Published:Updated:

``கிஸ் மிஸ்னு விஜய் சார் சொல்ல... திரும்பிப் பார்த்தா..!" - `முத்தம் ஸ்டோரி' பகிரும் சதீஷ்

`மாஸ்டர்' படத்தின் கலை இயக்குநர் சதீஷ்குமார் பேட்டி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``சினிமாவுக்குள்ள எப்படி வந்தீங்க?"

``மேட்டூர் பக்கத்துல இருக்கிற மேச்சேரிதான் என் சொந்த ஊர். சின்ன வயசில இருந்தே நான் நல்லா வரைவேன். அப்படித்தான் கவின்கலை கல்லூரியில சேர்ந்தேன். அங்க நிறைய கத்துக்கிட்டேன். அங்க முடிச்சிட்டு செராமிக் டிசைனிங் படிச்சேன். அந்தப் படிப்போட கடைசியில இந்துஸ்தான் லிவர் கம்பெனிக்கு ஒரு புராஜெக்ட் பண்ணேன். அங்கயே வேலைக்குக் கூப்பிட்டாங்க. ஆனா, எனக்கு சினிமாவுலதான் விருப்பம். நிறைய ஆர்ட் டைரக்டர்கிட்ட அசிஸ்டென்ட்டா சேரலாம்னு முயற்சி பண்ணிட்டிருந்தேன். சரியா அமையல. சினிமாவே வேணாம்னு அனிமேஷன் கம்பெனியில வேலைக்குப் போயிட்டேன். அங்க இருந்த எல்லோரும் சினிமா பத்தியே பேசிட்டிருந்தாங்க. இது சரிவராதுனு மறுபடியும் வாய்ப்பு தேட ஆரம்பிச்சேன். என் ஃப்ரெண்ட் மூலமா `பாரிஜாதம்' படத்துல அப்பரன்டீஸா வேலை செய்ய வாய்ப்பு கிடைச்சது. டைரக்டர் வீரசமர் என் காலேஜ் சீனியர். அவர் `வெயில்' படத்துல வொர்க் பண்ணக் கூப்பிட்டார். அப்படியே கொஞ்சம் கொஞ்சமா சினிமாவுக்குள்ள வந்தேன். அப்படியே நிறைய படங்கள்ல அசிஸ்டென்ட் ஆர்ட் டைரக்டரா வேலை பார்த்தேன். மணிரத்னம் சார் இயக்கின `கடல்' படத்துக்கு கன்னட ஆர்ட் டைரக்டர் ஒருத்தர்தான் வொர்க் பண்ணார். தமிழ் தெரிஞ்ச யாரையாவது கேட்குறாங்கனு தகவல் வந்தது. அதுல வொர்க் பண்ணதுக்கப்புறம் மணி சாருக்கு என்னோட பெயர் தெரிய ஆரம்பிச்சது. அசிஸ்டென்ட்ல இருந்து அசோஸியேட் ஆனேன். மணி சார் என்னோட பெயரைச் சொல்லி கூப்பிடும்போது அவ்ளோ சந்தோஷமா இருக்கும். `கடல்'தான் என் வாழ்க்கையில பெரிய ப்ரேக் கொடுத்த படம்."

சதீஷ்குமார்
சதீஷ்குமார்

``ஆர்ட் டைரக்டரா உங்களுடைய முதல் படம் என்ன?"

`` 'கடல்'ல வேலை செஞ்சுட்டு இருந்தப்ப, கொஞ்ச நாள் கேப் இருந்தது. அந்த கேப்ல நண்பர் மூலமா `முகமூடி' படத்துல ஒரு பத்து நாள் வேலை செஞ்சேன். அங்க மிஷ்கின் சார் நல்ல பழக்கமானார். அடுத்து அவரோட `ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்துல ஆர்ட் டைரக்டரா வொர்க் பண்ணச் சொன்னார். அதுதான் என்னோட முதல் படம். அந்தப் பட அனுபவமே மறக்கமுடியாதது. அதுக்கு அப்புறம் `சவரக்கத்தி', `ஜோக்கர்', `மெஹந்தி சர்க்கஸ்', `மாநகரம்'னு நிறைய படங்கள்ல வொர்க் பண்ணேன். `மாஸ்டர்' என்னோட 16-வது படம்."

``4.32 டைட் அவுட்... விஜய் பாடி லாங்குவேஜ் ரெஃபரன்ஸ்!'' - மாஸ்டர் `குட்டி ஸ்டோரி’ மேக்கிங் சுவாரஸ்யங்கள்

``லோகேஷ் கனகராஜ்கூட ஆரம்பத்துல இருந்து பயணிச்சிட்டிருக்கீங்க. இந்தக் கூட்டணி எப்படி உருவானது?"

``நான் `ஓ காதல் கண்மணி'ல வொர்க் பண்ணிட்டு இருக்கும்போது, `மாநகரம்' படத்துல வொர்க் பண்றதுக்காகக் கூப்பிட்டாங்க. 20 நாள் எனக்காக வெயிட் பண்ணாங்க. அந்த நம்பிக்கைக்காகவே வொர்க் பண்ணேன். `மாநகரம்' படத்தோட கதையை என்கிட்ட சொல்லும்போதே எங்க மியூசிக் வரும், எங்க டாப் ஆங்கிள் வைக்கப் போறோம், இந்த ஆர்ட் வொர்க்கை எவ்வளவு தூரம் காட்டப்போறோம்னு தெளிவா சொல்லிட்டார். என்கிட்ட என்ன சொன்னாரோ அது அப்படியே படத்துல இருந்தது. சில இடங்கள்ல `இது வொர்க் அவுட்டாகுமா'னு கேட்பேன். `ஆடியன்ஸுக்குப் பிடிக்கும். நிச்சயமா வொர்க் அவுட்டாகும்'னு அவ்வளவு நம்பிக்கையா சொல்வார். என்ன வேணும்கிற க்ளாரிட்டி, ஸ்பாட்ல இருக்கிற சுறுசுறுப்பு எல்லாமே மணி சாருக்குப் பிறகு இவர்கிட்ட பார்க்குறேன். `கைதி' கமிஷனர் ஆபீஸ் செட் போட அவ்வளவு டீடெயிலிங் கொடுத்தார். கேமராமேன் சத்யன் சூரியன் என் நண்பர். நான், லோகேஷ், சத்யன் சூரியன் எங்களுக்குள்ள அவ்வளவு புரிதல் இருக்கும். இந்தப் புரிதல்தான் எங்களை அழகா இயக்கிக்கிட்டிருக்கு. எங்க மூணு பேரோட அசிஸ்டென்ட்ஸ் எல்லாரும் நண்பர்கள். `மாஸ்டர்' பட ஷூட்டிங் பிக்னிக் மாதிரிதான் இருக்கும்."

`` `மாஸ்டர்' பத்தி உங்ககிட்ட லோகேஷ் எப்போ சொன்னார்?"

`` 'கைதி' ரிலீஸுக்கு முன்னாடி, `ஒரு பெரிய ஹீரோவுக்கு கதை சொல்லப்போறேன்'னு சொல்லிட்டுப் போனார். மறுநாள் வந்து `ஓகே ஆகிடுச்சு. நம்மதான் பண்றோம். ரெடியாகிடுங்க'னு சொன்னார். ஆனா, யாருக்கு கதை சொல்லியிருக்கார்னு தெரியாது. அப்புறம்தான் விஜய் சார்னு சொன்னார். `கைதி' போஸ்ட் புரொடக்‌ஷன் போய்க்கிட்டிருந்த சமயத்துல அவர் `மாஸ்டர்' கதையில வொர்க் பண்ணிட்டிருந்தார். அந்த சமயத்துல அவர் தூங்கவேயில்லை. ஒருநாள் எனக்கும் கேமராமேனுக்கும் கதை சொன்னார். வேற லெவல்ல இருந்தது. அதைத் திரையில பார்க்க ரொம்ப ஆவலா இருக்கேன்."

``விஜய் செட்டை பார்த்துட்டு எதாவது சொன்னாரா?"

``நிறைய லைவ் லொகேஷன்தான் போனோம். ஆனா, அதைக் கதைக்குத் தகுந்த மாதிரி மாத்துறதுக்கு சில வேலைகள் பண்ண வேண்டியதா இருந்தது. நிறைய காலேஜ், நிறைய ஜெயில்களைப் பார்த்தோம். அது எல்லாத்தையும் வெச்சு ரியலா இருக்கிறதுக்காக சில விஷயங்களைச் சேர்த்திருக்கோம். நிறைய முறை `செட் சூப்பரா இருக்கு, ரியலா இருக்கு'னு கூப்பிட்டுப் பாராட்டினார். ஒரு முறை `இது செட்டா.... நான் ரியல் ஜெயில்னு நினைச்சேன்'னு சொல்லி சிரிச்சார். நான் அவரோட ரசிகன். ஒவ்வொரு ஃப்ரேமிலும் அவரை ரசிச்சுக்கிட்டே இருந்தேன்."

`` `மாஸ்டர்' ஸ்பாட்ல விஜய் சார் ஆல்வேஸ் ஹாப்பிதான்!'' - ரமேஷ் திலக்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``விஜய்யை இறுக்கி அணைச்சு விஜய் சேதுபதி ஒரு முத்தம் கொடுத்தாராமே..!"

``ஆமா. அந்த அற்புத நிகழ்வு என் பிறந்தநாள் அன்னிக்குதான் நடந்தது. தொடர்ந்து வொர்க் பண்ணிட்டு இருக்கதால மொத்த டீமுகுக்கு என் பிறந்தநாள் தெரியும். `கைதி' ஸ்பாட்லயும் எனக்குக் கேக் வெட்டினாங்க. `மாஸ்டர்' ஷூட்டிங் நடந்த 129 நாள்ல நிறைய பேருக்குப் பிறந்தநாள் வந்தது. எனக்கு என்ன அதிர்ஷ்டம்னா, என் பிறந்தநாள் அன்னிக்கு நடந்த ஷூட்ல விஜய் சாருக்கும், விஜய் சேதுபதி சாருக்கும் காம்பினேஷன் இருந்தது. எனக்குத் தெரியாமலே 37 கிலோ கேக் ரெடி பண்ணி வெச்சிருந்தாங்க. என்னைக் கேக் வெட்டச் சொல்லி `ஹாப்பி பர்த்டே டூ யூ'னு விஜய் சார்தான் முதல்ல பாட ஆரம்பிச்சார். கேக் வெட்டி முடிச்சவுடனே விஜய் சாருக்கும், சேதுபதி சாருக்கும் கொடுத்தேன். அப்போ `கிஸ் மிஸ்ஸிங்'னு விஜய் சார் சொல்ல, சேதுபதி சார் எனக்கு முத்தம் கொடுத்தார். அப்புறம், எல்லோருக்கும் கேக் கொடுத்துட்டிருந்தேன். எல்லோரும் திடீர்னு கத்துனாங்க. என்னன்னு திரும்பிப் பார்த்தா சேது சார், விஜய் சாருக்கு முத்தம் கொடுத்துட்டிருந்தார். ரெண்டு பேரும் என் பிறந்தநாளை திருவிழாவா ஆக்கிட்டாங்க."

விஜய் - விஜய் சேதுபதி
விஜய் - விஜய் சேதுபதி

``விஜய் - விஜய் சேதுபதி வர்ற காட்சிகள் எப்படி இருக்கும்?"

``அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கிறதை நேர்ல பார்க்குறதுக்கு அப்படி இருக்கும். குறிப்பா, ஸ்டன்ட் காட்சிகள் கிளாஸா இருக்கும். கேமரா வொர்க் நல்லா பேசப்படும். குட்டி ஸ்டோரி பாட்டுல தினேஷ் மாஸ்டர் செம க்யூட்டா கோரியோ பண்ணியிருக்கார். காலேஜ் போர்ஷன் எடுக்கும்போது திருவிழா மாதிரி இருக்கும். யூடியூப் ஆர்டிஸ்ட் நிறைய பேர் நடிச்சிருக்காங்க. டெல்லியில லொகேஷன் பார்க்க நிறைய காலேஜுக்குப் போனோம். அங்க இருக்கிற தமிழ் பசங்க, `விஜய் அண்ணா படம் ஷூட்டிங்காமே. அண்ணா எப்போ வருவார்'னு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. எப்படி நியூஸ் தெரிஞ்சதுனு ஆச்சர்யமா இருந்தது."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு