Published:Updated:

``எம்.ஜி.ஆர் கொடுத்த முத்தம்; பெரியார் பற்றி கலைஞர் சொன்ன வார்த்தை" - சத்யராஜ் பேச்சு!

சத்யராஜ்

நிழல் ஹீரோக்களைப் பார்த்து விசில் அடிங்க, கை தட்டுங்க. ஆனால் நிஜ ஹீரோக்களைத்தான் நாம் போற்ற வேண்டும்.

``எம்.ஜி.ஆர் கொடுத்த முத்தம்; பெரியார் பற்றி கலைஞர் சொன்ன வார்த்தை" - சத்யராஜ் பேச்சு!

நிழல் ஹீரோக்களைப் பார்த்து விசில் அடிங்க, கை தட்டுங்க. ஆனால் நிஜ ஹீரோக்களைத்தான் நாம் போற்ற வேண்டும்.

Published:Updated:
சத்யராஜ்

நடிகர் சத்யராஜ் நடிப்பில் பிரபு திலக் தயாரிப்பில் இயக்குநர் தீரன் இயக்கியிருக்கும் படம் தீர்ப்புகள் விற்கப்படும். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அதில் நீதியரசர் சந்துரு, நடிகர் சத்யராஜ், நடிகர் சிபிராஜ், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், திலகவதி ஐ.பி.எஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ்,

" நிழல் ஹீரோக்களைப் பார்த்து விசில் அடிங்க, கை தட்டுங்க. ஆனால் நிஜ ஹீரோக்களைத்தான் நாம் போற்ற வேண்டும்.

டைரக்டர் தீரன் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னென்னா நம்ம நீதியரசர் சந்துரு அவர்களே சர்டிபிகேட் கொடுத்துட்டாங்க, "தீர்ப்புகள் விற்கப்படும்" டைட்டில் ஓக்கே. இது ஒரு நல்ல குடும்ப விழாவாக இருந்துச்சு.

கதை கேட்டேன் எனக்கு ரொம்ப புடிச்சது. ஆனால் இது சென்சார்ல மாட்டிக்குமான்னு ஒரு சிக்கல் தம்பி நக்கீரன் கோபால் வேற பூராத்தையும் சொல்லிட்டாரு. அதேமாதிரி பாரதிராஜாவோட "வேதம் புதிது" படத்துல நடிச்சேன். அதுல சீனெல்லாம் கட் பண்ணல. ரொம்பவும் பெருந்தன்மையா படத்தையே வெளியிடமுடியாதுன்னு சொல்லிட்டாங்க

இசை வெளியீட்டு விழா
இசை வெளியீட்டு விழா

அப்போ முதலமைச்சரா இருந்த எம்.ஜி.ஆர் பாரதிராஜா சார் கேக்குறதுக்கு முன்னாடியே, உங்க படத்துக்கு ஏதோ பிரச்சினையாமே நான் அதைப் பார்க்கணும்னு சொன்னாரு. ஏ.வி.எம். ஏ.சி தியேட்டர்ல அன்னைக்கு சாயங்காலமே படத்தைப் போடுறாங்க.

படம் ஆரம்பிச்சு இன்டர்வல் டைம்ல எம்.ஜி.ஆர்கிட்ட அண்ணே காபி, டீ எதாவது வேணுமாண்ணேன்னு கேட்டேன். ஷ்.... சைலன்ட் அப்டின்னாரு. பாத்தா அவரு தோட்டத்துல இருந்தே ரெடி பண்ணி கொண்டு வந்து நம்மல கவனிச்சுக்கிட்டாரு. படத்தைப் பாத்துட்டு அவருக்கு ரொம்ப பிடிச்சிருச்சு. உடனே கையப்புடிச்சு நாலஞ்சு முத்தம் கொடுத்தாரு. இதுல ஒரு பிரச்சனையும் இல்ல. போய் ரிலீஸ் டேட் அனவுன்ஸ் பண்ணு படம் ரிலீஸ் அப்படின்டாரு. அடுத்து "பெரியார்" படம். அதுல வசனம் எல்லாம் பெரியார் பேசுனதுதான். அதுக்குப் பெரிய ஆர்ப்பாட்டம். அப்போ சி.எம் கலைஞர் அய்யா. அவர்கிட்டப்போய் அய்யா படத்துக்கு பெரிய எதிர்ப்புன்னு சொன்னா அவரு "பெரியாரே எதிர்ப்புல வளர்தவர்தான அதெல்லாம் பாத்துக்கலாம்" அப்படின்டாரு. அந்தப் படத்தைக் காப்பபாத்திக் கொடுத்தவர் நீதியரசர் சந்துரு அய்யாதான் .

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சந்துரு
சந்துரு

அப்போ தீரன்கிட்ட சொன்னேன் கத்திமேல நடக்குறமாதிரி இருக்கே கொஞ்சம் பிசகுனாலும் வன்முறை ஆயிருமே இந்தக் கதைன்னு. ஆனால் சென்சார்ல நல்ல படியா இந்தப் படத்துக்கு சர்டிபிகேட் வந்துருச்சு. ஆனால் சென்சார்ல சர்டிபிகேட் வாங்கினாலும் பரவால்ல அதுக்கப்புறம் ஒரு சென்சார் வச்சிருக்காங்க. "ஜெய் பீம்" படத்துக்கு வந்தமாதிரி. இப்போ சமூகநீதி ஜெயிக்குற படம் ரொம்ப டிரெண்ட் ஆகுது. சினிமால பாருங்க அய்யா பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் படம் இருக்குது. அந்தப் படம் சூப்பர் ஹிட் ஆகுறதில்லையா. அம்பேத்கர் "கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்"ன்னு சொன்னாரு, அதை அழகா "ஜெய்பீம்" படத்தில சொல்லிருக்காங்க. " என்றார்