Published:Updated:

விஜய்யுடன் நடிக்கும் `அங்கமாலி டைரீஸ்' ஹீரோ!- விஜய் 64-ன் அடுத்த அப்டேட்

'விஜய் 64' படத்தில் இணைந்துள்ளார், 'அங்கமாலி டைரீஸ்' நாயகன் ஆண்டனி வர்கீஸ்.

ஆண்டனி வர்கீஸ்
ஆண்டனி வர்கீஸ்

'தெறி', 'மெர்சல்' ஆகிய படங்களைத் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி அடிக்கக் காத்திருக்கிறது விஜய் - அட்லி காம்போ. ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் விஜய், நயன்தாரா, விவேக், யோகிபாபு எனப் பலர் நடித்துள்ள 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரக் காத்திருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புடைய 'பிகில்' படத்திற்குப் போட்டியாகக் களமிறங்குகிறது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான 'கைதி'.

ஆண்டனி வர்கீஸ்
ஆண்டனி வர்கீஸ்

இந்தப் படம் வெளியாகும் முன்னரே விஜய்யை வைத்து லோகேஷ் இயக்கவிருக்கும் அடுத்த படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் சமீபத்தில் தொடங்கியுள்ளன. விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று வந்த செய்தியை உண்மையாக்கும் விதமாக நேற்று தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து ஒரு அறிவிப்பு வந்தது. இதன் தொடர்ச்சியாக, இன்று மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் 'விஜய் 64' படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளது படக்குழு. இவர் மலையாளத்தில் பயங்கர ஹிட்டான 'அங்கமாலி டைரீஸ்' படத்தின் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்க்குக் கேரளாவில் அதிக ரசிகர்கள் உள்ளனர். தவிர 'அங்கமாலி டைரீஸ்' படத்தில் அவர்கள் கொண்டடிய ஆண்டனி வர்கீஸும் இந்தப் படத்தில் இருப்பதால் கேரளாவில் இதற்கான வரவேற்பு அதிகமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.