Published:Updated:

ஏ.ஆர்.ரஹ்மான் இசை! - `பாப்' உலகில் அடியெடுத்து வைக்கும் ஏ.ஆர்.அமீன்

ஏ.ஆர்.அமீன் பாடகராக மீண்டும் தன் தந்தையின் இசையில் பாடியுள்ளார்.

`மெட்ராஸ் கிக்' என்ற சுயாதின பாடல் ஆல்பத்தின் முதல் சீசன் பலருக்கும் பிடித்தமான பாடல்களைக் கொடுத்திருக்கிறது. இந்த வருடம் அவ்வளவு வரவேற்புக்குரிய பாடல்களாக அமையவில்லை என்ற கருத்து இருந்த போதிலும், புது புது கலைஞர்களை அறிமுகப்படுத்தியுள்ளது இந்த சீசன். சினிமா அல்லாத பாடல்களை யாரும் கேட்காத நிலையை மாற்ற ஒரு மேடையாக இருக்கும் மெட்ராஸ் கிக்கின் இந்த சீசனில் இறுதியாக வந்திருக்கும் பாடல் `சகோ'.

சகோ
சகோ

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏ.ஆர்.அமீன் பாடியுள்ள இப்பாடல் தற்போது வெளியாகியுள்ளது. காதல் பற்றியும் நட்பைப் பற்றியும் பேசும் இப்பாடலில் அமீன் பாடி, நடித்துள்ளார். பாடல் வரிகளை விவேக் மற்றும் ஏடிகே (ADK) இணைந்து எழுதியுள்ளனர். இந்த பாப் வீடியோவை அமித் கிருஷ்ணன் இயக்க, கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அமீன் ரஹ்மானுடன்
அமீன் ரஹ்மானுடன்

இப்பாடலைப் பற்றி அமீன் கூறும்போது,``'சகோ' பாட்டை அப்பாவோட சேர்ந்து தயாரிக்கிறது பெரும் சவாலா இருந்துச்சு. அதேசமயம் ரொம்ப சந்தோஷமாவும் இருந்துச்சு. இந்தப் பாட்டுக்கு வர்ற ஆடியன்ஸ் கமென்ட்ஸைப் பார்க்க ஆவலா இருக்கேன். நல்ல வரவேற்பு வரும்னு நம்புறேன்".