Published:Updated:

`புதுச்சேரிக்கு வருகிறார் நடிகை சன்னி லியோன்!’ – புத்தாண்டு கொண்டாடட்டத்தில் கலந்துகொள்கிறாரா?

சன்னி லியோன்!
News
சன்னி லியோன்!

அனைத்து ஹோட்டல்களிலும் புத்தாண்டு கொண்டாடட்த்திற்கு அனுமதி கொடுத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன்.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழ்நாட்டில் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக டிசம்பர் 31-ம் தேதியும், ஜனவரி 1-ம் தேதியும் அனைத்து கடற்கரையிலும் பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் புதுச்சேரி அரசு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 31-ம் தேதி இரவு கடற்கரை சாலையில் கலை நிகழ்சிகளை நடத்த இருப்பதாகவும், அனைத்து ஹோட்டல்களிலும் புத்தாண்டு கொண்டாடட்த்திற்கு அனுமதி கொடுத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன்.

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு

மேலும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் பழைய துறைமுக வளாகம், சீகல்ஸ் உணவகம், சுண்ணாம்பாறு படகு குழாம், பேரடைஸ் பீச் உள்ளிட்ட நான்கு இடங்களில் தனியார் பங்களிப்புடன் தேசிய அளவில் புகழ் பெற்ற 45 இசைக்குழுக்கள் கலந்து கொள்ளும் டி.ஜே இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் சுற்றுலாத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இசை நிகழ்ச்சிகளை புதுச்சேரியில் நடத்தவிருக்கும் கமர் ஃபிலிம் பேக்டரி நிறுவனத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் இதுகுறித்து பேசும்போது, “புதுச்சேரி மாநிலத்தில் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டை கொண்டாட அரசு முழு தளர்வு அனுமதி அளித்துள்ளது. அதைத்தொடர்ந்து புதுவை பழைய துறைமுகத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி மற்றும் கமர் ஃபிலிம் பேக்டரி சார்பில் வருகிற 30, 31 மற்றும் ஜனவரி 1 3 நாட்கள் லோலண்ட் டி.ஜே. இசை நிகழ்ச்சி நடக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் பிரபல ஹாலிவுட் நடிகை சன்னி லியோன் கலந்து கொள்ள உள்ளார். அந்த நிகழ்ச்சியில் வெளிநாட்டில் இருந்து 50-க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் கலந்துகொள்கிறார்கள். இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு தொடங்கி உள்ளது. நிகழ்ச்சியில் அரசின் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் பின்பற்றப்படும். கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தப்படாத பட்சத்தில் கொரோனா இல்லை என்பதற்கான சான்று அவசியமாகும்” என்றார்.