Published:Updated:

"தமிழ் சினிமா ஆச்சர்யங்கள்!" - 3 கேள்விகள்... 3 இயக்குநர்களின் பதில்கள்

இயக்குநர்
இயக்குநர்

த்ரில்லர், காமெடி, ஃபேமிலி, ஆக்‌ஷன்... இப்படி எல்லா ஜானர்களிலும் படம் இயக்கக்கூடிய இயக்குநர்கள் இந்திய சினிமாவில் மிகவும் குறைவு

"தமிழ் சினிமாவில் மல்ட்டி ஸ்டார் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். ஆனால், மல்டி ஸ்டார்ஸை இணைக்கிறது இங்க ஒரு பிரச்னையா இருக்கு. ஆனால், மலையாள சினிமாவில் எப்படி உடனே சாத்தியமாகுது?''

இயக்குநர் மற்றும் நடிகர் வினித் சீனிவாசன்: "இது மலையாள சினிமாவில் ரொம்பவே சகஜமா நடக்குது. 'வைரஸ்' படத்துல பல பெரிய நடிகர்கள், சின்னச் சின்ன ரோல்களில் நடிச்சிருக்காங்க. நானும் 'தண்ணீர் மத்தன் தினங்கள்' படத்துல ஒரு சின்ன ரோல் பண்ணியிருந்தேன். நிவின் பாலிக்காக `லவ் ஆக்‌ஷன் டிராமா' படத்துல பல பேர் கேமியோ பண்ணியிருந்தோம். தமிழ்நாட்டில் இருந்து மலையாள சினிமாவைப் பார்க்கிற உங்களுக்கு, இதெல்லாம் ஆச்சர்யமா இருந்தால், கேரளாவில் இருந்து தமிழ்சினிமாவைப் பார்க்கிற எங்களுக்குப் பல ஆச்சர்யங்கள் இருக்கு.

"தமிழ் சினிமா ஆச்சர்யங்கள்!" - 3 கேள்விகள்... 3 இயக்குநர்களின் பதில்கள்

இங்க இருக்கிற பல இயக்குநர்கள் வெற்றிமாறன், மிஷ்கின் படங்களைப் பார்த்து ஆச்சர்யப்படுறோம். 'வடசென்னை' பார்த்துட்டு வெற்றிமாறன் சாருக்கு போன் பண்ணி, பல ஷாட்டுகள் எப்படி எடுத்தார்னு கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். 'மாயா' படம் பார்த்துட்டு அஷ்வின் சரவணனுக்கு போன் பண்ணி, 'பட்ஜெட் எவ்வளவு வந்துச்சு, படம் முடிக்க எத்தனை நாள் ஆச்சு'ன்னு பல தகவல்கள் கேட்டேன். நான் சென்னையிலதான் காலேஜ் படிச்சேன். அப்போ இருந்து இப்போ வரைக்கும் சென்னையிலதான் இருக்கேன். படம் பண்றதுக்காக மட்டும் கேரளா போயிட்டு வரேன். அப்படி நான் காலேஜ் படிச்ச சமயத்தில் பார்த்த `7ஜி ரெயின்போ காலனி' படத்தை, இன்னும் என்னால மறக்க முடியாது. `சரோஜா' படம் பார்த்துட்டு, மவுன்ட் ரோட்டில் நடந்துவந்த போதுதான், நாமளும் ஒரு படம் பண்ணலாம்கிற எண்ணம் என் மனசுக்குள்ள வந்துச்சு. இப்படி என்னோட வாழ்க்கையில பல மறக்கமுடியாத சம்பவங்கள், தமிழ் சினிமாவால நடந்திருக்கு.''

> மலையாள இயக்குநர் மற்றும் நடிகர் வினித் சீனிவாசன் அளித்த பேட்டியை ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > "தமிழ் சினிமாவில் நிச்சயம் நடிக்க மாட்டேன்!" https://cinema.vikatan.com/tamil-cinema/an-exclusive-interview-with-malayalam-cinema-icon-vineeth-sreenivasan

"தமிழ், மலையாளம், இந்தின்னு மூணு மொழிகளிலும் இயக்குநரா இருந்திருக்கீங்க. ஒரு கிரியேட்டரா உங்களுக்கு எந்த மொழியில் அதிக சுதந்திரம் கிடைக்குறதா நினைக்கிறீங்க?''

இயக்குநர் ஜீத்து ஜோசப்: "எனக்கான சுதந்திரம் மூணு மொழிகளிலும் கிடைச்சது. நடிக்குற நடிகர்களும், படத்தைப் பார்க்கிற ரசிகர்களும்தான் வேற வேற. மலையாள சினிமாவைவிட தமிழ், இந்தி சினிமாக்களின் மார்க்கெட் ஏரியா ரொம்பவும் பெருசு. அதனால், மலையாளத்தில் ஃபர்ஸ்ட் லுக், டிரெய்லர் மாதிரியான விஷயங்கள் என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனா, இங்க அந்த விஷயங்களெல்லாம் தயாரிப்பு நிறுவனங்களின் கையில் இருக்கு.''

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

"தமிழ் சினிமா ஆச்சர்யங்கள்!" - 3 கேள்விகள்... 3 இயக்குநர்களின் பதில்கள்

> த்ரில்லர், காமெடி, ஃபேமிலி, ஆக்‌ஷன்... இப்படி எல்லா ஜானர்களிலும் படம் இயக்கக்கூடிய இயக்குநர்கள் இந்திய சினிமாவில் மிகவும் குறைவு. அந்தப் பட்டியலில் மிகவும் முக்கியமானவர் ஜீத்து ஜோசப். தன்னுடைய 'த்ரிஷ்யம்' படத்தின் ரீ-மேக்கான 'பாபநாசம்' மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நேரடியாக இயக்கியிருக்கும் முதல் தமிழ்ப்படம் 'தம்பி.' அவரது பேட்டியை ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > "ஆக்‌ஷன், காமெடி எல்லாமே எக்ஸ்ட்ரா!" https://cinema.vikatan.com/tamil-cinema/exclusive-interview-with-director-jeethu-joseph

"ஒரு இயக்குநர் இன்னொரு இயக்குநரோட படத்துல நடிக்கும்போது கருத்துவேறுபாடு வருமே?"

ராதாமோகன்: "அந்த இரண்டு இயக்குநர்கள் யாருங்கிறதைப் பொறுத்து அது மாறும். 'பொம்மை' படத்துல இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா நடிக்கலையே. நடிகர் எஸ்.ஜே.சூர்யாதான் இருக்கார். என்னோட வேலையில அவர் தலையிடவே இல்ல. சீனுக்கு எது தேவையோ அதுமட்டும்தான் தருவார்.''

எஸ்.ஜே. சூர்யா: "நடிகர் எஸ்.ஜே.சூர்யாவைவிட இன்னொரு எஸ்.ஜே.சூர்யாவுக்கும் இங்க பொறுப்பு அதிகமா இருக்கு; தயாரிப்பாளர் எஸ்.ஜே.சூர்யா. அதனால கூடுதல் கவனம் இருக்கும்ல. பொதுவாவே இன்னொரு இயக்குநர் படத்துல நடிக்கும்போது அவங்க ஏரியாக்குள்ள போகக்கூடாதுன்னுதான் நினைப்பேன். இந்தப் படத்துல அதை இன்னும் தீவிரமா கடைப்பிடிச்சிருக்கேன்.''

"தமிழ் சினிமா ஆச்சர்யங்கள்!" - 3 கேள்விகள்... 3 இயக்குநர்களின் பதில்கள்

> ராதாமோகன் படங்களைப் போலவே அவருடைய படப்பிடிப்பும் ஆரவாரம் இல்லாமல் நடந்து முடிந்துவிடுகிறது. எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானிசங்கர், சாந்தினி தமிழரசன் உள்ளிட்டவர்கள் நடிக்கும் 'பொம்மை' படத்தைப் பாதிக்கும் மேல் ஷூட்டிங் நடத்தி முடித்துவிட்டார் ராதாமோகன். சென்னையின் ஒரு வணிக வளாகத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த 'பொம்மை' படத்தின் படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்று அவர்களிடம் அடித்த ஜாலி அரட்டை இது > இந்த பொம்மை யுவன் ஸ்பெஷல்...! - இந்தப் படமே வித்தியாசமான படம்தான் https://cinema.vikatan.com/tamil-cinema/interview-with-director-radha-mohan

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

அடுத்த கட்டுரைக்கு