சினிமா
தொடர்கள்
Published:Updated:

“ஜி.வி.பிரகாஷுக்கும் அனுராக்குக்கும் நான்தான் மீடியேட்டர்!”

டாக்டர் ஜி
பிரீமியம் ஸ்டோரி
News
டாக்டர் ஜி

அனுராக் காஷ்யப் சொல்லியே நிறைய படங்கள் பார்த்திருக்கிறேன். ‘சுப்ரமணியபுரம்’ ஆரம்பித்து சமீபத்தில் ‘விலங்கு’ வெப் சீரீஸ் வரை பார்த்தேன்

பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் சகோதரி அனுபூதி காஷ்யப்பும் இயக்குநராக பாலிவுட்டில் அறிமுகமாகிறார். வெரைட்டியான நடிப்பால் பாலிவுட்டைத் தாண்டியும் கவனத்தை ஈர்க்கும் ஹீரோ ஆயுஷ்மான் குரானா நடிப்பில் ‘டாக்டர் ஜி’ என்ற படத்தை முடித்துவிட்டு ரிலாக்ஸாக அடுத்த படத்துக்கான டிஸ்கஷனில் இருக்கும் அனுபூதியிடம் பேசினேன்.

“டாக்டர் ஜி... பேரே வித்தியாசமா இருக்கே... என்ன மாதிரியான கதை?”

“ஃபீல் குட் ரொமான்டிக் காமெடி படம்தான். ஆனால், முழுக்க மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடக்கும் கதை. மருத்துவக் கல்லூரி மாணவர்களாக ஆயுஷ்மான் குரானாவும், ரகுல் ப்ரீத் சிங்கும் நடிக்கிறார்கள். மருத்துவக் கல்லூரியின் பின்னணியில் ஒரு முக்கியமான சோஷியல் மேட்டரை இதில் டீல் செய்திருக்கிறோம். அது என்ன என்பது மட்டும் சஸ்பென்ஸ்!”

“ஜி.வி.பிரகாஷுக்கும் அனுராக்குக்கும் நான்தான் மீடியேட்டர்!”

“உங்கள் அண்ணன் அனுராக் காஷ்யப்புக்கு ‘டாக்டர் ஜி’யின் கதை தெரியுமா, என்ன சொன்னார்?”

“டாக்டர் குப்தா என்ற என் படத்தின் கதையை ‘டாக்டர் ஜி’ என மாற்றியவர் அவர்தான். சின்ன வயதிலிருந்தே அவரைவிட நான் நன்கு கதை சொல்வதாக என்னை உற்சாகப்படுத்துவார். சொல்லப்போனால் அவரால்தான் சினிமா ஆர்வம் எனக்கு வந்தது. ‘இந்தக் கதை உனக்கு நல்ல கமர்ஷியல் அறிமுகமாக பாலிவுட்டில் அமையும்’ எனப் பாராட்டினார்!”

“குடும்பத்தில் இன்னொரு சகோதரர் அபினவ் காஷ்யப்பும் சினிமா இயக்குநர் தான். பிறகு ஏன் முதல் படம் எடுக்க இவ்வளவு தாமதம்?”

“சினிமாப் பின்புலம் இல்லாத குடும்பத்திலிருந்துதான் சகோதரர்கள் இருவரும் மும்பை வந்து போராடி ஜெயித்தனர். அப்பா எங்களை சயின்டிஸ்ட்களாகப் பார்க்க ஆசைப்பட்டார். சகோதரர்கள் இருவரும் சினிமாவுக்குப் போயே தீருவோம் என வீட்டில் சொன்னபோது எதிர்ப்பு இருந்தது. நான் எம்.பி.ஏ படித்து பல நிறுவனங்களில் வேலை பார்த்தேன். அனுராக் காஷ்யப்தான், ‘நீ ஒரு நல்ல கதைசொல்லி. என்னுடன் சினிமாவில் வேலை பார்’ என்று சொன்னார். மும்பைக்கு வந்து அப்பாவுக்குத் தெரியாமல் அண்ணனுடன் வேலை பார்த்தபோது, சினிமா ஆட்கொண்டுவிட்டது.

“ஜி.வி.பிரகாஷுக்கும் அனுராக்குக்கும் நான்தான் மீடியேட்டர்!”

‘தேவ் டி’, ‘கேங்ஸ் ஆஃப் வாஸேப்பூர்’, ‘தட் கேர்ள் இன் எல்லோ பூட்ஸ்’ போன்ற படங்களில் அவருடைய உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். அவர் பார்வையிலிருந்து மாறுபட்ட ராஜ்குமார் குப்தாவுடன் ‘ஆமிர்’ படத்தில் வேலை பார்த்தேன். நடுவில் 2013-ல் ‘மோய் மர்ஜானி’ என்ற குறும்படத்தை அனுராக் காஷ்யப் தயாரிக்க, நான் இயக்கினேன். ஹார்மோன் கோளாறால் தாடி வளரும் ஒரு பஞ்சாபி பெண்ணின் காதல் பற்றிய அந்தக் குறும்படத்துக்கு நல்ல வரவேற்பு. முதல் படம் எடுக்க ப்ளான் செய்தபோது கொரோனா- லாக்டௌனில் மாட்டிக்கொண்டேன். முதல் சினிமா இயக்கும் முன்பே 2 வருடங்கள் காணாமல்போய் விடுமோ என பயந்தபோது நெட்ப்ளிக்ஸுக்காக ‘ஹோம் ஸ்டோரீஸ்’ என்ற ஆந்தாலஜி படத்தையும், அமேசான் ப்ரைமுக்காக ‘அப்சோஸ்’ என்ற ப்ளாக் காமெடி த்ரில்லர் வெப்சீரீஸையும் இயக்கினேன். எல்லாம் நார்மலானதும் இப்போது ‘டாக்டர் ஜி’ தயாராகி நிற்கிறது. அடுத்த படத்தின் திரைக்கதை எழுதி கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்ஸ் ஒப்பந்தம் செய்திருக்கிறது!”

“ஜி.வி.பிரகாஷுக்கும் அனுராக்குக்கும் நான்தான் மீடியேட்டர்!”

“வீட்டிலேயே இரண்டு இயக்குநர்கள். யார் உங்களை அதிகம் பாதித்தது?”

“சந்தேகமே இல்லாமல் மூத்தவர் அனுராக்தான். சினிமாவை அவ்வளவு ஆழமாகக் காதலிப்பவர். சினிமா தவிர அவர் உலகத்தில் யாருமே நுழைய முடியாது. சினிமா பற்றிப் பேசுவதாலேயே என்னால் அவருடன் நெருக்கமாக முடிந்தது. இளையவர் அபினவ் காஷ்யப் முழுக்க கமர்ஷியல் சினிமாக் காதலர். சல்மான் கானை வைத்து அவர் இயக்கிய ‘தபாங்’ பிடிக்காவிட்டாலும் அவருக்காகப் பார்த்தேன். என் இயக்கம் அனுராக்கின் பாதிப்பு இல்லாமல் இருக்கும். அதற்காகக் கடுமையாக உழைத்திருக்கிறேன்!”

“ஜி.வி.பிரகாஷுக்கும் அனுராக்குக்கும் நான்தான் மீடியேட்டர்!”

“டெம்ப்ளேட் கேள்விதான்...தமிழ் சினிமா பார்ப்பீர்களா?”

“அனுராக் காஷ்யப் சொல்லியே நிறைய படங்கள் பார்த்திருக்கிறேன். ‘சுப்ரமணியபுரம்’ ஆரம்பித்து சமீபத்தில் ‘விலங்கு’ வெப் சீரீஸ் வரை பார்த்தேன். இயக்கத்தில் பிஸியானவுடன் செலக்ட்டிவாகப் பார்க்கிறேன். கேங்ஸ் ஆப் வாஸேப்பூரில் நான் உதவி இயக்குநராக இருந்தபோது படத்துக்குப் பின்னணி இசையமைத்தார் ஜி.வி.பிரகாஷ். அனுராக், ‘அக்லி’ படம் பண்ணியபோது செல்போன் வைத்துக்கொள்ளவில்லை. நிறைய டிராவலில் இருந்தார். அதனால் பாடல்களுக்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷுக்கும் அனுராக்குக்கும் மீடியேட்டரே நான்தான். அப்போதிலிருந்து இன்றுவரை என்னுடைய நண்பர்தான் ஜி.வி.பிரகாஷ்!”