''எத்தனை தடைகளை நான் கடந்து வந்தாலும் என்னுடன் என்றுமே இருப்பது உங்கள் பேரன்பு. அதான் நான் அடுத்தடுத்து படங்கள் தருவதற்கும் உடல் எடையை குறைத்து உத்வேகமானத்துக்கும் மிக முக்கிய காரணம். உங்களை நேரடியாக சந்திக்கும் நிகழ்வை விரைவில் ஒருங்கிணைப்பேன்'' என்று 'மாநாடு'க்கு முன் சிலம்பரசன் ரசிகர்களுக்கு அறிக்கை விட்டுச் சொன்னார். அதன் பின் மாநில, மாவட்ட வாரியாக ரசிகர்களை ஒருங்கிணைக்கும் வேலையில் இறங்கினார். வருகிற பிப்ரவரி 3 அவரது பிறந்த நாளில் ரசிகர்களை சந்தித்து மகிழ்வார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். சிலம்பரசனுக்கும் அப்படி ஐடியா இருக்கிறது என்கிறார்கள்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இன்னொரு பக்கம் சிலம்பரசன் இப்போது கௌதம் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு'வில் நடித்து வருகிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். அதில் அவருக்கு ஐந்து கெட்டப்புகள் என்கிறார்கள். இப்படத்தை ஏப்ரலில் வெளியிட திட்டமிட்டு வருகின்றனர். அதனையடுத்து ஞானவேல் ராஜா தயாரிப்பில் ஒபிலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் `பத்து தல' படத்தில் நடித்து வருகிறார். இதற்கும் ஏ.ஆர். ரஹ்மான் தான் இசையமைத்து வருகிறார். அவரது ஜோடியாக பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கலையரசன் எனப் பலரும் நடித்து வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் அப்டேட்களும் 'வெந்து தணிந்தது காடு'வின் சிங்கிள் ட்ராக்கும் சிம்புவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகிறது. இந்த டபுள் ட்ரீட்டால் சிம்புவின் ரசிகர்கள் பிப்ரவரி 3-ம் தேதிக்காக காத்திருக்கிறார்கள்.