Election bannerElection banner
Published:Updated:

`அப்போ நயன்தாரா ; இப்போ அஞ்சலி' - யோகிபாபு ரொமான்ஸ்!

யோகிபாபு - நயன்தாரா
யோகிபாபு - நயன்தாரா

அஞ்சலி நடிக்கும் ஃபேன்டஸி காமெடி படத்தில் நடிக்கிறார், யோகிபாபு

நெல்சன் இயக்கத்தில் உருவான 'கோலமாவு கோகிலா' படத்தில் நயன்தாரா - யோகிபாபு காம்போவும் 'கல்யாண வயசு' பாடலுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. அந்த காம்போ வொர்க் அவுட் ஆனதைத் தொடர்ந்து, நயன்தாரா நடித்த `ஐரா' படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதேபோல, அஞ்சலியின் அடுத்தடுத்த படங்களில் யோகிபாபு இருந்து வருகிறார். 'பலூன்', 'லிசா' உள்ளிட்ட படங்களை தொடர்ந்து, அஞ்சலி புதிதாக நடிக்கவிருக்கும் ஃபேன்டஸி காமெடி திரைப்படத்திலும் யோகிபாபு கமிட்டாகி இருக்கிறார்.

அஞ்சலி
அஞ்சலி

'சொன்னா புரியாது' படத்தை இயக்கிய கிருஷ்ணன் ஜெயராஜ் இந்தப் படத்தை இயக்குகிறார். ஹீரோயின் சென்ட்ரிக் படமாக உருவாகவிருக்கும் இதில் கூடைப்பந்து வீராங்கனையாக நடிக்கிறார், அஞ்சலி. அவரை காதலிப்பவர்களாக யோகிபாபுவும் ராமரும் வருகின்றனர். விஷால் சந்திரசேகர் இசையில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. இதை 'பலூன்' படத்தின் இயக்குநர் சினீஷ் தயாரிக்கிறார். 'நாடோடிகள் 2', சமுத்திரக்கனி இயக்கத்தில் ஒரு படம், மாதவன் - அனுஷ்காவுடன் ஒரு படம் ஆகியவை அஞ்சலியின் கைவசம் உள்ளன.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு