Published:Updated:

மாணிக்க விநாயகம் பெயரைப் போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்தவர் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

மாணிக்க விநாயகம்
News
மாணிக்க விநாயகம்

பின்னணிப் பாடகரும் , நடிகருமான மாணிக்க விநாயகம் உடல்நலக் குறைவு காரணமாக மறைந்தார்.

பின்னணிப் பாடகரும் , நடிகருமான மாணிக்க விநாயகம் உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார். இவரின் தந்தை வழுவூர் பி. ராமையா பிள்ளை பிரபல பரதநாட்டிய ஆசிரியர். தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிக்கிறார். பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

மாணிக்க விநாயகம்
மாணிக்க விநாயகம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

திருடா திருடி, வேட்டைக்காரன், வ குவாட்டர் கட்டிங் , யுத்தம் செய் உள்ளிட்ட படங்களில் நடிகராக நடித்துள்ளார். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம் பெற்ற `விடைகொடு எங்கள் நாடே!' படலை இசையமைப்பாளர் எம்.எஸ்.வி- யுடன் இணைந்து பாடியிருப்பார். இவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரின் மறைவையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். அவரின் இரங்கல் கடிதத்தில், `` பல பாடல்களை பாடி, துன்பமானாலும், துள்ளலானாலும் தனது குரல் வளத்தால் ரசிகர்களுக்கு விருந்தளித்தவர். தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் அன்பைப் பொழிந்து, பெயரைப் போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்த அவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். " எனக் குறிப்பிட்டிருக்கிறார்.