Published:Updated:

ஆச்சர்யப்பட்ட ‘ஆச்சார்யா’ சிரஞ்சீவி!

சிரஞ்சீவி
பிரீமியம் ஸ்டோரி
சிரஞ்சீவி

‘`விகடனுக்கும் எனக்கும் தொடர்பு நிறைய இருக்கு. நான் ஸ்கூல் படிக்கும் போது சாக்பீஸ்களால் செய்த சிற்பங்கள் விகடனில் படத்தோட செய்தி வந்திருக்கு

ஆச்சர்யப்பட்ட ‘ஆச்சார்யா’ சிரஞ்சீவி!

‘`விகடனுக்கும் எனக்கும் தொடர்பு நிறைய இருக்கு. நான் ஸ்கூல் படிக்கும் போது சாக்பீஸ்களால் செய்த சிற்பங்கள் விகடனில் படத்தோட செய்தி வந்திருக்கு

Published:Updated:
சிரஞ்சீவி
பிரீமியம் ஸ்டோரி
சிரஞ்சீவி

ஆச்சர்யங்கள் அள்ளுகிறது சிரஞ்சிவீயின் ‘ஆச்சார்யா’ படத்திற்காக அமைக்கப்பட்டிருக்கிற செட். இந்தியாவிலேயே அதிக பரப்பளவில் (largest single set) சிங்கிள் செட் அமைத்திருக்கிறார் நம்மூர்க்காரான சுரேஷ் செல்வராஜன். ரஜினியின் ‘பேட்ட’, விக்ரமின் ‘இருமுகன்’ படங்களின் புரொடக்‌ஷன் டிசைனர் இவர். மகேஷ்பாபுவின் ‘பரத் அனே நேனு’வைத் தொடர்ந்து சிரஞ்சீவியின் ‘ஆச்சார்யா’, ‘லூசிபர்’, இந்தியிலும் புரொடக்‌ஷன் டிசைனராகக் கலக்கிவருகிறார். ‘எந்திரனி’ன் கலை இயக்குநராகவும் ஸ்கோர் செய்திருக்கும் சுரேஷிடம் பேசினேன்.

ஆச்சர்யப்பட்ட ‘ஆச்சார்யா’ சிரஞ்சீவி!

‘`விகடனுக்கும் எனக்கும் தொடர்பு நிறைய இருக்கு. நான் ஸ்கூல் படிக்கும் போது சாக்பீஸ்களால் செய்த சிற்பங்கள் விகடனில் படத்தோட செய்தி வந்திருக்கு. பிறகு, நான் வரைஞ்ச ஓவியம் விகடன்ல வெளியாகி, அதுக்கு நாலாயிரம் ரூபாய் பரிசும் கிடைச்சிருக்கு. அப்ப அது நாலு லட்ச ரூபாய்க்கு சமம். இப்ப விகடன்ல என் நேர்காணல் வெளிவரும் அளவுக்கு நான் வளர்ந்திருக்கிறதை நினைக்கும் போது ரொம்பவே சந்தோஷமா இருக்கு.”

ஆச்சர்யப்பட்ட ‘ஆச்சார்யா’ சிரஞ்சீவி!
ஆச்சர்யப்பட்ட ‘ஆச்சார்யா’ சிரஞ்சீவி!

`` ‘ஆச்சார்யா’ செட் அப்படி என்ன ஸ்பெஷல்? சிரஞ்சீவியே புகழ்ந்து தள்ளுறாரே?’’

‘` ‘ஆச்சார்யா’ கதைக்காக பொல்யூஷனே இல்லாத ஒரு கோயில் நகரத்தை உருவாக்க வேண்டியிருந்தது. இப்ப உள்ள சூழல்ல பொல்யூஷனே இல்லாத ஒரு நகரத்தை வடிவமைக்கறது பெரிய சவால். பிளாக்டிக் கழிவுகள், பெரிய பெரிய ஹோர்டிங்ஸ், கேரி பேக்ஸ், கேபிள் ஒயர்கள், செல்போன் டவர்கள் இல்லாத நகரத்தைப் பார்க்கவே முடியாது. அப்படி மாசு இல்லாமல் அழகான ஒரு நகரத்தை சிங்கிள் செட்டா அமைக்கணும்னு கேட்டதும், என் மனசுல உடனே வந்து நின்னது, நான் பிறந்து வளர்ந்த சிதம்பரம்தான். அப்படி ஒரு கோவில் நகரத்தைத்தான் 20 ஏக்கர் பரப்பளவுல 23 கோடி செலவுல ஒரே சிங்கிள் செட்டா போட்டிருக்கோம். ஹேப்பி ஆன சிரஞ்சீவி சார், ‘என்னோட அடுத்த படமா ‘லூசிபர்’ ரீமேக் பண்றேன். அதையும் நீங்கதான் பண்றீங்க’ன்னு சொல்லிட்டார்.’’

``நீங்க கலை இயக்குநரான கதையைச் சொல்லுங்க...’’

“பாண்டிச்சேரி பாரதியார் பல்கலைக்கூடத்தில் ஓவியம் படிச்சேன். ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ ஷூட்டில் சாபுசிரில் சாரைப் போய்ப் பார்த்து அவர்கிட்ட அசிஸ்டென்ட் சான்ஸ் கேட்டேன். ‘படிப்பு முடிச்சிட்டு வந்து பாருங்க’ன்னார். அதே போல என்னைச் சேர்த்துக்கிட்டார். தமிழ்ல முதன்முதல்ல நான் கலை இயக்குநராக அறிமுகமானது ரவி.கே.சந்திரன் சாரோட ‘யான்.’ ‘இருமுகன்’ல தயாரிப்பு வடிவமைப்பாளரா உயர்ந்தேன். மகேஷ் பாபு சார் ரொம்ப அமைதியானவர். ‘பரத் அனே நேனு’வில் சட்டசபை செட் என்னை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போச்சு. அந்த செட் ஒரு ரியல் அசம்பிளியா இருக்குன்னு மகேஷ்பாபு சார் பாராட்டினதோடு ஒரு காஸ்ட்லியான ஐபேடையும் பரிசளிச்சார். என்னோட ஆரம்பக்கால வளர்ச்சிக்கு சாபு சாரும், ரவி.கே.சந்திரன் சாரும் அவ்ளோ உதவினாங்க.”

ஆச்சர்யப்பட்ட ‘ஆச்சார்யா’ சிரஞ்சீவி!

`` ‘பேட்ட’ ரஜினி என்ன சொன்னார்..?’’

“ ‘பேட்ட’யில மார்க்கெட் செட், சர்ச் செட் அதிகம் பேசப்பட்டுச்சு. வாரணாசியில ரெண்டே நாள்ல ஒரு ட்ரெயின் செட் போட்டதை மறக்க முடியாது. மார்க்கெட் செட் அமைச்ச அன்னிக்கு ஸ்பாட்டுக்கு வந்த விஜய்சேதுபதி, ‘என் அடுத்த படத்துல நீங்க ஒர்க் பண்ணுங்க’ன்னார். ரஜினி சாரும் ஆச்சர்யமாகி, ‘இந்த செட் அமைச்சது யார்?’னு விசாரிச்சார். சார்கிட்ட நான் ‘எந்திரன்’ல கலை இயக்குநரா ஒர்க் பண்ணின விஷயங்களைச் சொன்னதும் சந்தோஷமாகிட்டார்.”

ஆச்சர்யப்பட்ட ‘ஆச்சார்யா’ சிரஞ்சீவி!
ஆச்சர்யப்பட்ட ‘ஆச்சார்யா’ சிரஞ்சீவி!

``பாலிவுட்ல உங்க ட்ராவல் பத்திச் சொல்லுங்க...’’

“இந்தியில் என் முதல் படமே 100 கோடி ரூபாய் புராஜெக்ட். அக்‌ஷய்குமார், சித்தார்த் மல்ஹோத்ரா நடிச்ச ‘பிரதர்ஸ்’ படம். அந்தப் பட வாய்ப்பு மொதல்ல சாபு சார்கிட்டதான் போச்சு. அவர்தான் ‘நான் எப்படி ஒர்க் பண்ணுவேனோ, அதேமாதிரி சுரேஷ் ஒர்க்கும் இருக்கும்’னு சொல்லி என்னை புரொடக்‌ஷன் டிசைனராக்கினார். ‘கஹானி’ இயக்குநர் சுஜாய் கோஷின் ‘டைப்ரைட்டர்’ வெப் சீரிஸ்ல ஒரு பழங்கால வீடு ஒண்ணு செட் போட்டிருந்தேன். ‘அந்த வீடு எங்கே இருக்கு?’ ஷூட்டுக்குத் தேவைப்படுது’ன்னு ஹாலிவுட்ல இருந்து ஏகப்பட்ட போன்கால்ஸ் வந்ததா தன் ட்விட்டர் பக்கத்துல சுஜாய் கோஷ் குறிப்பிட்டு என்னை கௌரவப்படுத்தினார். இப்ப தெலுங்கு ‘ஆலவைகுண்டபுரம்’ படத்தின் இந்தி ரீமேக் வேலைகளும் போயிட்டிருக்கு. கார்த்திக் ஆர்யன் ஹீரோவா பண்றார். ஹிர்த்திக் ரோஷனின் பர்சனல் டிசைனராகவும் இருக்கேன். சமீபத்துல சல்மான்கானுக்கு 3டி டெக்னாலஜியோட அவரது முகத்தை வெச்சு, ஒரு மாஸ்க் பண்ணிக் கொடுத்தேன். ‘ஓம் சாந்தி ஓம்’ படத்தில் சாபுசிரில் சார் அசிஸ்டென்டா ஒர்க் பண்ணுனப்ப எனக்கு இந்தி தெரியாது;ஆங்கிலமும் சரியா வராது. நான் சிதம்பரத்தில் தமிழ் மீடியத்தில் படிச்சு வளர்ந்த பையன். இன்னைக்கு தமிழ்நாடு தாண்டி வேலைகள் பார்க்கிறது ரொம்பவே உற்சாகமா இருக்கு!”

மகிழ்ச்சி மின்னல் தெறிக்கப்பேசுகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism