தமிழ் சினிமாவின் சென்சேஷனல் நடிகை நயன்தாரா தன் காதலர் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவனை பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் சூழ இன்னும் கரம் பிடித்திருக்கிறார். இவர்களின் திருமணத்துக்கு தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் வருகை தந்து தங்களுடைய ஆசிர்வாதம் மற்றும் வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்கள்.
ரஜினி, விஜய் சேதுபதி, இயக்குநர் அட்லி, சிறுத்தை சிவா, ஹரி, கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்ட திருமணத்தில் பாலிவுட் ஆக்டர் ஷாருக் கான் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மேலும், அஜித்தின் குடும்பத்தினர் நயன் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இவர்களின் திருமணத்தை முன்னிட்டு சில ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட முக்கிய கோயில்களில் கல்யாண விருந்து வழங்க நட்சத்திர தம்பதிகள் சிலரை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்படி இன்று அந்தந்த் இடங்களில் கல்யாண சாப்பாடு வழங்கப்பட்டது. அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. அதில் பலரும் நயன்தாரா விகனேஷ் சிவனுக்கு தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்திருக்கின்றனர்.