Published:Updated:

ஒரு ட்வீட்; உதவிய உதயநிதி; ரிலீசான மாநாடு! பின்னணி இதுதான்...

மாநாடு

இறுதியில் இன்று இரவு மாநாடு படத்தின் பிரச்னை தீர்ந்து விட்டது எனவும் படம் நாளை திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் பின்னணியில் என்ன நடந்தது எனத் திரைத்துறையினரிடம் பேசினோம். அவர்கள் கூறியதாவது,

Published:Updated:

ஒரு ட்வீட்; உதவிய உதயநிதி; ரிலீசான மாநாடு! பின்னணி இதுதான்...

இறுதியில் இன்று இரவு மாநாடு படத்தின் பிரச்னை தீர்ந்து விட்டது எனவும் படம் நாளை திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் பின்னணியில் என்ன நடந்தது எனத் திரைத்துறையினரிடம் பேசினோம். அவர்கள் கூறியதாவது,

மாநாடு

நடிகர் சிலம்பரசன் நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்த ‘மாநாடு’ திரைப்படம் பல பிரச்னைகளைக் கடந்து நாளை திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென இன்று மாலை படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ‘படம் நாளை ரிலீஸ் ஆகாது’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதையொட்டி ‘மாநாடு’ குறித்த பேச்சு திரைத்துறையினர் மத்தியில் எழ ஆரம்பித்தது. படம் வெளியாவதில் என்ன பிரச்னை என பல்வேறு தகவல்கள் வெளியாகின. இறுதியில் இன்று இரவு படத்தின் பிரச்னை தீர்ந்து விட்டது எனவும் படம் நாளை திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் பின்னணியில் என்ன நடந்தது எனத் திரைத்துறையினரிடம் பேசினோம். அவர்கள் கூறியதாவது,

மாநாடு
மாநாடு

``சிலம்பரசன் நடித்த `அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' என்ற படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார். அந்தப் படம் அவருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. அதன்பின், பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி ‘படப்பிடிப்புக்கு சிலம்பரசன் சரியாக வராததுதான் படத்தின் நஷ்டத்துக்குக் காரணம்’ எனக் குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சிலம்பரசன் கொடுக்க வேண்டும். அதுவரை வேறு படங்களில் அவர் நடிக்க தடைவிதிக்க வேண்டுமெனவும் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டார். நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். இதையொட்டி மைக்கேல் ராயப்பனுக்கும் சிலம்பரசன் தரப்பினருக்கும் வாக்குவாதங்கள் நடந்தவண்ணம் இருந்தன

சிலம்பரசன் தரப்பினருக்கும் வாக்குவாதங்கள் நடந்தவண்ணம் இருந்தன.

வழக்கமாக மைக்கேல் ராயப்பன் தரப்பால்தான் சிலம்பரசன் பட ரிலீஸில் சிக்கல் வரும். ஆனால், இம்முறை மைக்கேல் ராயப்பனை ‘மாநாடு’ பட தயாரிப்புத் தரப்பு முன்கூட்டியே சரிசெய்துவிட்டது.

‘மாநாடு’ படத்தின் தயாரிப்புக்கு பைனான்ஸ் செய்தவர்களில் முதன்மையானவர், உத்தம் சந்த். படத்தின் தயாரிப்பு செலவுக்காக ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவரிடம் வாங்கிய பணத்தை ரிலீசுக்கு முன்பு தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார். ஆனால் கடைசி நேரத்தில் நினைத்தபடி பிசினஸ் முடியாததால், அவரால் அந்தப் பணத்தை திரும்பச் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே தான் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. கடைசி நேரத்தில் வேறு வழியின்றி, ‘படம் வெளியாகாது’ என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

உதயநிதி
உதயநிதி

தயாரிப்பாளரின் இந்த ட்வீட்டைக் கண்டு திரையரங்க உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் அதிர்ச்சியடைந்தனர். படத்தின் தமிழ்நாடு தியேட்டரிக்கல் உரிமம் 11 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறித்த தேதியில் படம் ரிலீஸ் ஆகாவிட்டால் எல்லோருக்கும் பாதிப்பு ஏற்படும் என்று கவலைப்பட்டனர். எனவே, அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கியிருக்கின்றனர் திரைத்துறையினர் மற்றும் சிலம்பரசன் தரப்பு. சில முன்னணித் தயாரிப்பாளர்கள் முன்னிலையில் இதற்காக ரகசியப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

முன்னதாக, சோனி நிறுவனம் 10.5 கோடி ரூபாய்க்கு ‘மாநாடு’ படத்தின் டிஜிட்டல் உரிமத்தை வாங்கிக் கொள்வதாகக் கூறியிருந்தது. அதன்பேரில் பைனான்சியர் மதுரை அன்புச்செழியன் 10 கோடி ரூபாய் பணம் கடனாகக் கொடுத்து உதவியிருக்கிறார். மேலும் உதயநிதி ஸ்டாலின் தலையிட்டு சிம்புவுக்கு உதவும் விதமாக, படத்தின் ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் டிவிக்கு வாங்கி அதன்மூலம் ஆறு கோடி ரூபாய் பணத்தைக் கொடுக்க வைத்திருக்கிறார். மேலும், சிம்பு படம் பிரச்னை இல்லாமல் ரிலீஸ் ஆக வேண்டும் என்பதற்காக, அவர் தற்போது நடித்துவரும் `வெந்து தணிந்தது காடு' படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் 3 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார் . ‘என் மகன் படம் ரிலீஸ் ஆவது கௌரவப் பிரச்னை’ என்று சொல்லி, இன்னும் 3 கோடி ரூபாயை படத்திற்கு சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தர் தருவதாக ஒப்புக் கொண்டதால், கடன்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு படம் திட்டமிட்டபடி நாளை அதிகாலையே ரிலீஸாகிறது’’ என்றனர்.

‘மாநாடு’ ரிலீஸ் ஆகாததால் மதுரை உள்ளிட்ட சில பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட சிம்பு ரசிகர்கள், படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆவதைக் கேள்விப்பட்டு உற்சாகம் அடைந்தனர்.