வார். 3டி-க்கு வேலை செய்ய ஒரு டீம், ஆறேழு ஸ்கிரீன்ல பார்த்துதான் ஒரு காட்சியை ஓகே பண்ணாங்க. 3டி படத்துல கேமரா டீமும், டெக்னிக்கல் டீமும் ஓகே சொன்னாதான், நடிக்க ஆரம்பிக்கணும். அதுக்கு முன்னாடி ஆஸ்கர் லெவலுக்கு நடிச்சாலும், வேஸ்ட்டுதான்!"

``ஒரு ஹீரோயினா இருக்கிறது எவ்வளவு கஷ்டமான விஷயம்?"

``ஹீரோயினா இருக்கிறவங்க நார்மலான வாழ்க்கையைப் பார்க்க முடியாது. நண்பர்களோட வெளியே நிகழ்ச்சிகளுக்குப் போறதோ, படத்துக்குப் போறதோ நடக்காத விஷயம். இதுல ரொம்பக் கஷ்டம், குடும்பத்தோடும் வெளியே போகமுடியாததுதான். நம்மகூட வர்றதுனால, அவங்களுக்கும் கஷ்டமாகிடுது. அதனால, எது பண்ணாலும் திங்கள் கிழமையிலதான் பண்ணுவேன். முக்கியமா, படம் பார்க்கிறதும் அப்போதான்."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``ஒரு ஹீரோயினா இருக்கிறது எவ்வளவு கஷ்டமான விஷயம்?"

``ஹீரோயினா இருக்கிறவங்க நார்மலான வாழ்க்கையைப் பார்க்க முடியாது. நண்பர்களோட வெளியே நிகழ்ச்சிகளுக்குப் போறதோ, படத்துக்குப் போறதோ நடக்காத விஷயம். இதுல ரொம்பக் கஷ்டம், குடும்பத்தோடும் வெளியே போகமுடியாததுதான். நம்மகூட வர்றதுனால, அவங்களுக்கும் கஷ்டமாகிடுது. அதனால, எது பண்ணாலும் திங்கள் கிழமையிலதான் பண்ணுவேன். முக்கியமா, படம் பார்க்கிறதும் அப்போதான்."

ஹீரோயினா இருக்கிறவங்க நார்மலான வாழ்க்கையைப் பார்க்க முடியாது.
ஹீரோயினா இருக்கிறவங்க நார்மலான வாழ்க்கையைப் பார்க்க முடியாது.

``அஞ்சலி அடிக்கடி பண்ற விஷயம்?"

``மத்தவங்களுக்குப் போன் பண்ணி ஏமாத்துவேன். நானும் ஃப்ரெண்டும் கான்ஃபரென்ஸ் கால் பண்ணி, பேசுற மூணாவது நபர்கிட்ட, `நாங்க இங்கதான் இருக்கோம்'னு சொல்லி, அவரையும் கூப்பிடுவோம். அப்படித்தான் ஒருமுறை சமுத்திரக்கனி சாருக்கு போன் பண்ணி, `அதுல்யா ரவி இப்போதான் ஹைதராபாத் வந்தா'ன்னு சொன்னேன், அவரும் நம்பிட்டார்."

"ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு லேட்டா போறீங்களாமே?"

``யார் சொன்னா... நான் அந்தமாதிரி ஆளே கிடையாது. ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு லேட்டா போயிடக் கூடாதுன்னு பயந்து, அலாரம் வெச்சுத்தான் படுப்பேன். ஆனா, அலாரம் அடிக்கிறதுக்கு முன்னாடியே முழிச்சிடுவேன்."

``புரபோஸ் பண்ண பையனுக்கு, நான் என்ன பண்ணேன் தெரியுமா?" - அஞ்சலி ஷேரிங்ஸ்

``யாராவது உங்களுக்குச் சவால் விட, அதைச் செஞ்சு முடிச்சிருக்கீங்களா?"

``ம்ம்... செஞ்சிருக்கேன். 9-ம் வகுப்பு படிக்கும்போது, `நான் உனக்கு புரபோஸ் பண்ணா, உன்னால என்ன பண்ண முடியும்'னு கேட்டான். உடனே நான் அஞ்சு ரூபாய்க்கு ராக்கி வாங்கி அவனுக்குக் கட்டிவிட்டேன். ஆனா, பாவம் அவன். நான் ஏழாம் வகுப்பு படிச்சதுல இருந்து புரபோஸ் பண்ணிக்கிட்டிருந்தான்."

``சினிமா நண்பர்கள்?"

``நிறைய பேர் இருக்காங்க. பூஜா தேவரையா ரொம்ப க்ளோஸ்!"

``சென்னைக்கு வந்து பார்த்த முதல் படம்?"

``விஜய் நடிச்ச `ஷாஜகான்'. அப்போ, எனக்குத் தமிழ் சுத்தமா தெரியாது. எல்லோரும் சிரிக்கும்போது நானும் சிரிப்பேன், எல்லோரும் கைதட்டும்போது, நானும் தட்டுவேன்."

``இதுவரை நடிச்சதுல உங்களுக்குப் பிடிச்ச கேரக்டர்கள்?"

`` `கற்றது தமிழ்' - ஆனந்தி, `அங்காடித் தெரு' - கனி, `எங்கேயும் எப்போதும்' - மணிமேகலை. இந்த லிஸ்ட்டுல `சிந்துபாத்' படத்துல வர்ற 'வெண்பா' கேரக்டரும் சேரும்."

விஜய் சேதுபதி கூட நடிக்கிறதே சவாலான விஷயம்!
விஜய் சேதுபதி கூட நடிக்கிறதே சவாலான விஷயம்!

`` `சிந்துபாத்' படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்த அனுபவம்?"

``விஜய் சேதுபதி எனக்கு நல்ல ஃப்ரெண்ட். அவர்கூட நடிக்கிறதே சவாலான விஷயம்தான். ஏன்னா, புதுசா ஒண்ணு பண்ணிக்கிட்டே இருப்பார். நமக்கும் அந்தப் பயம் ஒட்டிக்கும். அதனால, சேதுபதிகூட சீன் இருந்தா, நான் அலர்ட் ஆகிடுவேன்."

Vikatan

``அடுத்து?"

``மாதவன், அனுஷ்காகூட `சைலன்ஸ்'னு ஒரு படம் பண்றேன். அமெரிக்காவுல ஷூட்டிங் ஆரம்பிக்கப் போகுது. தமிழ்ல இன்னொரு ஹாரர் படத்துல நடிக்க ஓகே சொல்லியிருக்கேன். `சிந்துபாத்', `லிசா' படங்கள் ரிலீஸுக்கு ரெடியா இருக்கு. இதுல, 'லிசா' படத்துல ஹாரர், காமெடி, 3டினு எல்லா விஷயமும் இருக்கும்."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு