Published:Updated:

சொந்தத் தயாரிப்பு; போலீஸ் கதாபாத்திரம்! - அருண் விஜய் அப்டேட்

`குற்றம் 23' படத்திற்குப் பிறகு, மீண்டும் போலீஸாக நடிக்கிறார், அருண் விஜய்.

அருண் விஜய்
அருண் விஜய்

`தடம்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அருண் விஜய் பிரபாஸுடன் நடித்த `சாஹோ' படம் வெளியானது. ஆனால், இந்தப் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. லைகா தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் `மாஃபியா' என்ற கேங்ஸ்டர் படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார், அருண் விஜய். இதில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் விவேக் இயக்கத்தில் உருவாகும் `பாக்ஸர்' படத்தில் குத்துச் சண்டை வீரராக நடித்துள்ளார். தவிர, விஜய் ஆண்டனியுடன் இவர் நடித்து முடித்த `அக்னி சிறகுகள்' படமும் திரைக்கு வரத் தயாராக இருக்கிறது.

அருண் விஜய்
அருண் விஜய்

இந்நிலையில், தனது அப்பா விஜயகுமார் தொடங்கியுள்ள `எ மூவிங் ஸ்லைட்ஸ்' எனும் தயாரிப்பு நிறுவனத்திற்காக ஒரு படம் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை `நினைத்தாலே இனிக்கும்', `யுவன் யுவதி', `ஹரிதாஸ்', `வாகா' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜி.என்.ஆர்.குமாரவேல் இயக்குகிறார்.

`குற்றம் 23' படத்திற்குப் பிறகு, அருண் விஜய் இந்தப் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். `சகா', `நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த சபீர் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். அடுத்த மாதம் இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.