Published:Updated:

``தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே திரையரங்கில் அனுமதி! - சாத்தியமா? " - திருப்பூர் சுப்ரமணியம்

'' கடைவீதி, மார்க்கெட், தியேட்டர்னு இப்படி ஒவ்வொரு இடங்களுக்கு போகும் போதும் சர்டிபிகேட் வேணும்னா.. நீங்க வீட்டை விட்டு வெளியே வந்தாலே சர்ட்டிபிகேட் வேணும்னு சொல்றாங்க...''

தமிழக அரசு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதன் காரணமாக பொது இடங்களுக்கு செல்பவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் அதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் உள்ள பல தியேட்டர்களும் இதை அமல்படுத்த தொடங்கிவிட்டன. பல தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவின்போது தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றிதழ் கேட்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்ரமணியத்திடம் பேசினேன்.

``பொது இடங்களுக்குச் செல்பவர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்னு சுகாதாரத்துறையினர் சொல்லிட்டாங்களே தவிர, இது கடைபிடிக்க ரொம்ப சிரமமான விஷயம். ஏன்னா, கடைவீதி, மார்க்கெட், தியேட்டர்னு இப்படி ஒவ்வொரு இடங்களுக்கு போகும் போதும் சர்டிபிகேட் வேணும்னு கேட்டா நீங்க வீட்டை விட்டு வெளியே வந்தாலே சர்ட்டிபிகேட் வேணும்னு சொல்றாங்க.

திரையரங்குகள்
திரையரங்குகள்

அப்ப சர்டிபிகேட் இல்லாதவங்க வீட்லேயேதான் இருந்துக்கணுமானு கேள்வி வருது. எல்லா இடங்களுக்கும் சர்ட்டிபிகேட்டை எடுத்துட்டு போறது கண்டிப்பா சாத்தியமே இல்லை. நடைமுறைக்கும் சிரமமான காரியம் இது. இது பத்தி முதல்வரிக்கு கோரிக்கை மனு அனுப்பியிருக்கோம். சிலர் தடுப்பூசி போட பயப்படுறதா சொல்றாங்க. அப்படி உள்ளவங்க வீட்டை விட்டு வெளியே போனா, சர்ட்டிபிகேட்டை கேட்பாங்கனு பயந்து போய், வீட்டுக்குள்லேயே இருந்துடுவாங்க. இதனால திரையரங்கில் கூட்டம் வர்றது குறைஞ்சிடும் பாதிப்பும் இருக்கு. சுகாதாரத்துறை அறிவுறுத்தலை பரிசீலிக்கவும்னு வேண்டுகோள் வச்சிருக்கோம்.'' என்கிறார் திருப்பூர் சுப்ரமணியம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு