நடிகர் சிலம்பரசன் சமீபத்தில் நடித்து வெளியான 'மாநாடு' திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கிடையில் அவர் கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் நடித்து வந்த 'வெந்து தணிந்தது காடு' படத்தின் டீசர் ஒன்றும் நேற்று வெளியானது. இந்த நிலையில்தான் நடிகர் சிலம்பரசனுக்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்று சமூக வலைதளங்களில் தகவல் வைரலாக பரவி வருகின்றன இதுகுறித்து சிலம்பரசன் தரப்பில் பேசினோம்.

சிம்பு தற்போது கௌதம் இயக்கும் வெந்து தணிந்தது காடு ஷூட்டிங்கில் இருக்கிறார். அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்படவே மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறதா என பரிசோதனை நடந்தது. ஆனால், ஏற்பட்டிருக்கும் காய்ச்சல் வைரல் காய்ச்சல் தான் எனவும் அவர் சிறிது நாள் ஓய்வு எடுக்க வேண்டும் எனவும் மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிலம்பரசனும் அவரது நண்பரும் நடிகருமான மஹத் தனது டிவிட்டர் பக்கத்தில் சிம்பு நலமுடன் இருக்கிறார்.அவர் வீடு திரும்பினார் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.