Published:Updated:

சிவகார்த்திகேயன் பேனரில் 'அருவி' பட இயக்குநரின் அடுத்த படம்!

Arun Prabhu Purushothaman - Sivakarthikeyan
News
Arun Prabhu Purushothaman - Sivakarthikeyan

'அருவி' படத்தைத் தொடர்ந்து அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கும் அடுத்த படத்திற்கு 'வாழ்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 'கனா', 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரிக்கிறார்.

'அருவி' படத்தைத் தொடர்ந்து அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கும் படம் 'வாழ்'. சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் டைட்டில் லுக்கும் இன்று வெளியாகியுள்ளது.

Vaazhl
Vaazhl
Arun Prabhu Purushothaman

'அருவி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானவர், அருண் பிரபு புருஷோத்தமன். அந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்த அதிதி பாலனுக்கும் அதுதான். வெளிவரும் முன் பல சர்ச்சைகள் அந்தப் படத்தின் மீது எழுந்தாலும் விமர்சன ரீதியாக பலரிடம் நல்ல பெயரைப் பெற்றது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அந்தப் படத்தைத் தொடர்ந்து அருண் பிரபு இயக்கும் படத்துக்கு 'வாழ்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 'கனா', 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரிக்கிறார். தனது டிவிட்டர் பக்கத்தில், "என் அப்பாவின் பிறந்தநாளான இன்று 'வாழ்' படத்தின் டைட்டிலையும் போஸ்டரையும் வெளியிடுவதில் பெருமைகொள்கிறேன். அது மட்டுமல்லாது என் தம்பியான அருண் பிரபு புரோஷத்தமன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். என்னுடைய முந்தைய படங்களைப் போலவே இந்தப் படத்துக்கும் வரவேற்பு கொடுப்பீர்கள் என நம்புகிறேன்" என்று சிலாகித்து 'வாழ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கைப் பகிர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன்.