Published:Updated:

`தி லயன் கிங்' கதாபாத்திரங்களுக்குக் குரல்கள் கொடுப்பது இவர்கள்தான்!

டிஸ்னி தயாரிப்பில், ஜான் ஃபேவரூ இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம், `தி லயன் கிங்'. இப்படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் பின்னால் யார் யார் வேலை பார்த்திருக்கிறார்கள் என படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

The Lion King
The Lion King ( Disney )

குழந்தைகளுக்கு மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் பிடித்த படம், `தி லயன் கிங்'. `டிமோன் அண்ட் பும்பா' கார்டூனில் இடம்பெறும் சிங்கத்தை மையமாக வைத்து வெளிவரும் படம்தான் `தி லயன் கிங்'. ஜான் ஃபேவ்ரியு இயக்கும் இப்படம், வரும் ஜூலை 19-ம் தேதி வெளியாகிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான `தி லயன் கிங்' படத்தின் டிரெய்லர், யூடியூ-பில் இதுவரை 36 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. மேலும், இப்படத்தின் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய வெர்ஷன்களின் டிரெய்லர்களும் சமீபத்தில்தான் வெளியாயின. இதில் இடம்பெறும் சிம்பா, முஃபாஸா, நலா, ஸ்கார், டிமோன், பும்பா, சாரபி போன்ற சில முக்கியமான கதாபாத்திரங்களுக்குப் பின்னால் யார் வேலை பார்த்திருக்கிறார்கள், யார் யார் டப்பிங் பேசியிருக்கிறார்கள் என படக்குழுவினரால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஷாகதி, டொனால்ட் க்ளோவர், பாடகி பியான்ஸ் நோல்ஸ், ஆஸ்கர் நாயகி ஆல்ஃபர், செத் ரோகன், பில்லி எய்ச்னர் போன்ற முக்கிய நடிகர்கள் இதில் பணியாற்றியிருக்கின்றனர். மேலும், `பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்', `ஷெர்லாக் ஹோம்ஸ்', `இன்டெஸ்டெல்லார்', `இன்சப்ஷன்' போன்ற முக்கியமான படங்களுக்கு இசையமைத்த ஹான்ஸ் ஜிம்மர், இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

`தி லயன் கிங்' படத்தின் தயாரிப்பு நிறுவனமான வால்ட் டிஸ்னி, இதுபோன்ற படங்களில் அதீத கவனம் செலுத்தி வருகிறது. தொழில் நுட்பங்களும் அசுர வளர்ச்சி அடைந்துவிட்டதால் பல கோடி செலவில் தத்ரூபமான முறையில் இப்படத்துக்கு கிராஃபிக்ஸ் செய்யப்பட்டிருக்கிறது. தவிர, இதுபோன்ற ஹாலிவுட் படங்களுக்கெல்லாம் இந்திய சினிமாவிலும் சில விளம்பர உத்திகளையும் புரொமோஷன்களையும் கையாண்டு வருகின்றனர்.

இந்தி வெர்ஷனில் ஷாருக்கானும் அவரின் மகனான ஆர்யன் கானும் டப்பிங் பேசுகின்றனர். தமிழ் வெர்ஷனில் சித்தார்த், அரவிந்த் சுவாமி, ரோபோ சங்கர், ஐஷ்வர்யா ராஜேஷ் போன்றவர்களும், தெலுங்கில் நானியும் டப்பிங் பேசுகின்றனர்.

காரணம், ஹாலிவுட் படங்களுக்கென்றே இங்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. ஆங்கிலம் தவிர, தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது இப்படம். வரும் ஜூலை 19-ம் தேதி திரையரங்கிற்கு வெளிவர காத்திருக்கிறான் இந்த `லயன் கிங்'.