டான் திரைப்படம் பற்றிய இந்த 10 விஷயங்கள் தெரியுமா?!
1. போலீஸாக, டாக்டராக எனப் பல கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தாலும் சிவகார்த்திகேயன் முதன் முதலாக காலேஜ் ஸ்டூடண்டாக நடிக்கும் படம் 'டான்' தான். சிவகார்த்திகேயன் அஜித்தின் ஏகன் படத்தில்தான் முதன் முதலாக அறிமுகமாகினார். அதில் அவருக்கு காலேஜ் ஸ்டூடண்ட் ரோல். ஆனால், எடிட்டிங்கில் சிவாவின் போர்சன் கத்திரி போடப்பட்டிருக்கிறது. எனவே, அபிசியலாக டான் தான் அவரது முதல் காலேஜ் ஸ்டூடண்ட் ரோல் மூவி.
2. படத்தில் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரத்தின் பெயர் சக்கரவர்த்தி. படத்தின் இயக்குநர் பெயரும் சிபிச் சக்கரவர்த்தி!

3. படத்தில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் கெஸ்ட் ரோலாக நடிக்கிறார். சிவகார்த்திகேயனும் அவரும் நடிக்கும் முதல் படம் இதுதான்.
4. தற்போது பாடலாசிரியராகவும் அப்ளாஸ் அள்ளிவரும் சிவகார்த்திகேயன் டான் படத்திலும் ஒரு டூயட் பாடலை எழுதியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
5. சிவகார்த்தியன் தனது டாக்டர் படத்தின் ரூ.100 கோடி வசூலின் மூலமாக 100CR க்ளப்பில் இணைந்திருக்கிறார். அதன் பிறகு வெளியாகும் முதல் படம் டான் தான்.
6. படத்தின் இயக்குநர் சிபிச் சக்கரவர்த்தி தனது முதல் படமான டானிலேயே 5 இயக்குநர்களை இயக்கியிருக்கிறார். எஸ்.ஜே சூர்யா, கௌதம் வாசுதேவ், சிங்கம்புலி, மனோ பாலா, சமுத்திரக்கனி ஆகியோர் இந்த ஐவர்.
7. டான் படத்தின் இயக்குநர் சிபிச் சக்கரவர்த்தி இயக்குநர் அட்லியின் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். தெறி, மெர்சல் என விஜய் நடித்த இரண்டு படங்களிலும் பணிபுரிந்திருக்கிறார் சிபிச் சக்கரவர்த்தி
8. காலேஜ் ஸ்டூடண்டாக சிவா நடித்தாலும் படம் காலேஜ் ஸ்டோரி அல்ல. பேமிலி ட்ராமா எனக் கூறுகிறார் இயக்குநர்.
9. 'டான்' படத்தின் பைலட் படத்தை மெர்சல் படத்தின்போது விஜய்க்கு காண்பித்திருக்கிறார் சிபிச் சக்கரவர்த்தி அதைப் பார்த்த விஜய் படத்தை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்.

10. 'குக் வித் கோமாளி', 'சூப்பர் சிங்கர்' என சின்னத்திரையில் கலக்கிய ஷிவாங்கி டான் படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகிறார். இவர் தவிர மிர்ச்சி விஜய், பால சரவணன், காளி வெங்கட் என ஒரு படையே படத்தில் நடித்திருக்கிறார்கள்.
ஆனந்த விகடன் இதழில் வெளியான டான் திரைப்படத்தின் இயக்குநரின் ப்ரத்யேக நேர்காணலைப் படிக்க க்ளிக் செய்யவும்