Published:Updated:

`இருட்டு அறையில் முரட்டு குத்து' இயக்குநருடன் இணையும் அரவிந்த் சாமி... படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

சன்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் அரவிந்த் சாமி நடிக்கும் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

கெளதம் கார்த்திக் - சந்தோஷ் ஜெயக்குமார் - அரவிந்த் சாமி
கெளதம் கார்த்திக் - சந்தோஷ் ஜெயக்குமார் - அரவிந்த் சாமி

கெளதம் கார்த்திக்குடன் 'ஹரஹர மஹாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து', ஆர்யாவை வைத்து 'கஜினிகாந்த்' உள்ளிட்ட படங்களை இயக்கிய சன்தோஷ் ஜெயக்குமார், தனது நான்காவது படமாக ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் ஹீரோயினே இல்லாமல் கெளதம் கார்த்திக்கை வைத்து 'தீமைதான் வெல்லும்' என்றொரு படத்தை ஆரம்பித்தார்.

புலனாய்வு
புலனாய்வு

பின்னர், அது பல்வேறு காரணங்களால் கைவிடப்பட, உடனடியாக அரவிந்த் சாமியை ஹீரோவாக வைத்து புதிய படமொன்றை தொடங்கினார், சன்தோஷ். இந்தப் படத்தை எட்சட்ரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் தயாரிக்கிறார். தன்னுடைய முதல் மூன்று படங்களை காட்டிலும் இந்தப் படம் வித்தியாசமான ஜானராக இருக்கும் என்று கூறியிருந்தார்.

"என்னுடைய முதல் மூன்று படங்களை காட்டிலும் இந்தப் படம் வித்தியாசமான ஜானராக இருக்கும்!"
சன்தோஷ் ஜெயக்குமார்

நடிகர் அரவிந்த் சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அந்தப் படத்தின் பெயரை வெளியிட்டுள்ளது படக்குழு. மிஸ்டரி த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்திற்கு 'புலனாய்வு' எனப் பெயரிட்டுள்ளனர். இதனை இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.