Published:Updated:

" 'தேவர் மகன்' பாடலுக்காக மன்னிப்புக் கேட்கிறோம்!" - மனம் திறக்கும் கமல்

கமல்

தென்னாப்பிரிக்காவில் இருப்பவர்கள் வெகுவாகத் தங்கள் சாதிப் பெயரைச் சொல்லிக்கொள்வார்கள். எல்லா சாதிப்பெயரையும் சொல்லிக்கொள்வார்கள்

" 'தேவர் மகன்' பாடலுக்காக மன்னிப்புக் கேட்கிறோம்!" - மனம் திறக்கும் கமல்

தென்னாப்பிரிக்காவில் இருப்பவர்கள் வெகுவாகத் தங்கள் சாதிப் பெயரைச் சொல்லிக்கொள்வார்கள். எல்லா சாதிப்பெயரையும் சொல்லிக்கொள்வார்கள்

Published:Updated:
கமல்

" 'தேவர் மகன்', 'சபாஷ் நாயுடு' என சாதிப்பெயர் கொண்ட டைட்டில்கள் குறித்து உங்களிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, 'நோயின் பெயர் சொல்லித்தான் மருந்து கண்டுபிடிக்க முடியும். சாதிப்பெயர் சொல்லித்தான் சாதி ஒழிக்க முடியும்' என்றீர்கள். இந்தியாவிலேயே தமிழகத்துக்கு உள்ள தனிச்சிறப்பு, பெயருக்குப்பின்னால் இருந்த சாதிப்பெயரை ஒழித்தது. பொதுவெளியில் சாதிப்பெயர் இல்லாத தமிழகத்தில், சாதிப்பெயர் சொல்லி சாதி ஒழிக்கப்போகிறேன் என்பது விநோதம் இல்லையா? அதுதான் யதார்த்தம் என்று வைத்துக்கொண்டாலும், ஆதிக்கச்சாதிகள் மட்டும்தானே பெருமையாக நினைத்து சாதிப்பெயர் போடுகிறார்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் இழிவு எனக்கருதி சாதிப்பெயர் போடுவதில்லையே? 'தேவர் மகனை'ப்போல, ஒடுக்கப்பட்ட சாதிகளின் பெயர்களைத் தாங்கிய படங்கள் வரவில்லையே?'வன்முறைக்கு எதிரான படம்' என்று சொல்லப்படும் 'தேவர் மகன்' படப்பாடலே சாதிய மோதல்களுக்கும் வன்முறைக்கும் வித்திட்டதே?" - சுகுணா திவாகர். விரிவான பேட்டியை படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/31IFgkj

ஒரு ஹீரோவை, கதையின் நாயகனை வாழ்த்திப்பாடுவதற்காக இயற்றப்பட்ட பாடல்தான் அது.

கமல்ஹாசன்: "அந்த விபத்துக்கு நானும், இளையராஜாவும், இப்போது இல்லையென்றாலும், வாலி அவர்களின் சார்பிலும் மன்னிப்பு கேட்கிறோம். ஆனால், அந்தப் பாடலை உருவாக்கியபோது எங்கள் மனதில் அதுபோன்ற எந்த எண்ணமும் இல்லை. எதையும் நினைக்காமல் செய்துவிட்டோம். வியாபார யுக்தியோ, ஒரு இனத்தை வாழ்த்திப்பாட வேண்டும் என்பதோ எங்கள் நோக்கமாக அப்போது இல்லை. ஒரு ஹீரோவை, கதையின் நாயகனை வாழ்த்திப்பாடுவதற்காக இயற்றப்பட்ட பாடல்தான் அது.

இப்போது மறுபடியும் 'தேவர் மகன்' எடுத்தால்கூட அதற்கு 'தேவர் மகன்' எனப் பெயர்வைக்க மாட்டேன். ஆனால், அந்தக் காலத்தில் அது தேவைப்பட்டது. மது ஒழிப்பைப் பற்றி ஒரு படம் எடுக்கும்போது அதன் கதாநாயகன் குடிகாரனாக இருப்பது மிக அத்தியாவசியம். குடியிலிருந்து மீள்வதற்கு அவனைக் குடிகாரனாகக் காட்டித்தான் ஆகவேண்டும்.

தென்னாப்பிரிக்காவில் இருப்பவர்கள் வெகுவாகத் தங்கள் சாதிப் பெயரைச் சொல்லிக்கொள்வார்கள். எல்லா சாதிப்பெயரையும் சொல்லிக்கொள்வார்கள். அங்கே செட்டியார் வந்திருக்கிறார், முதலியார் வந்திருக்கிறார் என்றுதான் அறிமுகப்படுத்துவார்கள். ஆனால், அங்கே அதற்கு வேறெந்தப் படிநிலைகளும் இல்லை. ஜெர்மனியில் ஷூமேக்கர் என்பது தொழிற்பெயர்தான். செருப்பு தைப்பவர் ஷூமேக்கர். அங்கே அது அவமானமாக இல்லை. ஆனால், இங்கே அது அவமானமாக வந்துசேர்ந்துவிட்டது. இது மெதுவாக மாறும். அந்த மாற்றுத்துக்கான கருவிகளாக நாங்களும் நிச்சயம் இருப்போம்.''

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

- விகடன் பிரஸ்மீட்டில் கமல்! #VikatanPressMeet: விகடன் நிருபர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரஸ்மீட் இது. இதில் கமல்ஹாசன் பதிலளித்த கேள்விகள்:

''கதாநாயகனாக உங்களுடைய முதல் நாள் ஷூட்டிங் அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்!"

" 'பாகுபலி', 'சைரா நரசிம்ம ரெட்டி' என இப்போது வரலாற்றுப்படங்கள் வருகின்றன. ஆனால், இதற்கெல்லாம் வித்திட்டவர் நீங்கள். 'மருதநாயகம்' படத்தை நாங்கள் திரையில் பார்க்க வாய்ப்பிருக்கிறதா?"

" 'தேவர் மகன்' பாடலுக்காக மன்னிப்புக் கேட்கிறோம்!" - மனம் திறக்கும் கமல்

" 'கமல், ரஜினி அரசியல் வேண்டாம் ப்ளீஸ்' என்று உங்கள் நண்பர் சிரஞ்சீவி ஆனந்த விகடன் பேட்டியில் சொல்லியிருந்தார். உங்கள் பதில் என்ன?''

"வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்துப் போட்டியிட வாய்ப்பு இருக்கிறதா?''

"காதல் மன்னன், உலக நாயகன், நம்மவர், உங்கள் நான்... எது உங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது?''

"அமித் ஷா தொடர்ந்து இந்தித் திணிப்பை முன்னெடுத்துப் பேசிவருகிறார். மோடி எங்கு சென்றாலும் புறநானூறு சொல்வது, குறள் சொல்வது எனத் தமிழை முன்னிலைப்படுத்துகிறார். இதை ஒரு யுக்தியாக அவர்கள் செய்வதாக நீங்கள் நினைக்கிறீர்களா?''

"பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, தென்னிந்தியாவில் இருந்து எழுந்த எதிர்ப்புக் குரல்களில் உங்களுடைய குரல் முக்கியமானது. விரைவில் இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகவிருக்கிறது. உங்கள் கருத்து என்ன?''

'' 'தலைவன் இருக்கிறான்' என்ன களம்? ஒரு எக்ஸ்குளூசிவ் தகவல் சொல்லுங்களேன்...''

- இந்தக் கேள்விகளுக்கு கமல்ஹாசன் அளித்த விரிவான பதில்களை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > "வேட்டி கட்டினால் மட்டும் தமிழ்நாட்டில் ஓட்டு விழுமா?" https://www.vikatan.com/news/politics/exclusive-vikatan-press-meet-with-kamal-part-1

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய> http://bit.ly/2MuIi5Z