Published:Updated:

`ஹாரர் ஜானரில் வெப் சீரியஸ்!' - அனுராக் காஷ்யப்பின் அடுத்த பிளான்

சனா

பாலிவுட்டின் முன்னணி இயக்குநரான அனுராக் காஷ்யப், சசிகுமாரின் இயக்கத்தில் வெளியான `சுப்ரமணியபுரம்' படத்தில் இன்ஸ்பையர் ஆகி `கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர்' படத்தை இயக்கினார். இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அனுராக் காஷ்யப்
அனுராக் காஷ்யப்

அதுமட்டுமின்றி நயன்தாரா, அதர்வா நடிப்பில் வெளியான `இமைக்கா நொடிகள்' படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகராக என்ட்ரி கொடுத்திருந்தார். மேலும், இந்த வருடத்தின் ஆஸ்கர் தேர்ந்தெடுக்கும் குழுவிலும் நியமிக்கப்பட்டிருந்தார்.

கேக்ரெட் கேம்ஸ்
கேக்ரெட் கேம்ஸ்

இந்த நிலையில், தற்போது படங்களைத் தாண்டி வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார், அனுராக். விக்ரம் சந்திரா வெளியிட்ட `சேக்ரெட் கேம்ஸ்' நாவலைத் தழுவி நெட் ஃபிளிக்ஸில் உருவான சீரிஸுக்கு விக்ரமாதித்ய மோட்வானோடு இணைந்து அனுராக்கும் கதை எழுதினார். சைஃப் அலிகான், நவாஸுதின் சித்திக் மற்றும் ராதிகா அப்தே போன்ற பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் இதில் நடித்திருந்தனர். முதல் சீஸனுக்கு அதிக வரவேற்பு கிடைத்ததையடுத்து, இதன் இரண்டாம் சீஸனின் ஒவ்வொரு எபிசோடும் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. இதன் வேலைகளை முடித்துவிட்டு ஒரு ஹாரர் ஜானர் வெப் சீரிஸுக்கு கதை எழுதி, இயக்க இருக்கிறாராம், அனுராக் காஷ்யப். தவிர, இவரை மீண்டும் தமிழில் நடிக்க வைப்பதற்காக சில முயற்சிகளும் போய்க்கொண்டிருக்கிறது.