Published:Updated:

விஜய் சேதுபதியுடன் இணையும் மற்றொரு கதாநாயகி! - 'துக்ளக் தர்பார்' அப்டேட்

உ. சுதர்சன் காந்தி.

விஜய் சேதுபதி நடிக்கும் 'துக்ளக் தர்பார்' படத்தின் மற்றொரு கதாநாயகி ஒப்பந்தமாகி உள்ளார்.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

'சிந்துபாத்' படத்துக்குப் பிறகு, விஜய் சேதுபதி நடிக்கும் படம் 'துக்ளக் தர்பார்'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்க, '96' படத்தை வெளியிட்ட 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் மற்றும் வயாகாம் 18 ஆகிய இரண்டு தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன. கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்தில், அதிதி ராவ் கதாநாயகியாக நடிக்கிறார்.

மஞ்சிமா மோகன்
மஞ்சிமா மோகன்

'நானும் ரெளடிதான்' படத்துக்குப் பிறகு, பார்த்திபன் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் படம் இது. 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', 'சீதக்காதி' படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இந்தப் படத்துக்கு வசனம் எழுத, ஒளிப்பதிவாளரும் '96' படத்தின் இயக்குநருமான பிரேம் குமார் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில், படத்தின் இன்னொரு கதாநாயகியாக மஞ்சிமா மோகன் ஒப்பந்தமாகியிருக்கிறார். 'குயீன்' மலையாள ரீமேக்கான 'ஜம் ஜம்', ஜீவா - அருள்நிதியுடன் 'களத்தில் சந்திப்போம்', விஷ்ணு விஷாலுடன் 'எஃப்.ஐ.ஆர்' ஆகிய படங்கள் மஞ்சிமாவின் வசமுள்ளன.