Published:Updated:

" `அண்ணாத்த’ ரிலீஸ் வரைக்கும் வெயிட் பண்ணுங்க!"- புது இயக்குநருக்கு ரஜினியின் சிக்னல்!

rajini
rajini

‘’இன்னும் இரண்டு படங்கள் நடிப்பேன்’’ என்று ரஜினி நெருங்கியவர்களிடம் சொல்லியிருப்பதால் அந்த இரண்டு படங்களும் என்ன, யார் இயக்குநர் என்பதில் போட்டா போட்டி நடந்துகொண்டிருக்கிறது.

ஆகஸ்ட்டில் தொடங்கலாம் எனக் கணிக்கப்பட்டிருக்கும் கொரோனாவின் மூன்றாம் அலை பாதிப்புகளை ஏற்படுத்தாது, தியேட்டர்கள் அக்டோபரில் திறந்துவிடும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறது திரையுலகம். இந்த ஆண்டின் தீபாவளி ரிலீஸாக எப்படியும் நவம்பர் 4-ம் தேதி ‘அண்ணாத்த’ படத்தை ரிலீஸ் செய்துவிடவேண்டும் என்பதில் சன் டிவியும் துடிப்பாக இருக்கிறது.

‘அண்ணாத்த’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் என்ன, ரஜினியின் அடுத்தப்படம் எப்போது தொடங்கும்?!

* இமானின் இசையில் 'அண்ணாத்த' படத்தின் ஓப்பனிங் பாடல் செம மாஸாக வந்திருக்கிறதாம். ரஜினியின் 'முரட்டுக்காளை', 'முத்து' படங்களின் ஓப்பனிங் பாடல் போல உலகம் முழுக்க வைரல் ஹிட் அடிக்கும் பாடலாக இது இருக்கும் என்கிறார்கள்.

ரஜினி
ரஜினி

* படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, பிரகாஷ்ராஜ், ஜாக்கிஷெராப் என பெரிய நடிகர் பட்டாளமே இருக்கிறது. இந்தப் படத்தில் நயனுக்கு டாம் & ஜெர்ரி ரோல்.

* ஹைதராபாத்தில் நடந்த ஷூட்டிங்கில் தன் போர்ஷனை முடித்துவிட்டுத்தான் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு கிளம்பிப் போனார் ரஜினி. கடைசி நாள் ஷூட்டில் யூனிட்டினர் அனைவரையும் அழைத்து, '’லாக்டெளன் சூழல், என் உடல்நலன் என பல விஷயங்களைத்தாண்டி இந்தப் படம் நடந்து முடிந்திருக்கிறது. ‘அண்ணாத்த’ படத்தை முடித்துக் கொடுப்பேன் என நான் நினைக்கவேயில்லை. ஆண்டவனுக்கு நன்றி’' என நெகிழுந்து பேசியிருக்கிறார்.

ரஜினி வீட்ல விசேஷம்... மீண்டும் தாத்தாவாகிறார் சூப்பர் ஸ்டார்!

* இன்னும் சில காட்சிகள் மட்டும் கொல்கத்தாவில் எடுக்க வேண்டியிருக்கிறது. அந்த போர்ஷன் ஷூட் முடிந்தால் படம் முழுவதுமாக முடிந்துவிடும். லாக்டெளன் சூழல்களால் கொல்கத்தா ஷெட்யூலுக்காக காத்திருக்கிறது ‘அண்ணாத்த’ யூனிட்.

* 'அண்ணாத்த' படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதால் ரஜினியின் அடுத்தப் படத்துக்கான பரபரப்பு பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கிறது. ‘’இன்னும் இரண்டு படங்கள் நடிப்பேன்’’ என்று ரஜினி நெருங்கியவர்களிடம் சொல்லியிருப்பதால் அந்த இரண்டு படங்களும் என்ன, யார் இயக்குநர் என்பதில் போட்டா போட்டி நடந்துகொண்டிருக்கிறது.

தேசிங் பெரியசாமி
தேசிங் பெரியசாமி

இதில் முதல் வெற்றியாளர் தேசிங் பெரியசாமி. துல்கர் சல்மான் நடிக்க ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கிய தேசிங்தான் ரஜினியின் அடுத்தப்படத்தை இயக்கயிருக்கிறார். சமீபத்தில் விஜய்யின் ‘பிகில்’ படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் ரஜினியின் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

* ஏஜிஎஸ் - தேசிங் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் டிஸ்கஷனின் போது, ‘’‘அண்ணாத்த’ ரிலீஸ் வரைக்கும் வெயிட் பண்ணுங்க. அந்தப் படம் என்னோட கரியர்ல ஒரு முக்கியமான படமா இருக்கும். ரிலீஸ் ஆனப்பிறகு புதுப்படத்தில் இன்னும் பல விஷயங்களை பிளான் பண்ணலாம்’’ எனச் சொல்லியிருக்கிறார் ரஜினி.

தீபாவளிக்கு வெயிட்டா வர்றாரு 'அண்ணாத்த!'

அடுத்த கட்டுரைக்கு